திரைத் துளி­கள்

 இயக்குநர் சங்கரின் மகள் அதிதி முறைப்படி சங்கீதம் பயின்றவர். எதிர்காலத்தில் பாடகியாக வேண்டும் என்ற ஆசை உள்ளவர். தற்போது கார்த்தியுடன் 'விருமன்' படத்தில் நடித்து வருபவர், அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்க இருப்பதாகவும் அது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தெலுங்கில் தயாராகும் 'கானி' என்ற படத்தில் 'ரோமியோ ஜூலியட்' என்று தொடங்கும் பாடலைப் பாடியுள்ளார் அதிதி. தமன் இசையமைத்துள்ளார். தமனை 'பாய்ஸ்' படம் மூலம் நடிகராக்கினார் சங்கர். இன்று சங்கர் மகளை தனது இசையில் பாட வைத்துள்ளார் தமன்.

 விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'எஃப்.ஐ.ஆர்'. இப்படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான்.

இப்படக்குழுவினர் அண்மையில் செய்தி யாளர்களைச் சந்தித்தனர். அப்போது 'எஃப்.ஐ.ஆர்' படம் பெருந்தொகைக்கு வியா பாரமாகி உள்ளதாக விஷ்ணு விஷால் குறிப்பிட்டார்.

"இதற்கு முன்பு 'ராட்சசன்' படம் எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையைக் கொடுத்தது. அதேபோல் இந்தப் படமும் எனக்கு ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றுத் தரும். நான் எதிர்பார்த்ததைவிட அதிக தொகைக்கு வெளியீட்டு உரிமை விற்பனையாகி உள்ளது. இதுவரை 250 பேர் இப்படத்தைப் பார்த்துள்ளனர். அனைவரும் படம் வெற்றி பெறும் என்று மட்டுமே கூறியுள்ளனர். ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிடுவதால் படம் பெருவாரியான ரசிகர்களையும் திரையரங்குகளையும் சென்றடையும் என நம்பலாம்," என்கிறார் விஷ்ணு விஷால்.

 நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார் நடிகை அமலா.

'கணம்' என்ற அந்தப் படத்தில் அம்மா வேடத்தில் நடித்திருப்பதைப் பெருமை யாகக் கருதுவதாக அவர் கூறியுள்ளார்.

படத்தில் தாய்ப் பாசத்தை சித்திரிக்கும் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளதாம். இந்தப் பாடல் மூலம் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயும் பாடகர் சித் ஸ்ரீராமும் ஒரு மாயாஜாலம் புரிந்துள்ளதாகப் பாராட்டுகிறார் அமலா.

"தாய்க்கும் மகனுக்கும் இடையிலான அன்பு என்றும் அழியாது என்பதை விவரிக்க இப்பாடல் உருவாக்கப்பட்டது. ரசிகர்கள் இந்த முயற்சிக்கு அளித்துள்ள ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது. முதன் முறையாக அந்தப் பாடலைக் கேட்டபோது இதமாக, மென்மையாக இருந்தது. ஒரு குழந்தைக்குத் தாயாக நடித்ததைப் பெருமையாக கருதுகிறேன். நிஜ வாழ்க்கையிலும் நான் ஒரு தாய். அந்த நிலையை விலைமதிப்பற்ற பெரும் சொத்தாகக் கருதுகிறேன்," என்கிறார் அமலா.

 இயக்குநர் மிஷ்கின் இசையமைப்பாளராக அவதாரம் எடுக்கப்போகிறார். தனது இளைய சகோதரர் இயக்கி வரும் படத்துக்கு இசையமைக்கப் போகிறாராம். இன்னும் தலைப்பிடப்படாத அந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தன் சகோதரர் கேட்டுக் கொண்டதால் இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளார் மிஷ்கின். இவர் இயக்கி முடித்துள்ள 'பிசாசு 2' படம் விரைவில் திரைகாண உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!