வரும் ஜூன் 2ஆம் தேதி எண்பது வயதைத் தொடவுள்ள இசையமைப்பாளர் இளையராஜா, இன்று மீண்டும் இணையத்தில் பலரையும் வியக்க வைத்துள்ளார்.
நெட்ஃப்லிக்ஸ் தளத்துடன் அவர் செய்துள்ள கூட்டுமுயற்சி பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.
நெட்ஃப்லிக்ஸ் தளத்தில் மிகப் பிரபலமாக உள்ள தொடர்களில் ஒன்று ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்.
அத்தொடரின் முகப்பு இசையை இந்திய வடிவில் இசை அமைத்திருக்கிறார் இளையராஜா.
அந்த அறிவியல் புனைவு நாடகத் தொடர் அமெரிக்காவில் உள்ள சிற்றூரில் ஒன்றில் நடக்கும் பயங்கரமான விநோதச் சம்பவங்கள் சித்திரிக்கப்படுகின்றன..
ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் நாடகத்தின் நான்காவது பருவம் வரும் 27ஆம் தேதி நெட்ஃப்லிக்சில் வெளியாகிறது.
இதை முன்னிட்டு இளையராஜா இசை அமைத்துள்ள இசைக்கூறையும் அதற்கான காணொளியையும் நெட்ஃப்லிக்ஸ் இந்தியா வெளியிட்டிருக்கிறது.
இளையராஜா இவ்வாறு கவனம் ஈர்க்க, ஏஆர் ரகுமான் இயக்குநராக அண்மையில் அறிமுகம் ஆனார்.
'லே மஸ்க்' என்ற முழுக்க முழுக்க மெய்நிகர் வடிவிலான குறும்படத்தை இயக்கி உள்ளார் ஏஆர் ரகுமான்.
பிரான்சில் இடம்பெற்ற புகழ்பெற்ற கான் திரைப்பட விழாவில் அதன் முன்னோட்டக் காட்சி இடம்பெற்றது.
சிறுவயதில் தனது பெற்றோரை இழந்து பணம் படைத்த பெண் இசைக்கலைஞர், தன் வாழ்வை மாற்றிய சிலரைத் தேடிச் செல்கிறார்.
தொடு உணர்வு, வாசனை போன்றவற்றை தொழில்நுட்பத்துடன் இணைத்து கதை நகர்கிறது.
le-musk-virtual-reality-a-r-rahman.jpg

- எ ஆர் ரகுமான் இயக்கி உள்ள லே மஸ்க் எனும் மெய்நிகர் வடிவிலான குறும்படம். தமது மனைவி சாய்ரா சொன்ன ஒரு வரிக் கதையைக் கொண்டு படத்தை உருவாக்கி உள்ளர் ரகுமான். படம்: இணையம்
இந்தப் படத்தை உருவாக்குவதற்கு ஐந்து ஆண்டுகள் பிடித்தது.
மேலும் ஒரு மெய்நிகர் படத்தை இயக்கப்போவதாகவும் அதன் கதையாக்கத்தில் 60 விழுக்காடு முடிந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.