மிரள வைக்கும் தமிழர் காவியம்

அருள்மொழி வர்மன் என்கிற இராசராச சோழனாக நடிகர் ஜெயம் ரவி.

ஆதித்ய கரிகாலனாக நடிகர்

விக்ரம்.

வாணர்குலத்து வல்லவரையன் வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தி.

கதையின் நாயகியாக, அழகிய நந்தினியாக நடிகை ஐஸ்வர்யா ராய்.

சுந்தரசோழரின் மகள் குந்தவை பிராட்டியாக நடிகை த்ரிஷா.

இணை­யத்­தில் பல­ரும் பார்ப்­பது, பேசு­வது எல்­லாம் 'பொன்­னி­யின் செல்­வன்' படம் பற்­றித்­தான். சனிக்­கி­ழமை இரவு நில­வ­ரப்­படி இந்­தப் படத்­தின் முன்­னோட்­டக் காட்­சியை சுமார் 7 மில்­லி­யன் பேர் இணை­யத்­தில் பார்த்­தி­ருக்­கின்­ற­னர்.

'பாகு­பலி' அளித்த ஊக்கம்

'பாகு­பலி' படத்­தின் இரண்டு பாகங்­க­ளின் பிர­ம்மாண்ட உரு­வாக்­க­மும் அதற்கு உலக அள­வில் கிடைத்த கற்­ப­னைக்­கெட்­டாத வர­வேற்­பும் இந்­திய சினி­மா­வுக்­குப் புதிய சாள­ரங்­க­ளைத் திறந்­து­

விட்­டன.

மன்­ன­ராட்சிக் காலத்தை அடிப்

­ப­டை­யா­கக் கொண்ட பிர­ம்மாண்ட படங்­க­ளுக்கு உலக அள­வில்

ரசி­கர்­க­ளி­டையே பெரும் வர­வேற்பு இருப்­பதை 'பாகு­பலி'யின் வெற்றி அடிக்­கோ­டிட்­டுக் காட்­டி­யது. 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' போன்ற இணை­யத் தொடர்­க­ளுக்கு இளை­ஞர்­கள் அளித்­து­வ­ரும் வர­வேற்­பும் இதை உறு­தி­ப்ப­டுத்­தி­யுள்­ளது.

இவற்­றின் மூலம் தன்­னு­டைய கன­வு­மட்­டு­மல்­லா­மல் ஒட்­டு­மொத்த தமிழ் சினி­மா­வின் கன­வுப் படைப்­பான 'பொன்­னி­யின் செல்­வன்' திரைப்­ப­டத்தை மீண்­டும் கையி­லெ­டுக்­கும் ஊக்கத்தையும் உறு­தி­யை­யும் பெற்­றார் மணி ரத்­னம்.

எம்.ஜி.ஆரின் முதல் முயற்சி

கடந்த 1958ல் 'பொன்­னி­யின் செல்­வன்' கதை­யைத் திரைப்­ப­டம் ஆக்­கு­வ­தற்­கான உரி­மத்தை பெற்­றார் எம்.ஜி.ஆர். பின்பு, அத­னைத் தானே தயா­ரித்து, இயக்­கு­வது என முடி­வெ­டுத்­தார்.

பத்­மினி, சாவித்ரி, ஜெமினி கணே­சன், நம்­பி­யார் உள்­ளிட்ட பல­ரை­யும் தேர்வு செய்து படத்­திற்­கான அறி­விப்­பும் அப்­போது வெளி­யா­னது. இதில் வந்­தி­யத்­தே­வன் மற்­றும் அருள்­மொழி வர்­மன் கதாப்­பாத்­தி­ரம் இரண்­டி­லுமே எம்.ஜி.ஆரே நடிக்க முடிவு செய்­தி­ருந்­தார்.

