‘அண்ணனாக மாறிய அஜித்’

உடன்­பி­றவா சகோ­த­ர­ரைப் போல் அஜித் தம்­மி­டம் பழ­கி­ய­தா­கச் சொல்­கி­றார் இளம் வில்­லன் நடி­கர் கார்த்­தி­கேயா. இவர்­தான் 'வலிமை' படத்­தில் அஜித்­து­டன் மோதிய வில்­லன்.

திரை­யில் இவர் செய்த அட்­ட­கா­சங்­க­ளைக் கண்டு, திரைப்­ப­டம் என்­ப­தை­யும் மறந்து அஜித் ரசி­கர்­கள் ஆவே­ச­ம­டைந்­த­னர். அந்த அள­வுக்கு மோச­மான வில்­ல­னாக நடிப்­பில் அசத்தி இருந்­தார் கார்த்­தி­கேயா.

அண்­மைய பேட்­டி­யில் 'வலிமை' பட அனு­ப­வங்­களை அவர் பகிர்ந்­துள்­ளார். மரி­யாதை, அக்­கறை என்ற வார்த்­தை­க­ளுக்­கான அர்த்­தத்தை அஜித்­து­டன் பழ­கி­னால் எளி­தில் புரிந்­து­கொள்ள முடி­யும் என்­கி­றார்.

"அஜித் ரசி­கர்­கள் முத­லில் என்னை சகட்டு மேனிக்கு திட்­டு­வ­தா­கக் கேள்­விப்­பட்­டேன். அதை என் நடிப்­புக்கு கிடைத்த பாராட்­டா­கக் கரு­தி­னேன். இப்­போது என்­னை­யும் ரசி­கர்­கள் பாராட்­டு­வதை நினைக்­கும்­போது மகிழ்ச்­சி­யாக உள்­ளது.

"தெலுங்­கில் நான் நடித்த 'ஆர்.எக்ஸ் 100' படத்தை பார்த்­து­தான் இயக்­கு­நர் வினோத், 'வலிமை' படத்­தில் ஒரு கதா­பாத்­தி­ரம் உள்­ளது. நடிக்­கி­றீர்­களா? என்று கேட்­டார்.

"அவ­ரு­டைய 'தீரன் அதி­கா­ரம் ஒன்று' படத்­தைப் பார்த்­தேன். ரொம்­பவே பிடித்­தி­ருந்­தது. அஜித் படம் என்ற ஒரு காரணம் போதாதா... எதை­யும் யோசிக்­கா­மல் நடிக்க ஒப்­புக் கொண்­டேன்," என்­கி­றார் கார்த்­தி­கேயா.

இவ­ரும் அஜித்­தைப் போலவே பைக் பிரி­யர். தனக்­காக புதிய ரக பைக்­கு­களை ஓட்­டு­வது போன்று காட்­சி­களை அமைக்க முடி­யுமா என்று இயக்­கு­நர்­க­ளி­டம் கேட்­பா­ராம்.

"இது­வரை நான் நடித்த அனைத்து படங்­க­ளி­லுமே முரட்­டுத்­த­ன­மான கதா­பாத்­தி­ரங்­கள்­தான் அமைந்­தன. எனக்­கும் அமை­தி­யாக, நல்ல பைய­னாக, பெண்­கள் விரும்­பும் சமர்த்து இளை­ஞ­னாக நடிக்க வேண்­டும் என ஆசை இருக்­கிறது. ஆனால் அது­போன்ற கதை­கள் இன்­னும் கிடைக்­க­வில்லை.

"எனி­னும் அனைத்து மொழி இயக்­கு­நர்­களும் தங்­கள் படங்­களில் என்னை நடிக்க வைக்க முன்­வ­ரு­வது நல்ல விஷ­யம் எனத் தோன்­று­கிறது," என்­கி­றார் கார்த்­தி­கேயா.

