திரைத் துளி­கள்

 அஜித் தனது அடுத்த படத்தில் உணவக உரிமை யாளராக நடிக்கிறார்.

இளையர் ஒருவர் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு சமாளித்து வாழ்க்கையில் முன்னேறு கிறார். கடின உழைப்பாளி யான அந்த இளையரின் வாழ்க்கையை விவரிப்பதுதான் கதையாம்.

வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தில் அஜித் இளமையாகக் காட்சியளிப்பார் என்ற தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

 அன்னையர் தினத்தையொட்டி தம் தாயாருக்கு ஒன்றரை கோடி மதிப்புள்ள கார் ஒன்றை பரிசளித்துள்ளார் ராஷி கண்ணா.

திரையுலகில் தாம் பணியாற்று வதற்கு உற்ற துணையாக இருப்பது தம் தாயார்தான் என்று அண்மைய டுவிட்டர் பதிவு அவர் குறிப்பிட்டுள்ளார்.

 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள 'விக்ரம்' படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. இந்தப் படத்துக்காக அனிருத் இசையில் ஒரு பாடலைப் பாடி உள்ளார் கமல். மேலும், அந்தப் பாடலை அவர்தான் எழுதியும் உள்ளார்.

 பழம்பெரும் பின்னணிப் பாடகி பி.சுசீலாவை கௌர விக்கும் வகையில் அவரது உருவத்தில் அஞ்சல்தலையும் அவரது உருவம் பொறிக்கப்பட்ட சிறப்பு அஞ்சல் உறையையும் வெளியிட்டிருக்கிறது இந்திய அஞ்சல்துறை. புதிய அஞ்சல் தலை, அஞ்சல் உறை ஆகிய வற்றை அவரது வீடு தேடிச் சென்று கொடுத்து மரியாதை செய்துள்ளனர் அதிகாரிகள்.

 ரசிகர்களுக்குப் பிடித்திருப்ப தால்தான் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு தமக்கு கிடைத்து வருவதாக யோகி பாபு கூறியுள்ளார். 'பீஸ்ட்' படத்தில் நிறைய காட்சிகளில் நடித்திருந்தாலும், படத்தின் நீளம் கருதி அவற்றுள் சிலவற்றை நீக்கிவிட்டனராம். "குறைவான காட்சிகள் என்றாலும் விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கிடைப்பது பெரிய விஷயம்," என்கிறார் யோகி பாபு.

 விருது படங்களை எடுத்து பிரபலமான மதுர் பண்டார்கர் இயக்கும் இந்திப் படத்தில் நடிக்கிறார் தமன்னா. இந்தப் படம் வெற்றி பெற்றால் இந்தித் திரையுலகில் நீடிப்பாராம். இல்லையெனில் தென்னிந்திய மொழிகளில் மட்டும் கவனம் செலுத்துவாராம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!