ஆனால், அதற்கு பிறகு ஏற்­பட்ட விபத்து ஒன்­றில் இருந்து குண­மாக எம்.ஜி.ஆருக்கு பல மாதங்­கள் ஆனது. அத­னால், அந்த சம­யத்­தில் அவர் நடிக்க ஒப்­பந்­த­ம்

ஆ­கி­யி­ருந்த பல படங்­களை முடித்துக் கொடுக்க வேண்­டிய சூழல் இருந்ததே இயக்­கு­ந­ராக 'பொன்­னி­யின் செல்­வன்' படத்தை

எம்.ஜி.ஆரால் சாத்­தி­யப்­ப­டுத்த முடி­யா­மல் போன­தற்கு முக்­கிய

கார­ணம்.

அதன் பிறகு 1990களில் கமல்­ஹா­சன் 'பொன்­னி­யின் செல்­வன்' நாவலை பட­மாக்க நினைத்­தா­லும் 'மரு­த­நா­ய­கம்' போலவே அது­வும் அவ­ருக்கு கன­வாகிப் போனது.

ஒரு­வ­ழி­யாக, ஒரு முன்­னோ­டித் திரைக்­க­லை­ஞர் மூலம் ஒரு பெரும் இலக்­கி­யப் படைப்­பைத் திரை­யில் காணும் கனவு நன­வா­கப் போகிறது.

நடி­கர்­க­ளின் கதா­பாத்­தி­ரங்­கள்:

இந்த காவி­யத்­தின் நாய­கர்

களைப் பற்றி பேச­வேண்­டும் அல்­லவா? இந்­தக் கதை­யின் நாய­கன் 'பொன்­னி­யின் செல்­வன்' என்று அழைக்­கப்­படும் அருள்­மொழி

வர்­மன். இந்­தக் கதா­பாத்­தி­ரத்­தில் ஜெயம் ரவி நடிக்­கி­றார். கதை­யின் நாய­கன் இவர்­தான்.

கதை முழு­வ­தும் வரு­ப­வர்

வல்­ல­வ­ரா­யன் வந்­தி­யத்­தே­வன். இந்த கதா­பாத்­தி­ரத்­தில் நடி­கர் கார்த்தி நடிக்­கி­றார்.

ஆதித்ய கரி­கா­ல­னாக பலம் வாய்ந்த வீர­னாக கர்­ஜிக்­கி­றார் சியான் விக்­ரம்.

அழ­கி­லும் அறி­வி­லும் தன்னை மிஞ்­சக்­கூ­டிய ஆள் யார் என்று கேட்­கும் குந்­தவை கதா­பாத்­தி­ரத்­தில் த்ரிஷா நடித்­தி­ருக்­கி­றார்.

இந்­தக் கதை­யின் முக்­கிய கதா­பாத்­தி­ர­மாக சுவா­ர­சி­ய­மான ஆளாக வலம் வர இருக்­கி­றார் நந்­தி­னி­யாக ஐஸ்­வர்யா ராய். இது அவ­ருக்கு மிக­வும் பொருத்­த­மான கதா­பாத்­தி­ரம்.

அடுத்­த­தாக பூங்­கு­ழலி வேடத்­தில் ஐஸ்­வர்ய லட்­சுமி நடிக்­கி­றார்.

மேலும் பெரிய பழு­வேட்­ட­ரை­

ய­ராக சரத்­கு­மார், சின்ன பழு­வேட்­ட­ரை­ய­ராக பார்த்­தி­பன், கடம்­பூர்

சம்­பு­வ­ரை­ய­ராக நிழல்­கள் ரவி,

அநி­ருத்த பிரம்­ம­ரா­ய­ராக பிரபு, சேந்­தன் அமு­த­னாக அஸ்­வின், கந்­தன் மாற­னாக விக்­ரம் பிரபு, மது­ராந்­த­க­னாக அர்­ஜுன் சிதம்­ப­ரம், பாத்­தி­பேந்­திர பல்­ல­வ­னாக ரஹ்­மான், வான­தி­யாக ஷோபிகா நடிக்­கி­றார்கள்.

நாட்­டின் அர­சர் சுந்­த­ர­சோ­ழ­ராக பிர­காஷ்­ரா­ஜும் அரசி செம்­பி­யன் மாதே­வி­யாக பழம்­பெ­ரும் நடிகை ஜெய­சித்­ரா­வும் நடிக்­கின்­ற­னர்.

