திரைத் துளிகள்

 'ஜெயிலர்' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிகர் வசந்த் ரவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 'தரமணி', 'ராக்கி' போன்ற படங்களில் கதாநாயகனாக 'நடித்துள்ளார் வசந்த் ரவி. 'ஜெயிலர்' படத்தில் ஐஸ்வர்யா ராய் நாயகியாகவும் ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். இவர்களுடன் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. எனினும் அவர் தற்போது 'மாவீரன்', 'பிரின்ஸ்' ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால், வேறு இளம் நடிகர் ஒருவர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், ரஜினிக்கு வில்லனாகி உள்ளார் வசந்த் ரவி.

 தாம் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களுக்காக படப்பிடிப்புக்கு முன்பே தம்மை தயார்படுத்திக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார் நடிகை ரெஜினா. குறிப்பாக அவர் அண்மையில் நடித்த இணையத் தொடரில் விமானப்படை அதிகாரியாக நடித்துள்ளார். "இதுபோன்ற கதாபாத்திரங்களில் ஏனோதானோ என்று நடிக்க இயலாது. முழு அர்ப்பணிப்புடன் நடிக்க வேண்டியிருக்கும். கடுமையான உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு தேவை. நல்ல வேளையாக, இயல்பாகவே எனக்கு இவை இரண்டிலும் ஆர்வம் உண்டு. அதனால் முழு ஈடுபாடு காட்ட முடிந்தது.," என்று சொல்லும் ரெஜினா தற்போது 'சூர்ப்பனகை', 'கருங்காப்பியம்', 'பார்டர்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

 தி லெஜண்ட் படம் வெளியீடு கண்டுள்ளது. படத்தின் வசூல் குறைவாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அப்படத்தின் நாயகி இருபது கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக வெளியான தகவல் கோடம்பாக்கத்தை அதிர வைத்துள்ளது. சரவணன் அருள் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நடிக்க முன்னணி நாயகிகள் எவரும் முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து ஊர்வசி ரௌடேலா பெரிய தொகையை சம்பளமாகக் கேட்க, அதற்கு ஒப்புக்கொண்டு அவரை நாயகியாக ஒப்பந்தம் செய்தனர். இந்நிலையில், அவர் இருபது கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக வெளியான தகவல், தற்போது முன்னணியில் உள்ள நடிகைகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. நயன்தாரா கூட ஆறு கோடி ரூபாய் சம்பளத்துக்கு ஒப்புக்கொள்ளும் நிலையில், அவரை விட ஊர்வசி மூன்று மடங்கு அதிக சம்பளம் பெற்றதாகக் கூறப்படுகிறது. எனினும் ஊர்வசி தரப்பில் இது பொய்யான தகவல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 'வட சென்னை' படத்தின் அடுத்த பாகம் நிச்சயம் உருவாகும் என்று மறைமுக மாகச் சொல்லியுள்ளார் இயக்குநர் வெற்றி மாறன். இரண்டாம் பாகம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து தகவல் கேட்டு வருகின்ற னர். இந்நிலையில் 'திருச்சிற்றம்பலம்' பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய வெற்றி மாறன், 'வாடிவாசல்', 'விடுதலை' ஆகிய இரு படங்களையும் முடித்த கையோடு தனுஷுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், 'வடசென்னை' படத்துக்காக ஏற்கெனவே எடுக்கப் பட்ட 40 நிமிடக் காட்சிகள் கைவசம் உள்ளதாகவும் இரண்டாம் பாகத்தில் அவை பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். எனவே எனது அடுத்த அறிவிப்பில் தனுஷுடன் இணையும் படம் குறித்த தகவல் வெளியாகும் என்றும் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!