விமல்: தமிழ் ரசிகர்களை ஏமாற்ற மாட்டோம்

பிர­சாத் பாண்­டி­ய­ராஜ் இயக்­கத்­தில் உரு­வாகி உள்­ளது 'விலங்கு' இணை­யத் தொடர். இதில் விமல் நாய­க­னா­க­வும் இனியா நாய­கி­யா­க­வும் நடித்­துள்­ள­னர்.

மேலும், முனீஸ்­காந்த், பால சரவணன், ஆர்.என்.ஆர். மனோ­கர் போன்ற பல முன்­னணி நடி­கர்­களும் உள்­ள­னர். முன்­னணி ஓடிடி தளத்­தில் இத்­தொ­டர் வெளி­யீடு கண்டுள்­ளது.

இந்­நி­லை­யில் 'விலங்கு' தொடர் குழுவி­னர் சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­த­னர்.

அப்­போது இந்­தக் கதையை முத­லில் திரைப்­ப­ட­மாக உரு­வாக்க நினைத்­த­தா­க­வும் பின்­னர் அந்த எண்­ணத்தை மாற்­றிக்கொண்­ட­தா­க­வும் குறிப்­பிட்­டார் விமல்.

"இயக்­கு­நர் கதையை விவ­ரித்­த­போது இணை­யத்­தொ­ட­ராக எடுத்­தால் நன்­றாக இருக்­கும் என்று தோன்­றி­யது. என்­னைப் போன்றே மற்­ற­வர்­களும் இப்­ப­டித்­தான் கருதி­ உள்­ள­னர்.

"நான் கதா­நா­ய­க­னாக நடிக்க வேண்­டி­ய­வன். எனி­னும் வாய்ப்­பு­கள் இல்­லா­மல் வீட்­டில் இருந்­தேன். அதே­போல் இந்­தத் தொட­ரின் தயா­ரிப்­பா­ள­ரும் படம் எடுக்கமுடி­யாத நிலை­யில் இருந்­தார்.

"இயக்­கு­நர் பிர­சாத் பாண்­டி­ய­ராஜ் ஒரு தோல்­விப் படத்­தைக் கொடுத்­த­தன் கார­ண­மாக அமைதி­யாக இருந்த வேளை­யில், மூன்று பேரும் இணைந்து செயல்­பட முடிவு செய்­தோம். எங்கள் அனுபவத்தை நம்பி களமிறங்கினோம்.

"இந்­தத் தொட­ரின் மூலம் பால சர­வ­ணன் என்ற தம்பி கிடைத்­துள்­ளார். இனி­மேல் கதை­க­ளைத் தேர்வு செய்­வ­தில் கவ­ன­மாக இருப்­பேன். 'விலங்கு' இணை­யத்­தொ­டர் மூலம் தமிழ் சினி­மா­வில் எனது அடுத்த சுற்று வெற்­றி­க­ர­மாக தொடங்­கும் என்ற நம்­பிக்கை உள்­ளது. நிச்­ச­யம் உங்­களை ஏமாற்­ற­மாட்­டோம்," என்­றார் விமல்.

, :

  

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!