இவர் இல்லை என்­றால் கதை­யில் நகைச்­சு­வையே இல்லை என­லாம். ஒவ்­வொரு காட்­சி­யி­லும் நகைச்­சு­வை­யாக வலம் வரு­கி­றார் ஆழ்­வார்­க­டி­யன் நம்­பி­யாக ஜெய­ராம்.

எதி­ர­ணி­யைச் சேர்ந்த மந்­தி­ர­வாதி ரவி­தா­சன் கதா­பாத்­தி­ரத்­தில் நடிப்­ப­வர் கிஷோர். சோமன்

சாம்­ப­வன் கதா­பாத்­தி­ரத்­தில் ரியாஷ் கானும் அந்­தக் கூட்­டத்­தின் இளைய இள­வ­ர­ச­ராக மாஷ்­டர் ராக­வ­னும் நடிக்­கி­றார்­கள்.

இதற்­கி­டை­யில் மணி­மே­கலை, மது­ராந்­த­கன் கதா­பாத்­தி­ரங்­களில் நடிப்­ப­வர்­கள் யார் என்று இன்­னும் அறி­விக்­கப்­ப­ட­வில்லை.

இறு­தி­யாக மந்­தா­கினி அல்­லது ஊமை ராணி என்ற பெய­ரில் கதை­யின் முக்­கி­ய­மான கதா­பாத்­தி­ர­மாக ஐஸ்­வர்யா ராய்­தான் நடிக்­கி­றார். இந்­தப் படத்­தில் இவர் அம்­மா­வா­க­வும் பெண்­ணா­க­வும் இரண்டு வேடங்­களில் நடிக்­கி­றார்.

ஒவ்­வொரு கதா­பாத்­தி­ரத்­தை­யும் அதிக முக்­கி­யத்­து­வம் கொடுத்து மணி­ரத்­னம் பட­மாக்கி உள்­ள­தா­க­கூறப்­ப­டு­கிறது. இந்த நட்­சத்­திர பட்­டா­ளங்­க­ளின் நடிப்­பைப் பார்க்க உலக மக்­கள் காத்­தி­ருக்­கின்­ற­னர்.

ஆடியோ உரிமை:

இந்­நி­லை­யில் இந்­தப் படத்­தின் ஆடியோ உரிமை மிகப்­பெ­ரிய தொகைக்கு விற்­ப­னை­யா­கி­யுள்­ள­தாகக் கூறப்­ப­டு­கிறது. இது­வரை பிர­பாஸ் நடிப்­பில் உரு­வான 'சலார்' படத்­திற்கு ஆடியோ உரிமை 19 கோடி ரூபாய். ஆனால் அதை­யும் தாண்டி 'பொன்­னி­யின் செல்­வன்' படத்­தின் ஆடியோ உரிமை 24 கோடி ரூபாய்க்கு விற்­பனை ஆகி­யுள்­ளது.

படத்­தில் இணைந்த கமல்:

இந்­தப் படத்­தில் நடி­கர் கமல்­ஹா­ச­னும் இணைந்­துள்­ள­தாக ஆச்­ச­ரி­ய­மான தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது. அதா­வது 'பொன்­னி­யின் செல்­வன்' படத்­தில் கதை விளக்­கம் இருக்­கும். அந்­தக் கதை விளக்­கத்தை கமல்­ஹா­சன் தன்­னு­டைய கணீ­ரென்ற குரல் மூலம் விளக்­கு­கி­றார்.

மணி­ரத்­னத்­தின் இயக்­கத்­தில் கமல்­ஹா­ச­னின் குர­லில் படத்தை பெரிய திரை­யில் பார்க்க அனை­வ­ரும் ஆவ­லு­டன் காத்­தி­ருக்­கின்­ற­னர்.

ஏற்­கெ­னவே கமல்­ஹா­சன் 'பொன்­னி­யின் செல்­வன்' திரைப்­

ப­டத்தை தயா­ரிக்க கடந்த சில ஆண்­டு­க­ளுக்கு முன் முயன்­றார். ஆனால் அவ­ரது முயற்சி வெற்­றி­ய­டை­ய­வில்லை. எனி­னும் தற்­போது மணி­ரத்­னம் இயக்­கத்­தில் உரு­வா­கி­யுள்ள 'பொன்­னி­யின் செல்­வன்' படத்­தில் நடிக்­கா­

விட்­டா­லும் ஓர் அங்­க­மாக மாறி­யுள்­ளது கமல் ரசி­கர்­க­ளுக்கு இன்ப அதிர்ச்­சி­யை அளித்திருக்கிறது.

