‘வலிமை’ இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு

வெளி­யீட்­டுத் தேதி அறி­விக்­கப்­பட்­டதை அடுத்து, 'வலிமை' படம் குறித்து நாள்­தோ­றும் ஏதா­வது புதுத்­த­க­வல்­கள் வெளி­வந்த வண்­ணம் உள்­ளன. இத­னால் அஜித் ரசி­கர்­கள் உற்­சா­கம் அடைந்­துள்­ளனர்.

இந்­நி­லை­யில், 'வலிமை' படத்­தின் முதல் காட்­சி­யில் தொடங்கி இறு­திக்­கட்­டம் வரை அனைத்­தும் விறு­வி­றுப்­பாக இருக்­கும் என அதன் தயா­ரிப்­பா­ளர் போனி கபூர் தெரி­வித்­துள்­ளார்.

அவர் தயா­ரிக்­கும் படம் என்­பதால் வட இந்­திய ஊட­கங்­களும் 'வலிமை' படத்­தின் மீது கவ­னம் செலுத்தி வரு­கின்­றன.

அண்­மைய பேட்டி ஒன்­றில், இப்­ப­டத்­தில் வில்­ல­னும் அஜித்­தும் மோதிக்­கொள்­ளும் காட்­சி­கள் பர­பரப்­பாக இருக்­கும் என போனி கபூர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"இது­போன்ற விறு­வி­றுப்­பான மோதலை மற்ற படங்­களில் பார்த்தி­ருக்க முடி­யாது. ஒவ்­வொரு காட்சி­யும் ரசி­கர்­களை இருக்கை நுனியில் அமர வைக்­கும்.

"இந்­தக் கதையை வைத்து அடுத்­த­டுத்த பாகங்­களை உரு வாக்­க­லாம். அந்­த­ள­வுக்கு வலு­வான விறு­வி­றுப்­பான திரைக்­கதை அமைக்­கப்­பட்­டுள்­ளது," என போனி கபூர் தெரி­வித்­துள்­ளார்.

'வலிமை'யின் அடுத்த பாகங்­கள் உரு­வாக வாய்ப்­புள்­ள­தால் அஜித் ரசி­கர்­கள் இத்­த­க­வலை சமூக ஊடகங்­களில் பரவ லாகப் பகிர்ந்து வரு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!