‘பெருமையாக உணர்கிறேன்’

'புஷ்பா' படத்­தின் வெற்றி திரை­யு­ல­கில் தம்மை அடுத்­த கட்டத்­துக்கு கொண்டு சென்­றுள்­ளது என்­கி­றார் ராஷ்­மிகா மந்­தனா.

இனி ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்காமல், மாறுபட்ட கதைக்களங்களிலும் கதாபாத்திரங்களிலும் நடிக்க விரும்புவதாக அண்மைய பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

ராஷ்மிகா நடித்­துள்ள 'ஆட­வல்லு மீக்கு ஜோஹர்லு' தெலுங்­குப் படம் விரைவில் வெளி­யீடு காண உள்­ளது. இதில் கல­க­லப்­பான இளம்­பெண் கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்­ளா­ராம்.

தனது இயல்­பும் அப்­ப­டிப்­பட்­ட­து­தான் என்­ப­தால் இந்­தக் கதா­பாத்­தி­ரத்­து­டன் தம்­மால் எளி­தில் பொருந்த முடிந்­தது என்­கி­றார்.

"ஒரு குடும்­பத்­துக்­குள் இயல்­பாக நடக்­கும் விஷ­யங்­களை வைத்து காட்­சி­களை அமைத்­துள்­ளார் இயக்­கு­நர் கிஷோர் திரு­மலா. அதனால் ஒவ்­வொரு காட்­சி­யை­யும் ரசித்து நடித்­தேன்.

"இப்­போ­தெல்­லாம் கதை எழு தும்­போதே என்னை மன­தில் வைத்து சில கதா­பாத்­தி­ரங்­களை உரு­வாக்­கி­ய­தாக இயக்­கு­நர்­கள் கூறு­கின்­ற­னர். இதைப் பெருமை­யாக உணர்­கி­றேன்.

"வெற்­றி­க­ர­மான, திறமை வாய்ந்த நடி­கை­யாக இருப்­ப­தற்கு இந்த வார்த்­தை­கள்­தான் முதல் சான்று.

"எல்லா நடி­கை­க­ளுக்­கும் இது­போன்ற வாய்ப்­பு­கள் அமை­யாது. இயக்­கு­நர்­கள் நம்மை மன­தில் வைத்து கதை­களை உரு­வாக்­கும்­போது, நாம் அடுத்­த கட்­டத்­துக்­கு முன்­னே­றி­விட்­டோம் என்­பதை மன­தார உணர முடிகிறது," என்­கி­றார் ராஷ்­மிகா.

'ஆட­வல்லு மீக்கு ஜோஹர்லு' படத்­தில் குஷ்பு, ராதிகா, ஊர்­வசி ஆகி­யோ­ரும் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர்.

அவர்­க­ளு­டன் இணைந்து நடித்தது அரு­மை­யான அனு­ப­வம் என்­றும் மூத்த நடி­கை­க­ளி­டம் இருந்து பல விஷ­யங்­க­ளைக் கற்றுக்­கொள்ள முடிந்­தது என்­றும் கூறு­கிறார்.

"மூவ­ருமே மிக இயல்­பா­க­வும் ஜாலி­யா­க­வும் பழ­கி­னார்­கள். ஒரு காலத்­தில் கதா­நா­ய­கி­க­ளாக நடித்து பல சாத­னை­க­ளைச் செய்­த­வர்­கள். ஆனா­லும் அவர்­க­ளி­டம் எந்­த­வி­த­மான பந்­தா­வும் இல்லை. படப்­பி­டிப்­பின்­போது அனைவரு­ட­னும் இயல்­பா­கப் பேசி­னர்.

"அதே­ச­ம­யம் காட்­சி­களைப் பட­மாக்­கும்­போது அவர்­கள் உட­ன­டி­யாக தங்­க­ளுக்­கான கதா­பாத்­தி­ர­மாக மாற முடி­கிறது. பல சமயங்­களில் இதைக் கண்டு வியந்து போனேன்.

