‘ஐந்து வயது பெரியவரான சூர்யாவுக்கு நான் அம்மா’

‘அமு­தா­வும் அன்­ன­லட்­சு­மி­யும்’ என்ற தொலைக்­காட்­சித் தொடர் மூலம் திரை­யு­ல­கில் மீண்­டும் அடி­யெ­டுத்து வைத்­துள்­ளார் ராஜஸ்ரீ.

‘கருத்­தம்மா’ படத்­தின் மூலம் தமிழ் ரசி­கர்­க­ளின் கவ­னத்தை ஈர்த்­த­வர், கிட்­டத்­தட்ட ஒன்­பது ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு மீண்­டும் நடிக்க வந்­துள்­ளார்.

“திரை­யு­ல­கில் இருந்து ஒரு­வர் வில­கி­விட்­டார் என்­றால் யாரும் அவ­ரைத் தேடிச் செல்­ல­மாட்­டார்­கள். மீண்­டும் நடிக்க வரு­வது என்பது மிகக் கடி­னம். ஆனால் இந்­தத் தொட­ரின் இயக்­கு­நர் என்னைத் தேடி­வந்­தார்.

“நான்­தான் நடிக்க வேண்­டும் என்று உறு­தி­யா­கக் கேட்­டுக் கொண்­டார். கதா­பாத்­தி­ரம் பிடித்­தி­ருந்­த­தால் தேடி­வந்த வாய்ப்பை ஏற்­றுக்­கொண்­டேன். நல்­ல­தொரு குடும்­பக் கதை­யில் நடிப்­பது மன­நி­றை­வைத் தந்­துள்­ளது,” என்­கிறார் ‘கருத்­தம்மா’ ராஜ­ஸ்ரீ.

‘நந்தா’ படத்­தில் இவர் சூர்­யா­வின் தாயாக நடித்­தி­ருந்­தார். அது குறித்து சமூக ஊட­கங்­களில் சில ரசி­கர்­கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

“சூர்யா என்­னு­டைய நல்ல நண்­பர். என்­னை­விட ஐந்து வயது மூத்­த­வர். எனி­னும், இயக்­கு­நர் பாலா கேட்­டுக்­கொண்­ட­தால் சூர்யா­வுக்கு அம்­மா­வாக நடித்­தேன்.

“அண்­மை­யில் இயக்­கு­நர் பாலாவைச் சந்­தித்­தேன். மீண்­டும் ஒரு படத்­தில் இணைந்து பணி­யாற்­ற­லாமா என்று கேட்­ட­போது அவ­ருக்கு அதிர்ச்சி. ‘அப்­ப­டியா.. நீங்­கள் நடிப்­ப­தாக இருந்­தால் ஒரு படம் எடுக்­க­லாம்’ என்­றார்.

“சூர்யாவை அண்ணன் என்று அழைத்தால் அவருக்குப் பிடிக்காது. அண்ணா என்று மட்டும் கூப்பிட வேண்டாம் என்பார். இப்போதும்கூட அவருக்கு அப்படிக் குறிப்பிடுவது பிடிக்காது. சினிமாவில் சில விஷயங்கள் தலைகீழாக நடக்கும். நான் சூர்யாவுக்கு தாயாக நடித்ததும் அப்படிப்பட்ட ஒன்றுதான்,” என்கிறார் ராஜஸ்ரீ.

அன்றும் இன்றும் ‘கருத்தம்மா’ ராஜஸ்ரீ.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!