திரைத் துளிகள்

'கடைசி விவசாயி' படத்தை இயக்கிய இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான மணிகண்டனை அவருடைய சொந்த ஊரான உசிலம்பட்டிக்கேச் சென்று சந்தித்து, ஆரத் தழுவிப் பாராட்டினார் இயக்குநர் மிஷ்கின்.

அதுபற்றி கூறுகையில், "மிகச் சிறந்த படைப்பைத் தமிழுக்குத் தந்த மணிகண்டனுக்கு நன்றி கூறி, அவருடைய கரங்களை முத்தமிட்டேன். படத்தில் கதையின் நாயகனாக ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளின் அடையாளமாக வாழ்ந்திருந்த பெரியவர் நல்லாண்டியின் வீட்டுக்குச் சென்று, அவருடைய புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினேன். மணிகண்டன் படப்பிடிப்பு செய்த இடத்திற்குச் சென்று மதிய உணவு உண்டேன். அந்த நாள் ஓர் அற்புத நாளாக மாறியது. மணிகண்டனின் பயணம் தொடரட்டும். அவரை இயற்கை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளும்," என நெகிழ்வுடன் தெரிவித்தார்.

'வெயில்', 'அங்காடித் தெரு', 'அரவான்', 'காவியத் தலைவன்', 'ஜெயில்' படங்களை இயக்கிய தமிழ்த் திரையின் முன்னணி இயக்குநர் வசந்தபாலன், 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டத்தை அடிப்படையாக வைத்து எளிதில் மக்களுக்கு இந்த திட்டத்தை எடுத்துரைக்கும் வகையில் 'தலைவன்' என்ற குறும்படத்தை உருவாக்கியுள்ளார். திரைத்துறையினர், அரசியல்வாதிகள் என பலரும் கலந்துகொண்டு இந்தக் குறும்படத்தை வெளியிட்டு சிறப்பித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!