பழம்பெரும் நடிகை லலிதா காலமானார்

பழம்­பெ­ரும் மலை­யாள நடிகை லலிதா உடல்­ந­லக்­கு­றை­வால் கொச்­சி­யில் கால­மா­னார். அவருக்கு வயது 73.

மலை­யா­ளத்­தில் மட்­டு­மல்­லா­மல் ஏரா­ள­மான தமிழ்ப் படங்­களி­லும் அவர் நடித்­துள்­ளார். அண்­மைக்­கா­ல­மாக உடல்­ந­லக்­கு­றை­வால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தார் லலிதா.

கடந்த 1969ம் ஆண்டு கே.எஸ் சேது மாத­வன் இயக்­கத்­தில் வெளி­யான 'கூட்­டுக்­குடும்­பம்' படத்­தின் மூலம் திரை­உ­ல­கில் அறி­மு­க­மான இவர், மலை­யா­ளம், தமிழ் என மொத்தம் 550க்கும் மேற்­பட்ட படங்­களில் நடித்­துள்­ளார்.

தமி­ழில் 'காத­லுக்கு மரி­யாதை', 'பர­ம­சி­வன்', 'கிரீ­டம்', 'அலை­பா­யுதே', 'மாம­னி­தன்', 'காற்று வெளி­யிடை' உள்­ளிட்ட பல படங்­களில் லலி­தாவை நல்ல கதா­பாத்­தி­ரங்­களில் காண முடி­யும். பிர­பல இயக்­கு­நர் பர­தனை திரு­ம­ணம் செய்து கொண்ட லலிதா, இரண்டு முறை சிறந்த துணை நடி­க­ருக்­கான தேசிய விரு­தை­யும் நான்கு முறை கேரள அர­சின் மாநில விரு­து­க­ளை­யும் பெற்­றுள்­ளார்.

கேரள அரசு திரை­யு­ல­கத்­திற்கு இவர் அளித்த பங்­க­ளிப்பை கௌர­விக்­கும் வகை­யில் கடந்த 2016ம் ஆண்டு 'கேரள சங்­கீத நாடக அகா­டமி'யின் தலை­வ­ராக நிய­மித்­தது.

கடந்த ஆண்டு நவம்­பர் மாதம் லலி­தா­வின் உடல்­ந­லம் பாதிக்­கப்­பட்­டது. இதை­ய­டுத்து தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டார்.

அண்­மை­யில் உடல்­ந­லம் தேறி­யதை அடுத்து தன் மகன் வீட்­டில் தங்கி ஓய்­வெ­டுத்து வந்­தார். இந்­நி­லை­யில் நேற்று முன்­தி­னம் அவர் திடீ­ரென கால­மா­னார்.

நடிகை லலி­தா­வின் மறை­வுக்கு மலை­யாள திரை­யு­ல­கத்­தி­னர் இரங்­கல் தெரி­வித்து வரு­கின்­ற­னர். முன்­னணி நடி­கர்­க­ளான மம்­முட்டி, மோகன்­லால்ஆகி­யோர் லலி­தா­வின் மர­ணம் அதிர்ச்சி அளிப்­ப­தா­க­வும் அவ­ரது கலைச்­சேவை என்றும் நினை­வுகூ­ரப்­படும் என கூறி­யுள்­ள­னர். மறைந்த லலிதாவின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நேற்று நடைபெற்றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!