"திற­மை­யும் அனு­ப­வ­மும்­தான் இதற்­குக் கார­ணம். மேலும், காட்­சி­களை மெரு­கேற்­று­வ­தி­லும் திற­மை­சாலி­களாக உள்­ளனர். இவற்றை எல்­லாம் அவர்­க­ளி­டம் இருந்து கற்­றுக்­கொண்­டேன்," என்று சொல்­லும் ராஷ்மிகா, வணி­கப் படங்­க­ளுக்கு மத்­தி­யில் இது­போன்ற குடும்­பச் சித்­தி­ரங்­க­ளி­லும் தொடர்ந்து நடிக்க விரும்­பு­கி­றார்.

தமக்­கும் விஜய் தேவ­ர­கொண்­டா­வுக்­கும் விரை­வில் திரு­ம­ணம் நடக்க இருப்­ப­தாக வெளி­யான தக­வல் உண்­மை­யல்ல என்­றும் அடுத்த சில ஆண்டு­க­ளுக்கு தம்­மால் திரு­ம­ணம் குறித்து அறவே யோசிக்க இய­லாது என்­றும் சொல்­கி­றார்.

"முன்­பெல்­லாம் இது­போன்ற வதந்­தி­க­ளைக் கேட்­டால் கோபம் வரும். இப்­போது நன்கு பக்கு­வம் அடைந்­துள்­ளேன். அத­னால் அடிப்­ப­டை­யற்ற வதந்­தி­க­ளைக் கேட்­டால் சிரிப்­பு­தான் வருகிறது.

"ஊட­கங்­களில் வெளி­யா­கும் இது­போன்ற செய்­தி­களை யாரும் நம்ப வேண்­டாம். இப்­போ­தைக்கு திரு­ம­ணம் செய்­து­கொள்­ளும் எண்­ணம் இல்லை. அவ்­வாறு ஆசைப்­பட்­டால், ரசி­கர்­க­ளி­டம் நிச்­சயம் தெரி­விப்­பேன்," என்­கி­றார் ராஷ்­மிகா.

தமி­ழில் இன்­னும் நிலை­யான இடம் கிடைக்­க­வில்லை என்­பது வருத்­தம் அளிப்­ப­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், தீவி­ர­மாக முயற்சி செய்­தால் இந்த மனக்­குறை மறை­யும் என்­பதை உணர்ந்­தி­ருப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

"நான்­கைந்து நேர­டித் தமிழ்ப் படங்­க­ளில்­கூட இன்னும் நான் நடித்து முடிக்­க­வில்லை. அதற்­குள் தமி­ழ­கம் முழு­வ­தும் எனக்கு ஏரா­ள­மான ரசி­கர்­கள் கிடைத்­துள்­ள­னர். இதை­விட பெரிய விஷ­யம் இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை.

"முன்பே ஒப்­புக்­கொண்ட தெலுங்கு படங்­களை முடித்த பிறகு மீண்­டும் தமிழில் நடிக்க திட்­ட­மிட்­டுள்­ளேன். அப்­போது என்­னு­டைய முழுக் கவ­ன­மும் கோடம்­பாக்­கத்­தின் மீது­தான் குவிந்­தி­ருக்­கும். அது­வரை ரசி­கர்­கள் பொறுத்­தி­ருக்க வேண்­டும்.

"விஜய், சூர்யா படங்­களில் நான் நடிக்க இருப்­ப­தாக வெளி­யான தக­வல் உண்­மை­யல்ல. அதே­ச­ம­யம் பெரிய நடிகர்­க­ளு­டன் இணைந்து நடிக்­கும் வாய்ப்­பு­கள் தொடர்ந்து தேடி­ வ­ரு­கின்­றன. கால்­ஷீட் பிரச்­சி­னை­யால் அவற்றை ஏற்க முடி­ய­வில்லை," என்­கி­றார் ராஷ்­மிகா.

, :

  

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!