திரைத் துளி­கள்

 தன் மனைவி முத்துமலரை விவாகரத்து செய்துள்ளார் இயக்குநர் பாலா. இதை அறிந்த அவரது நண்பர்களும் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

'சேது', 'நந்தா', 'பிதாமகன்' என்று பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் பாலா. சில படங்களைத் தயாரித்தும் உள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரும் சூர்யாவும் இணைந்துள்ளனர். பாலா இயக்கத்தில் நடிக்க உள்ளார் சூர்யா.

இந்நிலையில், அவர் தன் மனைவியை விவாகரத்து செய்திருப்பது கோடம்பாக்கத்தில் பேசுபொருளாகி உள்ளது. பாலாவும் முத்துமலரும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து பெற்றுள்ளனர். "இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாகப் பிரிந்திருந்தனர். பின்னர் சட்டபூர்வமாகப் பிரிய முடிவெடுத்தனர்.

"பாலாவுக்கு கடந்த 2004ஆம் ஆண்டு மதுரையில் திருமணம் நடைபெற்றது. பதினெட்டு ஆண்டுக்காலம் இணைந்து வாழ்ந்த நிலையில், இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். பாலாவின் முடிவால் அவரது நலன்விரும்பிகள் வருத்தம் அடைந்துள்ள னர்," என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.

 தமக்கு காதலிக்க நேரம் கிடைக்கவில்லை என்கிறார் பூஜா ஹெக்டே. அண்மைய பேட்டி ஒன்றில், ஆண்டுக்கு நான்கைந்து படங்களில் நடித்து வருவதால், தம்மால் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

"காதலிக்க நிறைய நேரம் தேவைப்படும். அப்போதுதான் காதல் நன்றாக, அழகாக வளரும். ஆனால், இப்போது எனக்கு அதற்கான நேரமில்லை," என்கிறார் பூஜா.

 தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை தொடர்பில் நீதி கேட்டு நீதிமன்றத்துக்குச் சென்றதால் மலையாளத் திரையுலகம் தம்மை ஓரங் கட்டியதாகக் கூறியுள்ளார் நடிகை பாவனா. அந்தச் சம்பவத்தால் தனது

கண்ணியம் சுக்குநூறானது என்றும் அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

"தன்னம்பிக்கையால்தான் துணிச்சலாக இருந்து வருகிறேன். ஆனாலும் தொடர்ந்து போராடுவேன்," என்கிறார் பாவனா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!