காளையை அடக்கிய ஷீலா

தேடி வரும் எல்லா வாய்ப்­பு­க­ளை­யும் ஏற்­கா­மல், தமக்கு ஒத்துவரக்­கூ­டிய கதைக்­க­ளங்­கள், படங்­களை மட்­டும் தேர்வு செய்து நடித்து வரு­கி­றார் ஷீலா ராஜ்­கு­மார்.

‘டு லெட்’, ‘திரெ­ள­பதி’, ‘மண்­டேலா’ படங்­க­ளின் மூலம் ரசி­கர்­களை தன் பக்­கம் திரும்­பிப் பார்க்க வைத்­துள்­ளார். இப்­போது இணை­யத் தொட­ர்களிலும் கவ­னம் செலுத்­து­கி­றார்.

இயக்­கு­நர் வெற்­றி­மா­றன் தயா­ரிப்­பில் உரு­வாகும் ‘பேட்ட காளி’ என்ற இணை­யத்­தொ­ட­ரில் ஷீலா­தான் நாயகி.

பரத நாட்­டி­யக் கலை­ஞ­ரான இவ­ருக்கு அக்­கலையை மைய­மாக வைத்து உரு­வா­கும் படத்­தில் நடிக்­கும் ஆசை உள்­ளது. இந்­நி­லை­யில், ‘மாயத்­திரை’ படத்தில் பேய் கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்­ளா­ராம்.

“திரை­யில் பரத நாட்­டி­யம் ஆட­லாம் என்று நினைத்­தால், பேயாட்­டம் போட வைத்­து­விட்­ட­னர்,” என்று சொல்­லிச் சிரிக்­கும் ஷீலா­வுக்கு தமி­ழி­லும் மலை­யா­ளத்­தி­லும் எதிர்­பார்த்த வாய்ப்­பு­கள் குறை­வின்­றிக் கிடைத்து வருகின்­றன.

அள­வான சம்­ப­ளம், இயல்­பான நடிப்பு, படத்தயா­ரிப்­பில் உண்­மை­யான ஒத்­து­ழைப்பு என்று அனைத்து வகை­யி­லும் நற்­பெ­யரைச் சம்­பா­தித்து வைத்­துள்­ளார்.

“தமிழ்ப் பெண்­கள் திரைப்­ப­டங்­களில் நடிக்க முன்­வ­ரு­வ­தில்லை என்ற பொது­வான கருத்து உண்டு. ஆனால் நான் ஒரு கிரா­மத்­துப் பெண். அங்­கி­ருந்து சென்னை வந்து நடி­கை­யாகி உள்ளேன். இதையே ஒரு சாத­னை­யாக சிலர் கரு­து­கி­றார்­கள்.

“ஜெயம்­கொண்­டம் அருகே உள்ள குக்­கிராமம்­தான் என் சொந்த ஊர். பெண்­க­ளைப் படிக்க வைப்­பதே அங்கு பெரிய விஷ­யம். பள்­ளிப்­ப­டிப்பு முடிந்த கையோடு பெண்களுக்கு திரு­ம­ணம் செய்துகொடுக்க மாப்­பிள்­ளையைத் தேடத்­தொ­டங்­கி­வி­டு­வார்­கள்.

“பெற்­றோ­ருக்கு திரு­ம­ணம் முடிந்­து­விட்டால் கட­மையை நிறை­வேற்­றி­விட்­ட­தாக நினைப்பு. அத­னால் அவ­ச­ரப்­ப­டு­வார்­கள். மேலும், பெண்­க­ளுக்கு என மரி­யா­தையே இருக்­காது.

“எனக்கு சிறு வயது முதலே நடிப்­பில் ஆர்­வம் அதி­கம். அத­னால் வீட்டில் அதை தொடர்ந்து வலி­யு­றுத்தி, நினைத்­த­தைச் சாதித்­து­விட்­டேன். சாதிக்க வேண்­டும் என்ற வெறி இருந்­த­தால்­தான் இந்த அள வுக்கு வர முடிந்­தது. இந்­தப் பய­ணத்­தில் சில சவால்­க­ளை­யும் சிர­மங்­க­ளை­யும் எதிர்­கொண்­டேன் என்­றா­லும், ஒட்­டு­மொத்தத்தில் சுக­மா­கவே உள்­ளது,” என்­கி­றார் ஷீலா ராஜ்­கு­மார்.

