திரைத் துளிகள்

 சிம்பு, நிதி அகர்வால் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனராம். இதை யடுத்து நிதி அகர்வால் தனது மேலாளரையே சிம்புவின் கால்ஷீட் விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்பில் நியமித்துள்ளாராம். இனி சிம்பு சார்பாக அவர் நடிக்கும் படங்களுக்கான கதைகளையும்கூட நிதி அகர்வால்தான் கேட்பார் என்று கூறப்படுகிறது. இந்தக் காதல் விவகாரம் குறித்து சிம்பு இதுவரை வாய்திறக்கவில்லை.

 'வலிமை' படத்தின் வெற்றியை அடுத்து அஜித்தின் 61வது படத்தையும் வினோத் இயக்குவது உறுதியாகி உள்ளது. இந்தப் படத்தில் தாம் ஏற்கும் கதாபாத்தி ரத்துக்காகவே அஜித் நீண்ட தாடி வளர்ப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வங்கிக் கொள்ளை சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது என்றும் அஜித்துக்கான சண்டைக் காட்சிகள் குறைவாகவே இருக்கும் என்றும் ஒரு தகவல் கசிந்துள்ளது. கதைப்படி நாயகன், வில்லன் இரண்டுமே அஜித்தான் என்று இயக்குநர் வினோத் ஏற்கெனவே கூறியுள்ளார். சண்டைக் காட்சிகள் குறைவு என்றாலும் படத்தில் விறுவிறுப்புக்குப் பஞ்சமிருக்காதாம். அநேகமாக எதிர்மறை கதாபாத்திரத்துக்காக அஜித் தாடி வளர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 'மன்மத லீலை', 'இடியட்' ஆகிய இரு படங்களும் நேற்று வெளியீடு காண இருந்தன. எனினும், இரண்டுமே திடீர் சிக்கலை எதிர்கொண்டன.

போதுமான திரையரங்குகள் கிடைக்காததால் 'இடியட்' படம் வெளியாகவில்லையாம். அதனால் பட வெளியீடு ஒத்திப்போயி ருப்பதாகத் தகவல். அதேபோல் தயாரிப்பாளருக்கும் இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும் இடையேயான மோதல் காரணமாக 'மன்மத லீலை' படத்தின் வெளியீடும் பாதிக்கப்பட்டது. தயாரிப் பாளர் நான்கு கோடி ரூபாய் தர வேண்டியிருப்பதாகவும் அதை தந்த பிறகே பட வெளியீட்டுக்கு தாம் ஒத்துழைக்க முடியும் என்றும் வெங்கட் பிரபு கூறிவிட்டாராம். இதனால் இப்படத்தின் காலை காட்சி நேற்று ரத்தானது. அதன் பிறகு இரு தரப்பினரும் அமர்ந்து பேசி, சுமூக உடன்பாட்டுக்கு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!