‘நான் மும்பை சிரிப்பழகி’

ஒரே ஆண்­டில் ஆயி­ரம் புது நாய­கி­கள் தேவை என்­றா­லும் வட இந்­தி­யா­வில் இருந்து அழைத்து வர கோடம்­பாக்­கத்து இயக்­கு­நர்­களும் தயா­ரிப்­பா­ளர்­களும் தயார். அந்த வகை­யில், புது வர­வாக 'காதல் - கண்­டி­ஷன்ஸ் அப்ளை' என்ற படத்­தின் மூலம் தமி­ழில் அறி­மு­க­மா­கி­றார் சானா மக்­பூல்.

இரு­பத்து ஏழு வய­தான இவர், பிறந்து வளர்ந்­தது எல்­லாம் மும்­பை­யில் தானாம். கடந்த 2012ஆம் ஆண்டு நடை­பெற்ற 'ஃபெமினா' அழ­கிப்­போட்­டி­யில் இந்­திய அள­வில் சிறந்த சிரிப்­ப­ழ­கி­யாக தேர்வு பெற்­றார்.

அதன் பிறகு ஏரா­ள­மான விளம்­ப­ரங்­களில் நடித்து, 'மாட­லிங்' நிகழ்ச்­சி­க­ளி­லும் பங்­கேற்­றுள்­ளார். வழக்­கம்­போல் இவரை முதல் திரைப்­ப­டத்­தில் நடிக்க வைத்த பெருமை தெலுங்கு தேசத்­துக்கு கிடைத்­தது.

தெலுங்­கில் வெளி­யான 'திக்­குலு சூடக்கு ராமைய்யா' படத்­தில் நாய­கி­யாக நடித்த பின்­னர், தொலைக்­காட்சி 'ரியா­லிட்டி' நிகழ்ச்­சி­யில் பங்­கேற்ற கையோடு சானா மக்­பூலை தமி­ழுக்கு அழைத்து வந்து புண்­ணி­யம் தேடிக்­கொண்­டார் இயக்­கு­நர் ராஜ்­கு­மார் பெரி­ய­சாமி.

கௌதம் கார்த்­திக் நாய­க­னாக நடித்த இந்­தப் படம் வசூல் ரீதி­யில் ஓர­ளவு சாதித்­தது என்­கி­றார்­கள். ஆனால் சானா மக்­பூ­லுக்கு அவர் எதிர்­பார்த்த வாய்ப்­பு­கள் தமி­ழில் அமை­ய­வில்லை. இந்­நி­லை­யில் மகத் ராக­வேந்­திரா நாய­க­னாக நடிக்­கும் 'காதல் - கண்­டி­ஷன்ஸ் அப்ளை' படத்­தில் இவரை நடிக்க வைத்­துள்­ள­னர்.

"திரை­யு­ல­கில் அறி­மு­க­மான பிற­கும் இசைத்­தொ­குப்பு ஒன்­றில் நடித்­துள்­ளேன். இப்­ப­டி­யெல்­லாம் நடித்­தால் திரை­யு­ல­கில் நிலைத்­தி­ருக்க முடி­யாது என்று சிலர் கூறி­னர். எனக்கு அதைப் பற்றி எல்­லாம் கவலை இல்லை.

"நான் தனி இசைத்­தொ­குப்­பு­களில் நடித்த பிற­கு­தான் பிர­ப­ல­மா­னேன். அப்­போது என்னை ஏற்­றுக்­கொண்ட ரசி­கர்­கள், இப்­போ­தும் தர­மான படைப்­பு­களில், அது எந்த வடி­வத்­தில் இருந்­தா­லும் ஏற்­றுக் கொள்­வார்­கள் என நம்­பு­கி­றேன்," என்­கி­றார் சானா மக்­பூல்.

தற்­போது நடித்து வரும் தமிழ்ப் படத்­துக்­கான முக்­கிய காட்­சி­களை தமி­ழக கிரா­மப் புறங்­களில் பட­மாக்கி உள்­ள­னர். இதன் மூலம் கிரா­மத்து வாழ்க்­கையை நேரில் பார்க்­க­வும் அனு­ப­விக்­க­வும் முடிந்­த­தாம். சில காட்­சி­களில் நடிப்­பது தமக்கு சவா­லா­க­வும் இருந்­தது என்­கி­றார்.

