திரைத் துளி­கள்

 சுசீந்திரன், அடுத்து இயக்கும் புதிய படத்துக்கு 'வள்ளி மயில்' என்று பெயர் சூட்டியிருக்கிறார். இதில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா ஆகிய மூன்று பேரும் இணைந்து நடிக்கிறார்கள்.

படத்தின் கதை 1980களில் நடப்பதுபோல் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகி வருகிறது.

 இந்த ஆண்டு முழுவதும் இந்தி, தெலுங்கில் மட்டும் நடிப்பது என்ற முடிவில் இருக்கிறாராம் சமந்தா.

மூன்று இந்திப் படங்களில் நடிப்பதற்கு கதைகளை முடிவு செய்துள்ளார். மேலும் கணிசமான சம்பளம் கொடுத்தால் இணையத்தொடர்களில் நடிக்கவும் தயாராக உள்ளார்.

 கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'காலத்துக்கும் நீ வேணும்' என்ற பாடலின் காணொளியை, அதன் வரிகளோடு வெளியிட்டுள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் தாமரை எழுதியுள்ள இந்தப் பாடலுக்குப் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

 இனிமேல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு படமாவது இயக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ளார் மோகன்லால். இப்போது 'பரோஸ்: நிதி காக்கும் பூதம்' என்ற படத்தின் மூலம் இயக்குநர் ஆகியுள்ளார்.

இந்தப் படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. படத்தில் உடன் நடித்தவர்கள் மோகன்லாலின் இயக்கும் திறமையைக் கண்டு வியந்து போயுள்ளனர். 44 ஆண்டுகளாக திரையுலகில் பணியாற்றி வந்தாலும், இப்போதுதான் பட இயக்கத்தில் அவர் ஈடுபட்டுள்ளார். அவர் இயக்கும் படத்தின் விநியோக உரிமையைப் பெறுவதில் பலத்த போட்டி நிலவுகிறது.

 தனது குடும்பத்தாருடன் சுவிட்சர்லாந்துக்குப் பறந்துள்ளார் விக்ரம். 'இருமுகன்' முதல் 'மகான்' வரை தொடர்ந்து ஓய்வின்றி நடித்து வந்ததால், புத்துணர்ச்சி பெறுவதற்காகவே இந்த விடுமுறைப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!