இசை

'பொன்­னி­யின் செல்­வன்' படத்­தின் குறு முன்­னோட்­டக் காட்சி அண்­மை­யில் வெளி­யா­னது. அதில் இடம்­பெற்­றுள்ள ஏ.ஆர்.ரகு­மா­னின் பின்­னணி இசை பிர­மா­த­மாக இருப்­ப­தாக பல­ரும் கருத்து தெரி­வித்­துள்­ள­னர்.

சோழர் காலத்து கதையாக

உரு­வாகி இருப்­ப­தால் அந்த கால­கட்­டத்­தின் இசைக்­க­ரு­வி­களை கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக சேக­ரித்து அதற்­கான பின்­னணி இசையை ரகு­மான் அமைத்­தி­ருப்­

ப­தாக படக்­குழு ஒரு தக­வலை வெளி­யிட்­டுள்­ளது.

முக்­கி­ய­மாக சோழர் காலத்­தில் பயன்­ப­டுத்­தப்­பட்ட பம்பை, உடுக்கை, உருமி, தம்­பட்­டம், கொம்பு, பஞ்­ச­முக வாத்­தி­யம் உள்­பட பல இசைக்­க­ரு­வி­களை இந்த படத்­தின் பின்­னணி இசை­யில் பயன்­ப­டுத்­தி­யுள்­ளார் ரகு­மான். ஆனால் சோழர் காலத்­தைச் சேர்ந்த பல இசைக்­க­ரு­வி­கள் தமி­ழ­கத்­தில் கிடைக்­காத நிலை­யில் சில இசைக் கரு­வி­களை தாய்­லாந்து நாட்­டில் வாங்கி வந்து பின்­னணி இசை அமைத்­தி­ருக்­கி­றார்.

இப்­படி சோழர் காலத்தை திரை வடி­வப்­ப­டுத்தி இருக்­கும் மணி­ரத்­னத்­தின் காட்­சி­க­ளுக்கு உயிர் கொடுக்க வேண்­டும் என்­ப­தற்­காக அந்த கால­கட்­டத்­தில் பயன்­ப­டுத்­தப்­பட்ட இசைக்­க­ரு­வி­களை வாங்கி வந்து படம் முழு­வ­தும் அசல்

இசைக் கருவிகளை வைத்தே பின்­னணி இசை அமைத்­தி­ருக்­கும் ஏ.ஆர்.ரகு­மானைப் பாராட்­டு­கிறது திரை­யு­ல­கம்.

பட விளம்­ப­ரம்:

'பொன்­னி­யின் செல்­வன்' திரைப்­ப­டத்தை தமி­ழ­கத்­தைத் தாண்டி, மற்ற மாநி­லங்­க­ளி­லும் பிரம்­மாண்­ட­மாக வெளி­யிட வேண்­டும் என தயா­ரிப்­பா­ளர் சுபாஸ்­க­ரன் தன் நிறு­வ­னத்­தி­ன­ருக்கு அறி­வு­றுத்­தி­யுள்­ளார்.

அதி­லும் எஸ்.எஸ்.ராஜ­மௌலி இயக்­கத்­தில் வெளி­யான 'ஆர்.ஆர்.ஆர்', யஷ் நடிப்­பில் வெளி­யான 'கே.ஜி.எஃப்-2' ஆகிய படங்­களை விட பிர­ம்மாண்­ட­மான முறை­யில் வெளி­யிட வேண்­டும் என கூறி­யுள்­ளார்.

இரண்டு பாகங்­க­ளாக உரு­வாகி இருக்­கும் 'பொன்­னி­யின் செல்­வன்' முதல் பாகம் செப்­டம்­பர் 30ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலை­யா­ளம், கன்­ன­டம், இந்தி என 5 மொழி­களில் வெளி­யாக உள்­ளது. அதற்­கான வேலை­களில் இயக்­கு­நர் மணி­ரத்­னம் ஈடு­பட்டு வரு­கி­றார்.

