‘இது நெகிழ வைக்கும் அன்பு’

ஒரே பாடல் மூலம் தமி­ழ­கத்­தின் பட்டி தொட்­டி­யெங்­கும் புகழ்­பெற்­று­விட்­டார் இளம் பாடகி ஜோனிதா காந்தி. விஜய் நடிப்­பில் உரு­வாகி உள்ள 'பீஸ்ட்' படத்தில் இடம்­பெற்­றுள்ள 'அர­பிக் குதிரை' பாடலைப் பாடி­ய­வர். அண்­மை­யில் இணை­யத்­தில் வெளி­யான இந்தப் பாடலை கோடிக்­க­ணக்­கா­னோர் பார்த்து ரசித்­துள்ளனர்.

பிற­கென்ன.... ஜோனி­தாவை விஜய் ரசி­கர்­கள் கொண்­டா­டு­கி­றார்­கள். அவர் இதற்கு முன்பு பாடிய பாடல்­க­ளை­யும் ரசி­கர்­கள் கேட்டு ரசித்து வரு­கிறார்­கள். இந்­நி­லை­யில் 'அர­பிக்­குத்து' பாடல் குறித்­தும் அது தொடர்­பான அனு­ப­வங்­க­ளை­யும் பேட்டி ஒன்றில் பகிர்ந்­துள்­ளார் ஜோனிதா.

இந்­தப் பாடல் இணை­யத்­தில் வெளி­யி­டப்­பட்­ட­தும், நாள் முழு­வ­தும் இவ­ரது கைபேசி ஒலித்­த­வண்ணம் இருந்­த­தாம். சமூக ஊடங்­களில் இந்­தப் பாடலை மையப்­ப­டுத்தி வெளி­யி­டப்­பட்ட 'மீம்ஸ்'களை கண்டு ரசித்­த­தா­கச் சொல்­கி­றார்.

"இதற்கு முன்பு இவ்­வ­ளவு புதிய மீம்ஸ்­களை ஒட்­டு­மொத்­த­மா­கப் பார்த்­ததே கிடை­யாது. அனைத்தி­லும் நான் இருந்­தேன் என்­பது மற்­றொரு ஆச்­ச­ரியம். எல்­லாம் கண்­மூ­டித் திறப்­ப­தற்­குள் நடந்­து­விட்­டது போல் இருந்­தது.

"இதற்கு கதா­நா­ய­கன் விஜய்­யும் இசை­ய­மைப்­பா­ளர் அனி­ருத்­தும்­தான் கார­ணம். அவர்­க­ளு­டன் இணைந்து பணி­யாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்­தது என் அதிர்­ஷ்­டம்," என்­கி­றார் ஜோனிதா.

ஜோனி­தா­வுக்கு தமி­ழில் சர­ள­மா­கப் பேச­ வ­ராது என்­ப­தால் அனி­ருத்­தும் 'பீஸ்ட்' படக்­கு­ழு­வி­ன­ரும்­தான் இவ­ருக்கு பயிற்சி அளித்­துள்­ள­னர். அதி­லும் அனி­ருத் பாடல் வரி­களில் உள்ள ஒவ்­வொரு வார்த்தைக்­கான அர்த்­தத்தை விளக்­கி­னா­ராம்.

"கடந்த சில ஆண்­டு­க­ளாக தமி­ழில் பாடி வரு­கி­றேன். அத­னால் பாட­லில் இடம்­பெற்­றுள்ள வார்த்தை­க­ளுக்­கான சரி­யான உச்­ச­ரிப்பை மிக வேக­மாக கற்­றுக்­கொள்ள முடி­கிறது. மேலும், அவற்­றின் அர்த்­தத்துக்கு ஏற்ப உச்­ச­ரிக்­க­வும் முடி­கிறது.

"சில சம­யங்­களில் பாட­லுக்­கான மெட்டு முன்­கூட்­டியே என்­னி­டம் அளிக்­கப்­படும். அப்­போது வீட்டி­லேயே பயிற்சி மேற்­கொண்டு, அதன் பிறகு ஒலிப்­பதி­வுக்­கூ­டம் செல்­வேன். அத­னால் பாடல் பதிவு விரை­வாக முடிந்­து­வி­டும்.

"ஆனால் எப்­போ­துமே இது­போல் நடக்க வாய்ப்­பில்லை. சில சம­யங்­களில் ஒலிப்­ப­திவு கூடத்­துக்­குச் சென்­ற­பி­ற­கு­தான் பாடல் வரி­கள் கிடைக்­கும். அப்­போது சில வார்த்­தை­களை மாற்­றி­ய­மைக்­க­வும் வாய்ப்­புண்டு," என்று சொல்­லும் ஜோனிதா கனடா­வில் பிறந்து வளந்­த­வர்.

அத­னால் இந்­திய மொழி­களை இப்­போ­து­தான் மெல்ல கற்று வரு­கி­றார். அதே­ச­ம­யம், தாம் பாடும் பாடல்­களில் எந்­த­வொரு குறிப்­பிட்ட மொழி­யின் சாய­லும் இருக்­காது என்­கி­றார். அர­பிக்­குத்து பாட­லுக்­கான விளம்­ப­ரங்­களில் ஜோனி­தா­வும் இடம்­பெற்­றுள்­ளார். இதை அவர் சற்­றும் எதிர்­பார்க்­க­வில்­லை­யாம்.

"உண்­மை­யில் ரசி­கர்­க­ளின் ஆத­ர­வும் படக்­கு­ழு­வி­ன­ரின் அன்­பும் என்னை நெகிழ வைத்­துள்­ளது. இந்த அளவு பெருந்­தன்­மை­யான செயல்­பாட்டை நான் எதிர்­பார்க்­க­வில்லை.

"இந்­தப் பாட­லுக்­காக அதி­கம் உழைத்­துள்­ளோம். இந்­நி­லை­யில் அதைப் பிர­ப­லப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை நானே மேற்­கொள்­ளும் வாய்ப்பு அளிக்­கப்­பட்­டது மன­நி­றைவு அளிக்­கிறது.

"ரசி­கர்­க­ளுக்கு இந்­தப் பாடல் பிடித்­தி­ருக்­கிறது என்­ப­து­தான் எனக்கு முக்­கி­ய­மா­கப்­ப­டு­கிறது," என்று சொல்­லும் ஜோனிதா திரைப்­ப­டங்­களில் நடிப்­ப­தி­லும் ஆர்­வம் கொண்­டுள்­ளார். ஏற்­கெ­னவே ஓர் ஆங்­கி­லப் படத்­தில் நடித்து முடித்­துள்­ளா­ராம்.

"தொடர்ந்து படங்­களில் நடிப்­பீர்­களா என்ற கேள்­விக்கு உண்­மை­யில் என்­னி­டம் பதில் இல்லை. வாய்ப்­பு­கள் கிடைத்­தால் நடிப்பை தொட­ர­லாம் என்­ப­து­தான் என் எண்­ணம்," என்­கி­றார் ஜோனிதா காந்தி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!