அமிதாப் நடிக்கும் நேரடித் தமிழ்ப் படம்

இந்தி நடி­கர் அமி­தாப் பச்­சன் நேர­டித் தமிழ்ப் படத்­தில் நடித்­த­தில்லை.

இந்­நி­லை­யில் இயக்­கு­நர் எஸ்.ஜே.சூர்­யா­வும் அவ­ரும் ஒரு படத்­தில் தந்தை, மக­னாக நடிக்க உள்­ள­னர் என்­றும் படத்­துக்கு 'உயர்ந்த மனி­தன்' எனத் தலைப்பு வைக்­கப்­பட்­டுள்­ள­தாகவும் மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் அறி­விக்­கப்­பட்­டது. தமிழ்­வா­ணன் என்­ப­வர் படத்தை இயக்­கு­வ­தா­க­வும் கூறப்­பட்­டது.

இந்­நி­லை­யில், இயக்­கு­ந­ருக்­கும் அமி­தாப்­புக்­கும் இடையே கருத்து வேறு­பாடு ஏற்­பட்­ட­தா­க­வும் அத­னால் அவர் படப்­பி­டிப்­பில் கலந்து­கொள்ள மறுத்­து­விட்­ட­தா­க­வும் ஒரு தக­வல் வெளி­யா­னது.

பின்­னர், கால்­ஷீட், சம்­ப­ளம் தொடர்­பாக தயா­ரிப்­புத் தரப்பு மீது அமி­தாப் வருத்­தத்­தில் இருப்­ப­தா­க­வும் பேசப்­பட்­டது.

இது தொடர்­பாக விளக்­கம் அளித்த எஸ்.ஜே.சூர்யா, மிக விரை­வில் அமி­தாப்­பு­டன் பேசி, அவரை சமா­தா­னப்­ப­டுத்தி, படத்­தில் நடிக்க வைக்­கப்போவ­தா­கக் கூறி­யி­ருந்­தார். கொரோனா நெருக்­கடி குறைந்­துள்ள இவ்­வே­ளை­யில், தாம் முன்பு சொன்­னதை நிறை­வேற்றி உள்­ளார் எஸ்.ஜே.சூர்யா.

படத்­தின் தயா­ரிப்­பா­ளர் மாறி­விட்­ட­தா­க­வும் இது­கு­றித்து அமி­தாப்­பு­டன் கலந்து பேசி­ய­போது, அவர் 'உயர்ந்த மனி­தன்' படத்­தில் தொடர்ந்து நடிக்க சம்­ம­தித்து இருப்­ப­தா­க­வும் எஸ்.ஜே.சூர்யா தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!