மேடையில் கதறி அழுத கதாநாயகி

திரை­யு­ல­கில் முத­லீடு செய்த, இப்­போது செய்­கின்ற நடி­கை­களை விரல்­விட்டு எண்­ணி­வி­ட­லாம். அந்­தப் பட்­டி­ய­லில் துணிச்­ச­லு­டன் இணைந்­துள்­ளார் ஐஸ்வர்ய லட்­சுமி.

அவர் இணை தயா­ரிப்­பா­ள­ராக உள்ள 'கார்கி' படம் விரை­வில் வெளி­யீடு காண உள்­ளது.

கெள­தம் ராம­ச்சந்­தி­ரன் இயக்கி உள்ள இந்­தப் படத்­தில், சாய் பல்­லவி நாய­கி­யாக நடித்­துள்­ளார். கோவிந்த் வசந்தா இசை­ய­மைத்­துள்­ளார்.

சூர்யா, ஜோதி­கா­வின் 2டி நிறு­வ­னம் இந்­தப் படத்தை வெளி­யிட உள்­ளது. ஒரே சம­யத்­தில் தமிழ், தெலுங்கு, கன்­ன­டம் என மூன்று மொழி­களில் உரு­வாகி உள்­ளது இப்­ப­டம். அண்­மை­யில் இதன் முன்­னோட்­டக் காட்­சித் தொகுப்பை வெளி­யிட்­ட­னர்.

தமி­ழில் 'ஆக்­‌ஷன்' படத்­தில் நடித்­துள்­ளார் ஐஸ்­வர்யா லட்­சுமி. மணி­ரத்­னம் இயக்­கி­யுள்ள 'பொன்­னி­யின் செல்­வன்' படத்­தி­லும் முக்­கிய கதா­பாத்­தி­ரத்தை ஏற்­றுள்­ளார்.

தமி­ழில் மட்­டு­மல்­லா­மல், தெலுங்கு, மலை­யா­ளத்­தி­லும் கவ­னம் செலுத்தி வரும் ஐஸ்­வர்ய லட்­சு­மிக்கு நல்ல படைப்­பு­களில் நடிப்­ப­து­டன், அவற்­றைத் தயா­ரிக்க வேண்­டும் என்ற விருப்­ப­மும் நீண்ட நாள்­க­ளா­கவே மன­தில் உள்­ள­தாம்.

இந்­நி­லை­யில் கார்கி படத்­தின் முன்­னோட்­டக் காட்­சித்­தொ­குப்பு வெளி­யீட்டு விழா­வில் கலந்­து­கொண்டு பேசி­ய­போது, தனது உணர்­வு­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யா­மல் அவர் அழு­த­தைக் கண்டு நிகழ்­வுக்கு வந்­த­வர்­கள் பத­றிப்­போ­யி­னர். அவரை சாய்­பல்­லவி, இயக்­கு­நர் கௌதம் ஆகி­யோர் சமா­தா­னப்­ப­டுத்­தி­னர். இதை­ய­டுத்து சாய் ­பல்­லவி பேசும்­போது, ஐஸ்­வர்­யா­வின் அழு­கைக்­கான கார­ணத்தை விவ­ரித்­தார்.

"இந்­தப் படம் கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக தயா­ரிப்­பில் உள்­ளது. இந்­தக் கதை உரு­வாக்­கப்­பட்ட நாள் முதல் அத­னு­டன் பய­ணிக்­கி­றார் ஐஸ்­வர்ய லட்­சுமி. அத­னால்­தான் கொஞ்­சம் உணர்ச்­சி­வ­சப்­பட்­டு­விட்­டார். அவ­ரது தவிப்பை என்­னால் புரிந்­து­கொள்ள முடி­கிறது," என்­றார் சாய் பல்­லவி.

இதை­ய­டுத்­துப் பேசிய ஐஸ்­வர்ய லட்­சுமி, "சாய் பல்­லவி இல்­லா­மல் இந்­தப் படம் சாத்­தி­ய­மில்லை. இந்­தப் படத்­திற்­காக உழைத்த ஒட்­டு­மொத்த படக்­கு­ழு­விற்­கும் நன்றி," என்­றார்.

இறு­தி­யில் பேசிய இயக்­கு­நர் கௌதம், 'கார்கி' படத்­தின் தயா­ரிப்­புக்­காக பல நண்­பர்­கள் உதவி செய்­த­தா­க­வும் அதில் முதல் நப­ராக ஐஸ்­வர்ய லட்­சுமி உத­விக்­க­ரம் நீட்­டி­ய­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

ஐஸ்­வர்யா இது­வரை தாம் சம்­பா­தித்த மொத்த பணத்­தை­யும் இந்­தப் படத்­தில் முத­லீடு செய்­துள்­ள­தா­க­வும் நெகிழ்ச்­சி­யு­டன் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!