புது வீட்டில் குடியேறும் நட்சத்திர தம்பதியர்

திரு­ம­ணம், தேனி­லவு என்று கொண்­டாடி மகிழ்ந்த நயன்­தா­ரா­வும் விக்­னேஷ் சிவ­னும் தங்­கள் பணி­க­ளைத் தொடங்கி உள்­ள­னர்.

இந்­நி­லை­யில், மிக விரை­வில் இரு­வ­ரும் சென்­னை­யில் வாங்­கி­யுள்ள புதிய வீட்­டில் குடி­யேற உள்­ள­னர்.

திரு­ம­ணத்­துக்கு முன்பே சென்னை போயஸ் தோட்­டப் பகுதி­யில் உள்ள அடுக்­கு­மா­டிக் குடியிருப்­பில் இரண்டு வீடு­களை வாங்கி இருந்­தார் நயன்­தாரா.

விக்­னேஷ் சிவன் பெய­ரில் வாங்­கி­யுள்ள வீட்­டில் இரு­வ­ரும் நடத்தி வரும் திரைப்­ப­டத் தயா­ரிப்பு நிறு­வ­னத்­தின் அலு­வ­ல­கம் அமைய உள்­ளது.

மற்­றொரு வீட்­டில் இரு­வ­ரும் குடி­யேற உள்­ள­னர். இந்த இரு வீடு­க­ளுமே சுமார் எட்­டா­யி­ரம் சதுர அடி கொண்­டவை என்­ப­தும் அவற்­றில் பல்­வேறு நவீன வச­தி­களும் வியக்க வைக்­கும் உள் அலங்­கா­ரங்­களும் இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இரு­வ­ரும் வசிக்க உள்ள வீட்­டில் 1,500 சதுர அடி­யில் உள்ள குளி­ய­லறை அமைக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அதில் நீர் வீழ்ச்சி போன்ற அமைப்பு உள்­ள­தா­க­வும் தக­வல்.

ஒரு வீடு மூன்­றா­வது தளத்­திலும் மற்­றொன்று நான்­கா­வது தளத்­தி­லும் உள்­ள­ன­வாம். மேலும் ஒரு வீட்­டில் திரை­ய­ரங்கு போன்ற அமைப்பு இருப்­ப­தா­க­வும் இவர்­க­ளுக்கு என தனி மின்­தூக்கி உள்­ளது என்­றும் கூறப்­ப­டு­கிறது.

இரு வீடு­க­ளுக்­கான உள் அலங்­கா­ரங்­க­ளுக்கு மட்­டும் 25 கோடி ரூபாய் செல­வி­டப்­பட்­டுள்­ளது. மிக விரை­வில் இரு வீடு­க­ளுக்­கும் புது மனைப் புகு­விழா நடத்த திட்­ட­மிட்­டுள்­ள­னர்.

அதில் பங்­கேற்க நெருக்­க­மான நண்­பர்­க­ளுக்கு மட்­டும் அழைப்பு விடுக்­கப்­படும் எனத் தெரி­கிறது.

இனி திரைப்­ப­டங்­களில் நடிப்­ப­தைக் குறைத்­துக்­கொள்­வது என்­றும் சொந்­தப்­ப­டத் தயா­ரிப்­பு­களை அதி­கப்­ப­டுத்­து­வது என்­றும் நயன்­தாரா முடிவு செய்­துள்­ளா­ராம்.

அஜித் படத்தை இயக்கி முடித்த பிறகு நயன்­தாரா தனி நாய­கி­யாக நடிக்­கும் படத்தை விக்­னேஷ் சிவன் இயக்­கு­வார் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதியர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!