திரைத் துளி­கள்

 திரையுலக வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் தாம் ரசிப்பதாகச் சொல்கிறார் மாளவிகா மோகனன்.

தென்னிந்திய மொழிப் படங்களில் பணியாற்று வதற்குத்தான் தாம் முன்னு ரிமை அளிப்பதாகவும் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

மாளவிகா நடித்துள்ள 'பியாண்ட் த கிளவுட்ஸ்' என்ற இந்திப் படம் நேரடியாக இணையத்தில் வெளியாகியுள்ளது. இதையடுத்து இந்தியில் 'யுத்ரா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இனி இந்திக்குதான் முக்கியத்துவம் அளிப்பீர்களா என்று ரசிகர்கள் கேட்கிறார்களாம்.

"அப்படியெல்லாம் முடிவு எடுக்கவில்லை. இப்போது தனுஷின் 'மாறன்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். பல்வேறு மொழிகளில் நடிக்கும்போது பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்க முடிகிறது.

"ஒரு திரைப்பட நடிகையாக எனது பயணம் சிறப்பாக இருக்கிறது என்பேன். படப்பிடிப்புக்காக தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தில் இருந்து போர்ச்சுகலின் அழகான தீவுவரை சென்று வருவது இனிமையான அனுபவங்களைத் தருகின்றன. இதுபோன்ற ஒரு வாழ்வு திரையுலக கலைஞர்களுக்கு மட்டுமே வாய்க்கும்," என்கிறார் மாளவிகா மோகனன்.

 கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளனர்.

கொரோனா நெருக்கடி தீவிரமடைவதற்கு முன்பே இந்தப் படம் வெளியாகி இருக்க வேண்டும். எனினும் பல்வேறு பிரச்சினைகளால் படத்தை உரிய நேரத்தில் முடிக்க இயலவில்லை. பல்வேறு கட்டங்களாக படப்பிடிப்பை முடித்துவிட்டு பார்த்தபோது, எடுக்கப்பட்ட காட்சிகள் சுமார் நான்கரை மணி நேரம் இருந்தனவாம்.

இதையடுத்து இரு பாகங்களாக இப்படத்தை வெளியிடலாம் என கவுதம் மேனன் முடிவு செய்துள்ளார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தில் ரிது வர்மா, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், சரத்குமார், பார்த்திபன் உட்பட பலர் நடித்துள்ளனர். அடுத்த சில தினங்களில் விக்ரம் பின்னணிக் குரல் பதிவில் பங்கேற்க இருப்பதாகத் தகவல்.

 சமூக வலைத்தளம் மூலம் நடிகை சமந்தாவுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அண்மையில்

தெலுங்குப்படப் படப்பிடிப்பு தளத்தில் ஒரு சிறுமி கீர்த்தியை சந்திக்க வந்துள்ளார். அந்தச் சிறுமியுடன் பேசிக்கொண்டிருந்த போது, "எதிர்காலத்தில் யாரைப் போல் ஆக விருப்பம்?" என்று கேட்டாராம். அதற்கு அச்சிறுமி 'சமந்தாவைப் போல் வர வேண்டும்' என்று கூறியுள்ளார். இதை காணொளியாகப் பதிவு செய்து தமது சமூக வலைத் தளத்தில் வெளியிட்டு, வேண்டுகோளையும் குறிப்பிட்டுள்ளார் கீர்த்தி. "சமந்தா, உங்களுடைய தீவிர ரசிகை ஒருவர் என்னுடன் இருக்கிறார். அவரை ஒருமுறையேனும் நீங்கள் சந்திக்க வேண்டும்," என்பதுதான் கீர்த்தியின் வேண்டுகோள். அதைக் கண்ட சமந்தா, "யார் இந்த அழகான குட்டி?" என்று கேட்டுள்ளார்.

 திரையுலகில் தம்முடன் நட்புடன் பழகும் இயக்குநர்க ளிடம் தமக்கு வாய்ப்பு அளிக்குமாறு செல்லமாகச் சண்டை போடுவாராம் நடிகை ஜனனி. அவ்வாறு செல்லச் சண்டையிட்டு,

'கூர்மன்' என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!