திரைத் துளிகள்

 நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்படும் 'ரெஜினா' என்ற படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார் சுனைனா. இது நாயகியை மையமாக வைத்து உருவாகும் படம்.

"முதன் முறையாக தனி நாயகியாக நடிப்பது உற்சாகம் அளிக்கிறது. சாதாரண குடும்பத்துப் பெண்ணான கதையின் நாயகி ரெஜினாவின் கணவரை சிலர் கொலை செய்து விடுகிறார்கள். "தமக்கோ, கணவருக்கோ எதிரிகள் என்று யாரும் இல்லாத நிலையில், யார் இந்தக் கொலையை செய்திருப்பார் என்று யோசிக்கும் ரெஜினா, கொலையாளியைத் தேடிச் செல்கிறார். அப்போது என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

"மிக கனமான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளேன். திரையில் பார்க்கும்போது எனது நடிப்பு ரசிகர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும்," என்கிறார் சுனைனா.

இதில் வில்லனாக நிவாஸ் ஆதித்யனும் சுனைனாவின் கணவராக அனந்த் நாக்கும் நடித்துள்ளனர். சதீஷ் நாயர் தயாரித்து, இசையமைக்க, டோமின் டி சில்வா இயக்குகிறார்.

 சமந்தா குறித்து இரண்டு புதுத்தகவல்கள். அவரது நடிப்பில் உருவாகி உள்ள 'யசோதா' திரைப்படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியீடு காண உள்ளது. மண வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்ட பிறகு முதன்முறையாக தனது சமூக ஊடகப் பக்கத்தில் நாக சைதன்யாவின் படத்தை அவர் பகர்ந்துள்ளார். இருவரும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இணைந்து நடித்த திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ஒரு காட்சிக்கான புகைப்படத்தைத்தான் அவரது பதிவில் காணமுடிகிறது. திகில் படமாக உருவாகி உள்ள 'யசோதா'வில் முதல் முறையாக அவர் எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 'ராதே ஷ்யாம்' படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் நடிகர் பிரபாஸ் தளர்ந்து விடவில்லை. அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது 'சலார்', 'ஆதிபுரூஷ்', அஸ்வின் நாக் இயக்கும் படங்களில் நடித்து வருபவர், அடுத்து ஹாலிவுட் படத்திலும் அறிமுகமாக இருப்பதாகத் தகவல். பிரபல யுனிவர்சல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் பிரபாசை ஒப்பந்தம் செய்ய உள்ளனராம். இது தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்றும் மிக விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாக சைதன்யா நடிக்கும் புதிய படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். தற்காலிகமாக 'என்சி22' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கவுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!