திரைத் துளிகள்

 நயன்தாரா ஷாரூக்கானுடன் 'ஜவான்' என்ற இந்திப் படத்தில் நடித்துவருகிறார். இப்படத்திற்கு பெரும் சம்பளம் பெற்றதாகக் கூறப்படும் நிலையில், தமிழில் அடுத்து தான் நடிக்க உள்ள புதிய படத்திற்கு ரூ.10 கோடியை சம்பளமாக நயன்தாரா கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர், "படத்தின் பாதி பட்ஜெட்டை நீங்களே எடுத்துக் கொண்டால் படம் எடுப்பது எப்படி?" என்று விழிபிதுங்கியுள்ளார். "இப்போது நான் பாலிவுட் நடிகையாகிவிட்டதால் சம்பளமும் உயர்ந்துவிட்டது. உங்களுக்கு வேண்டுமெனில் நடிக்கிறேன். இல்லையேல் போய்க்கொண்டே இருக்கிறேன்," என்று கூறி விட்டாராம். வேறு வழியின்றி, நயன்தாரா கேட்ட தொகையைக் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளனர்.

 நடிகர் அருண்விஜய் நடித்த 'பார்டர்' திரைப்படம் இம்மாதம் 31ஆம் தேதி வெளியீடு காண உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராணுவம் தொடர்பான கதைக்களத்துடன், வித்தியாசமாக உருவாகி உள்ள இப்படத்தில் அரவிந்த் சந்திரசேகர் என்ற அதிகாரியாக அருண் விஜய் நடித்திருக்கிறார். ஸ்டெபி படேல் அருண் விஜய்யின் ஜோடியாகவும் ரெஜினா கசான்ட்ரா முக்கிய பாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தலைநகர் டெல்லியில் அதிகாலையில் எழுந்து 10 கி.மீ. தூரம் நடந்தும் ஓடியும் உடற்பயிற்சியில் ஈடுபட்ட காணொளியைத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்தக் காணொளி தற்போது வேகமாகப் பரவி வருகிறது. "சில நேரங்களில் உங்கள் வழக்கத்தை மாற்றிக் கொள்வது நல்லது. பூங்காவில் நடை, மூடுபனியில் ஓட்டப் பயிற்சி, மிதிவண்டி பயிற்சியில் ஈடுபடலாம். இது மனதுக்கு இதம் தரும். டெல்லி சாலையில் 10 கி.மீ. நடை, ஓட்ட அனுபவம் அருமையாக இருந்தது," எனப் பதிவிட்டுள்ளார்.

 நடிகர் விஜய் தனது வீட்டின் வாசலில் அம்மன், விநாயகர் சிலைகளை வைத்து திடீரென மாற்றம் செய்துள்ளார்.

குறிப்பாக ஒரு சில அரசியல் கட்சி பிரமுகர்கள் விஜய்யை குறிப்பிடும்போது ஜோசப் விஜய் என அவரது மத அடையாளத்தையும் சேர்த்துக் குறிப்பிட்டு வருகின்றனர். இவ்வாறு தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் விஜய் தனது வீட்டின் முன்பு சிலையை வைத்துள்ளதாக விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தளங்களில் பரவி வருகின்றன.

 விஜய் தேவர கொண்டா, ராஷ்மிகாவுக்கு இடையிலான காதல் உறவு முறிந்து விட்டதாக டோலிவுட்டில் தகவல் பரவியுள்ளது. கடந்த 2018ல் வெளியான 'கீதா கோவிந்தம்' படத்தில் இவர்கள் ஜோடியாக நடித்தது முதல் இவர்கள் காதலிப்பதாக கிசுகிசு பரவியது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களிலும் இருவரும் இணைந்தே சுற்றி வந்தனர். இந்நிலையில், 'லைகர்' படத்தில் விஜய் தேவரகொண்டாவின் ஜோடியாக பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே நடித்துள்ளார். பாலிவுட்டில் கிடைத்துள்ள புதிய நட்பின் காரணமாக, மற்ற சில நடிகைகளுடன் விஜய் தேவரகொண்டா பழகிவருகிறாராம். இது ராஷ்மிகாவுக்கு பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!