திருமணம்: மனம் திறந்த ஷ்ருதியின் காதலர்

நடிகை ஷ்ருதி ஹாச­னை­யும் தம்மை­யும் இணைத்­தது இசை­தான் என்று அவ­ரது காத­லர் சாந்­தனு ஹசாரிகா கூறி­யுள்­ளார்.

நடிகை என்­பதை மீறி ஷ்ருதி நல்ல இசைக்­க­லை­ஞர் என்­றும் தங்­க­ளின் திரு­ம­ணம் குறித்­தும் அவர் ஒரு பேட்­டி­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

"நாங்­கள் இரு­வ­ரும் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் நேசிக்­கி­றோம். மேலும் இசை, ஆடை வடி­வ­மைத்­தல் பணி­களில் இணைந்து செயல்­ப­டு­கிறோம்.

"இந்த உறவு ஆக்­க­பூர்­வ­மாக நீடித்து வரு­கிறது. எங்­கள் படைப்பு­கள் குறித்து ஆலோ­சிக்­கத் தவறுவதில்லை.

"இது எங்­களை ஊக்­கு­விப்­பது­டன், அடுத்­த கட்­டத்தை நோக்கிச் செல்­ல­வும் உத­வு­கிறது. இது­தான் இரு­வ­ருக்­கும் இடையே உள்ள உற­வின் நிலை. திரு­ம­ணத்­தை­விட இதில்­தான் எங்­க­ளது கவ­னம் குவிந்­துள்­ளது.

"எனக்­கும் இசை­யில் அதிக நாட்­டம் உண்டு. இசை­தான் எங்­கள் இரு­வ­ரை­யும் இணைத்­தது என­லாம். எனவே இசை சார்ந்த பணி­களில் இணைந்து பணி­யாற்று­வது மகிழ்ச்சி தரு­கிறது," என சாந்­தனு தெரி­வித்­துள்­ளார்.

தற்­போது இரு­வ­ரும் பொது இடங்­களில் ஒன்­றாக சுற்­றித் திரி­வ­தைக் காண முடி­கிறது. அதே­ச­ம­யம் தனது புதிய இசைத்­தொ­குப்­புக்­காக ஷ்ருதி தீவி­ர­மாகப் பணி­யாற்றி வரு­கி­றார்.

திரு­ம­ணம் குறித்து வெளிப்­படை­யா­கப் பேசாத ஷ்ருதி, மிக விரை­வில் அது­கு­றித்த அறி­விப்பை வெளி­யி­டு­வார் எனக் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில் சாந்­த­னு­வி­டம் ஷ்ரு­தி­யின் ரசி­கர்­கள் சிலர், திரு­மணம் குறித்து கேட்­ட­தற்கு அவர் வெளிப்படையாகப் பதில் அளித்­துள்­ளார்.

தற்­போது தெலுங்­குப் படம் ஒன்­றில் மூத்த நடி­கர் பால­கி­ருஷ்­ணா­வு­டன் நடித்து வரு­கி­றார் ஷ்ருதி.

அண்­மை­யில் அளித்த ஒரு பேட்­டி­யில் தனது தனிப்­பட்ட வாழ்க்கை குறித்­தும் திரு­ம­ணம் தொடர்­பா­க­வும் பேச விரும்­ப­வில்லை என்று ஷ்ருதி திட்­ட­வட்­ட­மா­கக் கூறி­விட்­டார். இதை­ய­டுத்து ஊட­கங்­க­ளின் பார்வை சாந்­தனு பக்­கம் திரும்­பி­யுள்­ளது.

விரைவில் கமல் வீட்டில் கெட்டிமேளச் சத்தம் கேட்கக்கூடும் என்றும் சிலர் சொல்கிறார்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!