ஒரே பாடல், ஒரே நாள், 20 மில்லியன் பார்வைகள்

'பீஸ்ட்' படத்­தின் ஒற்­றைப் பாட­லுக்கு அமோக வர­வேற்பு கிடைத்­துள்­ளது. பாடலை இணை­யத்­தில் வெளி­யிட்ட சில நிமி­டங்­களில் லட்சக்­க­ணக்­கா­னோர் அதைப் பார்த்து ரசித்­துள்­ள­னர்.

விஜய் நடிப்­பில் உரு­வாகி வரும் 'பீஸ்ட்' படத்தை நெல்­சன் திலீப்­குமார் இயக்­கு­கி­றார். காத­லர் தினத்தை­யொட்டி நேற்று முன்தினம் மாலை இப்­ப­டத்­தில் இடம்­பெ­றும் 'அர­பிக்­குத்து' என்ற பாட­லின் காணொளி சமூக ஊட­கங்­களில் வெளி­யி­டப்­பட்­டது.

இப்­பா­டலை சிவ­கார்த்­தி­கே­யன் எழுத, அனி­ருத் இசை­ய­மைக்க, அவ­ரு­டன் சேர்ந்து ஜோனிட்டா காந்தி பாடி­யுள்­ளார். பாடல் வெளி­யான ஒரு மணி நேரத்­துக்­குள் மூன்று மில்­லி­யன் பேர் பார்­வை­யிட்­டுள்­ள­னர். பின்னர், நாளின் முடிவுக்குள் இருபது மில்லியன் பேர் அப்பாடலை பார்த்து ரசித்ததாக சமூக ஊடகங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

மிக விரை­வில் இப்­ப­டத்­தின் முன்­னோட்ட காட்­சித் தொகுப்பு வெளி­யா­கும் என எதிர்­பார்க்­கப்­படு­கிறது. இதில் விஜய் ஜோடி­யாக பூஜா ஹெக்­டே­வும் யோகி­பாபு, செல்­வ­ரா­க­வன் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­க­ளி­லும் நடித்­துள்­ள­னர்.

இதில் செல்­வ­ரா­க­வ­ன் இணைய ஊடு­ருவி கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்­ளார்.

தொடக்­கத்­தில் விஜய்க்கு எதி­ரா­கச் செயல்­ப­டு­ப­வர், போகப்­போக அவ­ருக்கு ஆத­ர­வாக மாறு­வது போல் செல்­வா­வின் கதா­பாத்­தி­ரம் அமைக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தக­வல்.

படத்­தின் இறு­திக்கட்­டத்­தில்­தான் நாய­க­னும் வில்­ல­னும் நேரடி­யாக மோது­கி­றார்­கள். அதற்கு முன்பு வில்­லனை விஜய் அணுகு­வ­தற்கு செல்­வ­ரா­க­னின் கதா­பாத்­தி­ரம்­தான் உத­வு­மாம்.

இந்­தி­யா­வின் எல்­லைப் பகு­தி­யில் உள்ள நில­வ­ரத்­தை­யும் இந்­தப் படத்­தில் காட்­டப் போவ­தா­கத் தக­வல்.

ஒற்­றைப் பாட­லுக்கு கிடைத்­துள்ள இந்த அமோக வர­வேற்பு விஜய், 'பீஸ்ட்' படக்­கு­ழு­வி­ன­ருக்கு மட்­டு­மல்­லா­மல் அதற்கு இசை­அமைத்த அனி­ருத், பாடிய சிவ­கார்த்­தி­கே­ய­னுக்­கும் மிகுந்த உற்­சா­கம் அளித்­துள்­ளது. 'பீஸ்ட்' விரைவில் வெளியாக உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!