‘சில்க்’கின் கண்ணீர் கடிதம்

கவிதை பேசும் கண்­க­ளால் கவர்ந்­தார் என்­று­தான் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா குறித்து கோடம்­பாக்­கத்­தி­னர் இன்­ற­ள­வும் புகழ்ந்து கூறு­கின்­ற­னர்.

இளம் வய­தி­லேயே தன் வாழ்க்­கையை முடித்­துக்­கொண்ட சில்க் ஸ்மிதா, 'வண்­டிச்­சக்­க­ரம்' படம் மூலம் அறி­மு­க­மாகி, பல படங்­களில் கவர்ச்சி நட­ன­மாடி, குணச்­சித்­திர வேடங்­க­ளி­லும் நடித்­தார்.

இந்­நி­லை­யில், அவர் எழு­திய கடைசி கடி­தம் சமூக ஊட­கங்­களில் பர­வ­லா­கப் பகி­ரப்­பட்டு வரு­கிறது. அதில், ஒரு நடி­கை­யாக தான் அனு­ப­வித்த வேத­னை­கள் குறித்து தமக்கு மட்­டுமே தெரி­யும் என அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"என்னை யாருக்­கும் பிடிக்­க­வில்லை. பல­ரின் செயல்­கள் எனக்கு தொல்லை தரு­வ­தா­கவே இருந்­தன. ஆனால் மர­ணத்­திற்கு என்னை பிடித்­துள்­ளது. பலர் என் உட­லை­யும் சிலர் என் உழைப்­பை­யும் பயன்­ப­டுத்­திக் கொண்­ட­னர்.

ஒரு­வர் எனக்கு வாழ்க்கை கொடுப்­ப­தாக ஐந்து வரு­ட­மாக ஏமாற்றி வரு­கி­றார். நான் உண்­மை­யாக நேசித்த ஒரு­வர் என்னை ஏமாற்­றி­விட்­டார். அவர்­க­ளால் எனக்கு நடந்த கொடு­மையை என்­னால் தாங்க முடி­ய­வில்லை," என்று சில்க் ஸ்மிதா குறிப்பிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!