திரைத்துளிகள்

 தன் மனம் கவர்ந்த கதாநாயகன் யார் என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ளார் இயக்குநர் சங்கரின் மகளும் 'விருமன்' பட நாயகியுமான அதிதி.

'விருமன்' படம் பிள்ளையார் சதுர்த்தி அன்று வெளியீடு காண உள்ளது. இதில் கார்த்தியும் அதிதியும் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில், ரசிகர்கள் அதிதியுடன் கலந்துரையாடினர். அப்போது, 'திரையுலக நாயகர்களில் யார் மீது உங்களுக்கு ஈர்ப்பு அதிகம்?' என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, சிறிதும் தயங்காமல், 'கேஜிஎஃப்' பட நாயகன் யாஷ் என்று பதிலளித்துள்ளார் அதிதி. இதையடுத்து, நடிகர் யாஷ் ரசிகர்கள் இது தொடர்பான காணொளியைப் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர்.

 கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான 'குயின்' இணையத் தொடரின் இரண்டாம் பாகத்திலும் ரம்யா கிருஷ்ணன் நடிக்க உள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவான இத்தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார்.

இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என்று கூறப்பட்ட நிலையில், படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரம்யா கிருஷ்ணன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட புகைப்படமும் வெளியாகி உள்ளது.

 சூர்யா, பாலா இணைந்துள்ள புதிய படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. இந்நிலையில், 'வணங்கான்' அல்லது 'கடலாடி' ஆகிய இரண்டில் ஏதேனும் ஒரு தலைப்பை விரைவில் அறிவிக்க உள்ளதாகத் தகவல். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!