"குறிப்­பிட்ட ஒரு காட்­சி­யில் நான் கிரா­மத்­துக்கு அரு­கில் உள்ள குளத்­துக்­குச் சென்று குளிக்க வேண்­டும். பொது­வாக அங்­குள்ள பெண்­கள் காலை ஏழு மணிக்­கெல்­லாம் குளத்­துக்கு வந்து துணி­க­ளைத் தோய்த்து, அப்­ப­டியே குளித்­து­விட்­டும் செல்­வது வழக்­கம்.

"அவர்­களைத் தொந்­த­ரவு செய்ய விரும்­பாத இயக்­கு­நர் அர­விந்த், அப்­பெண்­கள் வரு­வற்­கும் முன்­பா­கவே காட்­சி­யைப் பட­மாக்­கு­வது என முடிவு செய்­தார். அதனால் அதி­காலை ஐந்து மணிக்­கெல்­லாம் அங்கு சென்­று­விட்டோம்.

"நடுங்க வைக்­கும் குளி­ரில் குளத்து நீரில் நடந்து சென்று, அருகே உள்ள ஒரு பாறை மீதேறி அமர வேண்­டும் என்­றார் இயக்­கு­நர். குளத்­தில் நடந்து செல்­வ­தில் சிக்­கல் ஏது­மில்லை. ஆனால் பாறை மீது ஏறும்­போது வழக்கி விழுந்­து­வி­டு­வேனோ என்று பய­மாக இருந்­தது. தவிர, தண்­ணீ­ரில் விழுந்­து­விட்­டால், மீண்­டும் உடை­களை மாற்ற வேண்­டி­யி­ருக்­கும். இத­னால் படப்­பி­டிப்­பும் தாம­த­மா­கும். எப்­ப­டியோ கவ­ன­மாக நடித்து முடித்­தேன். இது­போன்ற அனு­ப­வங்­கள் அற்­பு­த­மா­னவை," என்­கி­றார் சானா மக்­பூல்.

மற்­றொரு காட்­சி­யில் இரு­சக்­கர வாக­னத்­தில் தனி­யாகச் செல்ல வேண்டி இருந்­த­தாம். வாக­னம் ஓட்டி பல ஆண்­டு­கள் ஆகி­விட்­ட­தால் தயங்கி உள்­ளார் சானா. மேலும், கிரா­மத்தை நோக்­கிச் செல்­லும் குறு­கிய பாதை­யில் வாக­னம் ஓட்ட வேண்­டி­யி­ருந்­த­தால், பய­மாக உள்­ளது என்று இயக்­கு­ந­ரி­டம் கூறி­னா­ராம்.

"அவர் உடனே தனது உத­வி­யா­ளர்­களை அழைத்து, நான் இரு­சக்­கர வாக­னத்­தில் செல்­லும் சாலை­யில் ஆங்­காங்கே நிறுத்தி வைத்­தார். ஏதா­வது பிரச்­சினை ஏற்­பட்­டால் அவர்­கள் உத­வு­வார்­கள் என்று இயக்கு­நர் சொன்ன பிறகு துணிச்­ச­லு­டன் நடித்து முடித்­தேன்.

"கொரோனா நெருக்­கடி வேளை­யில் படப்­பி­டிப்பை நடத்­தி­ய­போது, கிராம மக்­கள்­கூட சற்றே அச்­ச­ம­டைந்து வீட்­டுக்­குள் முடங்­கி­யி­ருந்­த­னர். கடை­கள் எல்­லாம் மூடப்­பட்டு, மக்­கள் நட­மாட்­டம் குறைந்து காணப்­பட்­டது. அத­னால் கிரா­மங்­க­ளின் இயல்பு நிலை­யைப் பார்க்­கும் வாய்ப்பு அமை­ய­வில்லை.

"அந்­தச் சம­யத்­தில் சென்­னை­யிலும் சில அலு­வ­ல­கங்­களில் காட்சி­களைப் பட­மாக்­கி­னோம். ஆனால் கொரோனா கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­திய பிறகு வீட்­டில் இருந்த படியே­ பணி­யாற்­றிய ஊழி­யர்­கள் பல­ரும் அலு­வ­ல­கத்­துக்கு வரத்­தொடங்­கி­விட்­ட­னர். அத­னால் வார இறு­தி­யில் மட்­டுமே படப்­பி­டிப்பை நடத்த முடிந்­தது.

"மொத்­தத்­தில் இந்­தப் படத்­தில் நடித்­தது சவா­லும் ஜாலி­யும் நிறைந்த அனு­ப­வத்தை தந்­துள்ளது," என்­கி­றார் சானா மக்­பூல்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!