பரத நாட்­டி­யத்தை மையப்­ப­டுத்­தும் படத்­தில் நடிக்­கும் வாய்ப்பு தேடி வந்­தால் எக்­கா­ர­ணத்­தைக் கொண்­டும் அதை இழக்­க­மாட்­டா­ராம். தற்­போது ‘ஜோதி’ படத்­தில் பர­தக் கலை­ஞ­ராக நடித்­துள்­ளார். எனி­னும் இது நட­னத்தை மையப்­ப­டுத்­தும் கதை­யல்ல.

“கிருஷ்ணா அண்­ணா­மலை இயக்கி இருக்­கும் இந்­தப் படத்தில் வெற்றி நாய­க­னாக நடித்­துள்­ளார். மருத்­து­வ­மனை­களில் இருந்து சிறார்­க­ளைக் கடத்­தும் சம்­ப­வங்­கள் பர­வ­லாக அதி­க­ரித்­துள்­ளன. அதன் பின்­ன­ணி­யில் நடக்­கும் கதை. இதில் நான்­தான் ஜோதி. பெற்ற குழந்­தை­யைத் தொலைத்­து­விட்டு தவிக்­கும் தாய். நட­னத்­துக்­கும் ஓர­ளவு முக்­கி­யத்­து­வம் இருக்­கும்,” என்­கி­றார் ஷீலா. இந்­தப் படம் விரை­வில் திரை­காண உள்ளது.

பேயாக நடித்த அனு­ப­வம் குறித்து?

“கதைப்­படி ஒரு திரை­ய­ரங்­கில் பல்­வேறு திகில் சம்­ப­வங்­கள் நிக­ழும். அங்கு 42 பேய்­கள் உல­விக் கொண்­டி­ருக்க, நானும் அதில் ஒரு பேயாக இருப்­பேன். எத­னால், எவ்­வாறு பேயாக மாறி­னோம் என ஒவ்­வொ­ரு­வ­ரி­ட­மும் ஒரு கதை இருக்­கும். அந்த வகை­யில் நானும் ஒரு கதை­யைச் சொல்­வேன். சுவா­ர­சி­ய­மான பட­மாக இருக்­கும்,” என்று சொல்­லும் ஷீலா, கதைக்கு முக்­கி­யத்­து­வம் அளிக்­கும் படங்­களில் நடிப்­ப­து­தான் தமக்கு சௌக­ரி­யமாக உள்­ளது என்கிறார்.

‘பேட்ட காளி’ இணை­யத்­தொ­டர் ஜல்­லிக்­கட்டை மையப்­ப­டுத்­திய கதை­யு­டன் உரு­வா­கிறது. இதில் ஜல்­லிக்­கட்­டுக் காளையை வளர்க்­கிற பெண்­ணாக நடிக்­கி­றார் ஷீலா. இதற்­காக அந்த காளை­யு­டன் இரண்டு வாரங்­கள் பழ­கி­னா­ராம். தின­மும் அதன் அரு­கில் அமர்ந்து, பலவி­த­மான கதை­க­ளைப் பேசி, காளை­யு­டன் நெருக்கமாகி உள்­ளார்.

“காளையை வளர்ப்­பது தனிக்­கலை. அதைப் புரிந்து கொண்டு அந்­தக் காளை­யு­டன் கதை பேசி, அதுக்கு நெருக்­க­மா­ன­வ­ளாக மாறி­னேன். உண்­மை­யி­லேயே அது என்­னு­டன் நெருக்­க­மா­கி­விட்­டது. அந்­தத் தொடர் ஒளி­ப­ரப்­பா­ன­தும் பாருங்­கள். அதற்கு நான் சொல்­வது அனைத்­தும் புரி­யும். நான் உட்­காரு எனச் சொன்னால் உட்­கா­ர்ந்துவிடும் என்­றால் பார்த்­துக் கொள்­ளுங்­கள். ஜல்லிக்கட்டுத் திடலுக்கு வெளியே காளையை அடக்கி விட்டேன்,” என்கிறார் ஷீலா.

முன்பு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தவர், இப்போது அதற்கு நேரம் இல்லை என்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!