அதே­ச­ம­யம் படத்தை பிர­ப­லப்­

ப­டுத்­தும் வேலை­க­ளி­ல் தயா­ரிப்பு நிறு­வ­னம் இறங்­கி­யுள்­ளது. அடுத்த கட்­ட­மாக பாடல் வெளி­யீட்டு விழாவை பிர­ம்மாண்­ட­மாக நடத்த திட்­ட­மிட்டு இருக்­கிறது.

மணி ­ரத்­னத்­தின் நெகிழ்ச்சி:

இந்­தப் படத்­தின் குறு முன்­னோட்­டக் காட்­சி­யில் இயக்­கு­நர் பேசும்­போது, "என்­னு­டைய முதல் நன்றி கல்­கிக்கு! மக்­கள் தில­கம் எம்.ஜி.ஆர். இப்­ப­டத்தை எங்­க­ளுக்­கா­கத்­தான் விட்­டு­வைத்­தார் என்று இன்­று­தான் எனக்­குப் புரிந்­தது.

"இந்­தப் படம் பல­ரின் கனவு.பலர் இதைப் பட­மாக்க முயற்சி செய்­துள்­ளார்­கள். நானே 1980, 2000, 2010 என மூன்று முறை முயற்சி செய்­துள்­ளேன்.

"எனவே எவ்­வ­ளவு பொறுப்­பு­கள் உள்­ளன என்­பது எனக்­குத் தெரி­யும். இப்­போது இதைச் செய்து முடித்­தது குறித்து நான் பெரு­மைப்­

ப­டு­கி­றேன்.

"பொன்­னி­யின் செல்­வன்' நாவலை வெற்­றி­க­ர­மான மேடை நாட­க­மாக அரங்­கேற்­று­வ­தில் முக்­கி­யப் பங்­க­ளித்த இளங்கோ கும­ர­வே­லும் இந்­தப் படத்­திற்­கான திரைக்­கதை-வச­னம் எழு­தும் பணி­யில் பங்­கேற்­றி­ருப்­பது நம்­பிக்­கை­

அளிக்­கிறது.

"மேலும் ஏ.ஆர்.ரஹ்­மான், மற்­றும் நடி­கர்­கள், தொழில்­நுட்­பக்­

க­லை­ஞர்­கள் என எல்­லோ­ரும் சேர்ந்து உதவி செய்­தி­ருக்­கி­றார்­கள்.

"கொரோனா காலத்­தி­லும் பாது­காப்பு உடை­க­ளு­டன் வந்து நடித்­துக் கொடுத்­தார்­கள். இப்­ப­டிப் பல்­வேறு சிர­மங்­க­ளு­டன் இப்­ப­டத்­தில் என்­னு­டன் வேலை செய்த அனை­வ­ருக்­கும் நன்றி," என்று நெகிழ்ச்­சி­யு­டன் பேசினார்.

70 வயதை நெருங்­கிக்­கொண்­டி­ருக்­கும் மணி ரத்­னம், மிகக்

கடு­மை­யான உழைப்­பைக் கோரும் இந்­தப் படத்­தின் பெரும்­பா­லான பணி­களை முடித்­ததோடு அதன் வெளி­யீட்­டுத் தேதி­யை­யும் அறி­வித்­து­விட்­டார்.

இன்­றும் குறை­யாத எதிர்­பார்ப்பு

'பொன்­னி­யின் செல்­வன்' திரைப்­ப­டம் தயா­ரா­கிறது என்­பது அதன் கதை­யைத் தெரிந்­து­கொள்­ளும் ஆர்­வம் இன்­றைய இளை­ஞர்­க­ளி­டையே அதி­க­ரித்­தி­ருக்­கிறது. ஆங்­கி­லம் மட்­டுமே தெரிந்த சில தமி­ழர்­களும் 'பொன்­னி­யின் செல்­வ­'னைத் தெரிந்­து­கொள்ள ஆர்­வம் காட்­டு­வது மகிழ்ச்­சி­ய­ளிக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!