தெலுங்­கில் முன்­னணி நடி­க­ராக வலம் வந்­தா­லும், தமி­ழில் ஒரு படத்­தி­லா­வது நடித்­து­விட வேண்­டும் என்­ப­து­தான் எனது முதன்மை விருப்­பம் என்று வெளிப்­ப­டை­யா­கச் சொல்லி இருந்­தார். இந்­நி­லை­யில் 'வலிமை' போன்ற பிரம்­மாண்ட பட வாய்ப்பு கிடைத்­த­தும், அதன் மூலம் அஜித்­தின் நண்­ப­ராக மாறி­ய­தும் தாம் எதிர்­பா­ரா­மல் நடந்­தவை என்­கி­றார்.

'வலிமை' என்ற தலைப்­பி­லேயே அனைத்து இந்­திய மொழி­க­ளி­லும் இப்­ப­டத்தை வெளி­யிட்­டுள்­ள­னர்.

"அஜித் குறித்து பேசி­னாலே நமக்­குள் ஒரு­வித உற்­சா­கம் ஏற்­படும். 'வலிமை' படத்­தின் அண்­மைய தக­வ­லைக் கேட்டு அவ­ரது ரசி­கர்­கள் இந்­திய அள­வில் சமூக ஊட­கங்­கள் மூலம் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யதை இப்­போது நினைத்­தா­லும் வியப்­பாக உள்­ளது. அவர் எப்­ப­டிப்­பட்ட விசு­வா­ச­மான ரசி­கர் கூட்­டத்தை வைத்­துள்­ளார் என்­ப­தைப் புரிந்­து­கொள்ள முடி­கிறது.

"படப்­பி­டிப்­பின்­போது அவர் கையால் பிரி­யாணி செய்து கொடுத்­தார். அப்­போது நான் கடும் உண­வுக் கட்­டுப்­பா­டு­க­ளைப் பின்­பற்­றி­னேன். இதை தெரிந்­து­கொண்டு நான் எதை­யெல்­லாம் சாப்­பி­ட­லாம் என்­ப­தைக் கணக்­கிட்டு அதற்­கேற்ப சமைப்­பார்.

"அவர் கைப்­பக்­கு­வத்­தில் தயா­ரா­கும் 'சூப்' வகை­க­ளுக்கு நான் அடிமை. அந்த சூப் அடுத்து எப்­போது கிடைக்­கும் என மனம் ஏங்­கு­கிறது. நான் முத­லில் சொன்­னது போல் அவர் என் அண்­ண­னா­கவே மாறிப்­போ­னார் என்­ப­து­தான் சரி.

"அனைத்­தை­யும்­விட ஒரு முக்­கி­ய­மான விஷ­யம், படப்­பி­டிப்­பின் முதல் நாளன்று அவரே என்­னைத் தேடி­வந்­தார். தம்மை அறி­மு­கப்­ப­டுத்­திக் கொண்டு இயல்­பா­கப் பேசினார். இந்­தப் பெருந்­தன்­மையை எவ்­வ­ளவு பேரி­டம் பார்க்க முடி­யும்? அவ­ரி­டம் நாம் கற்­றுக்­கொள்ள நிறைய உள்­ளன," என்று சொல்­லும் கார்த்­தி­கே­யா­வுக்கு திரு­ம­ண­மா­கி­விட்­டது.

கல்­லூ­ரி­யில் துளிர்த்த காதல் கொரோனா நெருக்­கடி வேளை­யில் மேலும் நெருக்­க­மா­ன­தாக மாறி திரு­ம­ணத்­தில் முடிந்­த­தாம்.

"பதி­னோரு ஆண்­டு­கள் காத­லித்த பெண் என் மனை­வி­யாகி உள்­ளார். திரு­மண வாழ்க்கை மகிழ்ச்­சி­யாக போய்க்­கொண்­டி­ருக்­கிறது," என்­கி­றார் கார்த்­தி­கேயா.

, :

  

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!