திரைத் துளி­கள்

 நடிகர் விவேக் சென்னையில் குடியிருந்த சாலைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அண்மையில் இது தொடர்பாக தமிழக முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார் விவேக்கின் மனைவி அருள் செல்வி. அதை ஏற்று விவேக் வசித்த சாலைக்கு 'சின்னக் கலைவாணர் விவேக் சாலை' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இன்று அந்த சாலையின் பெயர்ப் பலகை திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

 கலாசாரம் என்ற பெயரில் எதையும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் ஓவியா. எதையும் வெளிப் படையாகப் பேசினால்தான் தீர்வு கிடைக்கும் என்றும் கூறுகிறார்.

"ஆண் பிள்ளைகள் பெண் குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனப் பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். சிறு வயதிலேயே அவ்வாறு வளர்த்தால் எந்தவிதமான குற்றச்செயல்பாடுகளிலும் ஆண் பிள்ளைகள் ஈடுபட மாட்டார்கள்," என்று ஓவியா அண்மையில் நடைபெற்ற கல்லூரி விழாவில் பேசும்போது குறிப்பிட்டார். அவரது இந்தப் பேச்சு விவாதப் பொருளாகி உள்ளது.

 'ஆர்ஆர்ஆர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தில் ஜோடியாக நடிப்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. இப்படத்தை கொரட்டலா சிவா இயக்குகிறார். இப்படத்தில் முதலில் ஆலியா பட்தான் நாயகியாக நடிப்பதாக இருந்தது. சில காரணங்களால் அவர் விலகிக்கொள்ள, அந்த வா்ய்ப்பைப் பெறுவதற்கு ராஷ்மிகாவும் பூஜா ஹெக்டேவும் முட்டி மோதுவதாகத் தகவல். எனினும் ராஷ்மிகாவுக்குத்தான் அதிக வாய்ப்பு என்று இயக்குநர் சிவா கூறியுள்ளார். இருவரில் யாராக இருந்தாலும், வாங்கக்கூடிய சம்பளம் மட்டும் நிச்சயம் வாயைப் பிளக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!