திரைத் துளிகள்

 தெலுங்குப் படம் ஒன்றில் ஒற்றைப் பாடலுக்கு நடனம் ஆடுகிறார் அஞ்சலி. இது 'புஷ்பா' படத்தில் இடம்பெற்ற சமந்தா பாடலைப் போல் காட்சிப்படுத்தப்பட உள்ளதாம். அஞ்சலி கேட்ட பெருந்தொகையைச் சம்பளமாக அளித்துள்ளது தயாரிப்புத்தரப்பு.

இதற்கிடையே, சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார் அஞ்சலி.

 ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் யோகிபாபு நடிக்க உள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்தப் படத்தில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம் யோகி. மேலும், முழு படத்திலும் அவர் ரஜினியுடன் வருவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல். நெல்சன் ஏற்கெனவே இயக்கிய 'கோலமாவு கோகிலா', 'டாக்டர்', 'பீஸ்ட்' ஆகிய மூன்று படங்களிலும் யோகிபாபு நடித்திருந்தார்.

 "மகிழ்ச்சியாக இல்லாத வாழ்க்கைக்கு நாம்தான் முழுக் காரணமாக இருக்க முடியும்," என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

இந்தி இயக்குநர் கரண் ஜோகர் வழிநடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம், விவாகரத்துக்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த போதே அவ்வாறு குறிப்பிட்டார்.

"நமது எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது வாழ்க்கை கடினமான ஒன்றாக மாறுகிறது. 'கபி குஷி கபி கம்' என்ற படத்தில் நீங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானது என்று காட்டினீர்கள். ஆனால் உண்மையில் அந்த வாழ்க்கை 'கேஜிஎஃப்' படம் போன்று பிரச்சினைகள் நிறைந்ததாகவே உள்ளது," என்றார் சமந்தா. அவரது இந்தப் பதிலுக்கு நாகசைதன்யாவின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 சூர்யாவின் அடுத்த படத்தில் அவரது ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாலா இயக்கத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்து 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் வெளியாக உள்ளது. இதையடுத்து, நடிகர், நடிகையரை ஒப்பந்தம் செய்யத் தொடங்கி உள்ளனர்.

நாயகியாக நடிக்க பூஜாவை அணுகி உள்ளதாகத் தகவல். மேலும் சூர்யாவுடன் மோதும் வில்லனாக இந்தி நடிகர் ஒருவர் தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

 படப்பிடிப்பின்போது காயமடைந்தார் நடிகர் விஷால். தற்போது வினோத் குமார் இயக்கத்தில் 'லத்தி' என்ற படத்தில் விஷால் நடித்து வருகிறார். இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சண்டைக்காட்சி ஒன்றைப் படமாக்கியபோது, விஷாலின் காலில் அடிபட்டது. இதனால் துடிதுடித்துப்போன அவருக்கு முதல் உதவி அளிக்கப்பட்டது. பின்னர் மருத்துவ மனையில் நடத்தப்பட்ட பரிசோதனையின்போது, எலும்பு முறிவு ஏதும் ஏற்படவில்லை என்பதை மருத்துவர்கள் உறுதி செய்த னர். இதையடுத்து அவர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!