திரைத் துளி­கள்

 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல் காட்சிகளுக்கு நடனமாடி உள்ளாராம் வடிவேலு. அவற்றுள் ஒரு பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். இரண்டே நாள்களில் இந்தப் பாடலைப் படமாக்கி உள்ளனர். மற்றொரு பாடலில் பிக்பாஸ் புகழ் ஷிவானியுடன் இணைந்து நடனமாடி உள்ளார் வடிவேலு. படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அநேகமாக ஜூலை மாதம் முதல் வாரத்தில் இப்படம் திரை காணக்கூடும்.

 தனது மகன்கள் இருவரையும் கவனிக்க வேண்டியிருந்ததால்தான் கடந்த ஏழு ஆண்டுகளாக தாம் திரைப்படங்களை இயக்கவில்லை என்று ஐஸ்வர்யா ரஜினி தெரி வித்துள்ளார். தற்போது பிள்ளைகள் விவரம் அறிந்தவர்களாக வளர்ந்துவிட்டதால், மீண்டும் திரையுலகப் பணிகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். "நான் 'வை ராஜா வை' படத்தை இயக்கி முடித்ததும் இந்தியில் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு தேடிவந்தது. ஆனால் எனது மகன்கள் சிறுவர்களாக இருந்ததால் திரைப் பணிகளில் அப்போது ஈடுபட முடியவில்லை. இப்போது இந்தியில் ஹிருத்திக் ரோஷன், ரன்வீர்சிங் போன்ற நடிகர்களை வைத்து படம் இயக்க திட்டமிட்டிருக்கிறேன்," என்கிறார் ஐஸ்வர்யா ரஜினி.

 "ஐந்து கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக தம் மீது காவல் துறையில் அளிக்கப்பட்டுள்ள புகார் பொய்யானது என நடிகர் விமல் கூறியுள்ளார்.

இந்தப் புகாரை அளித்துள்ள சிங்கார வேலன் என்பவர் மோசடி ஆவணங்கள் தயாரித்து தம்மை சிக்கலில் மாட்டிவிட்டு, தொடர்ந்து மிரட்டி வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். "சிங்கார வேலன் கொடுத்த தொல்லை யால் கடந்த மூன்று ஆண்டுகளாக நான் மன உளைச்சலில் இருந்தேன். நான் புதிய படங்களில் நடிக்கும்போதெல்லாம், சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடம் என்னைப்பற்றி தவறான தகவல்களைச் சொல்லி சிங்காரவேலன் மிரட்டி வந்தார்.

"இது குறித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளேன்," என்று விமல் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!