‘உடற்பயிற்சி வெறியர் ஆர்யா’

ஆர்யா நடிப்­பில் உரு­வாகி வரு­கிறது ‘கேப்­டன்’. இதற்கு முன்பு `டிக் டிக் டிக்’, `டெடி’ ஆகிய படங்களின் மூலம் நம்­பிக்­கை­ஊட்­டிய இயக்­கு­நர் சக்தி சௌந்­தர்­ரா­ஜ­னோடு மீண்­டும் கூட்­டணி அமைத்­துள்­ளார் ஆர்யா.

இப்படத்­தின் முதல் தோற்­றச் ­சு­வ­ரொட்டி அண்­மை­யில் வெளி­யாகி, ரசி­கர்­கள் இடையே எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது. முற்­றி­லும் மாறு­பட்ட திரைக்­க­தை­யு­டன் களமிறங்கி இருக்கிறார் ஆர்யா.

“எல்லா நாடு­க­ளி­லும் நெடுஞ்­சா­லை­கள் இருக்­கும். அவற்­றில் நூற்­றுக்­க­ணக்­கான வாக­னங்­கள் தின­மும் செல்லும். அதே­ச­ம­யம் ஒற்றைய­டிப் பாதை­களும் இருக்­கும். அவற்­றில் நமக்கு முன்பு யாரே­னும் ஒரு­வ­ரா­வது சென்­றி­ருப்­பார். பாதையே இல்­லா­மல் திசை­காட்­டியை உத­விக்கு வைத்­துக்கொண்டு முன்­னே­றிச் சென்­றால் எப்­படி இருக்­கும். அதை விவ­ரிக்­கும் வகை­யில் இருக்­கும் இந்­தப் படம்.

“ராணு­வப் பின்­பு­லம் கொண்ட கதை. இதில் நாய­க­னின் கதா­பாத்­தி­ரம் புது ரக­மாக இருக்­கும். வெற்றிச் செல்­வன் என்ற ராணு­வ கேப்­டனை மையப்­ப­டுத்­தி­யுள்ள கதை. முழுப் பட­மும் அவ­ரைச் சுற்­றியே பின்­னப்­பட்­டுள்­ளது. கேப்­டன் வெற்­றிச் செல்­வ­னின் தனிப்­பட்ட பிரச்­சி­னை­கள், பணி நிமித்­த­மான அவ­ரது போராட்­டங்­களைச் சொல்­லி­ய­ப­டியே கதை நக­ரும்.

“கணி­னித் தொழில்­நுட்­பம் மூலம் உரு­வாக்­கிய சில விநோத உயி­ரி­னங்­க­ளு­டன் பெரிய அள­வில் சண்டை போடு­வார் ஆர்யா. காடு­க­ளி­லும் பனி­யி­டங்­க­ளி­லும் படத்தை உரு­வாக்கி உள்­ளோம். முற்­றி­லும் வித்தியாசமான முறையில் காட்சிகளைப் பட­மாக்கி உள்­ளோம்,” என்­கி­றார் இயக்­கு­நர் சக்தி சௌந்­தர்­ரா­ஜன்.

முதல் தோற்­றச் சுவ­ரொட்­டி­யில் இறு­கிய முகத்­து­டன் காட்­சி­ய­ளிக்­கி­றார் ஆர்யா. ராணுவ அதி­கா­ரி­யின் தோற்­றத்­து­டன் கச்­சி­த­மா­கப் பொருந்திப் போகி­றார்.

“எப்­போ­துமே நேர்­ம­றை­யா­கச் சிந்­திப்­ப­து ஆர்­யா­வி­டம் உள்ள சாத­க­மான அம்­சங்­களில் மிக முக்­கி­ய­மா­னது. இதை அவ­ரு­டன் பணி­யாற்­றிய அனை­வ­ருமே ஒப்புக்­கொள்­வார்­கள். அவ­ரைப் பார்த்­தாலே ஒரு­வித புத்துணர்ச்சி­யும் நம்­பிக்­கை­­யும் மன­த்தில் தோன்­றும்.

“கதா­நா­ய­க­னாக நடிக்­கும் ஒரு­வர் தனது உடல்நலத்­தில் மிகுந்த கவ­னம் செலுத்த வேண்­டும். கதா­நா­ய­கர்­க­ளின் முத­லீ­டு­களில் அது­வும் ஒன்று. என்­ன­தான் நடிப்புத்­தி­றமை இருந்­தா­லும் உண­வுப்­ப­ழக்­கங்­களில் கட்­டுப்­பாடு, உடற்­ப­யிற்சி மீதான அக்­கறை ஆகி­யவை இல்லா­மல் அடி­த­டிப் படங்­களில் நடிக்க இய­லாது.

“ஆர்­யா­வைப் பொறுத்­த­வரை உடற்­ப­யிற்சி வெறி­யர் என­லாம். மது, புகை என்று எந்­த­வி­த­மான கெட்­டப் பழக்­கங்­களும் கிடை­யாது. அத­னால் இந்­தப் படத்­தின் கேப்­டன் கதா­பாத்­தி­ரத்­தில் இயல்­பாக நடித்­துள்­ளார்,” என்­கி­றார் இயக்­கு­நர் சக்தி சௌந்­தர்­ரா­ஜன். இப்படத்தின் நாய­கன் மட்­டு­மல்ல, தயா­ரிப்­பா­ள­ரும் ஆர்யாதான்.

‘டெடி’ படத்­தில் சக்­தி­யும் ஆர்­யா­வும் இணைந்து பணி­யாற்­றி­ய­போது ஒரு­வர் மீது மற்­றொ­ரு­வ­ருக்கு நம்­பிக்கை ஏற்­பட்­டுள்­ளது. கொரோனா நெருக்­கடி வேளை­யில் மிகப்­பெ­ரிய தொகையை இந்­தப் படத்­துக்­காக முத­லீடு செய்­தா­ராம் ஆர்யா. மேலும், சத்­யம் திரை­ய­ரங்க உரி­மை­யா­ளர் சொரூப் ரெட்­டி­யும் மற்­றொரு தயா­ரிப்­பா­ள­ராக இணைந்­துள்­ளார்.

“எப்­போது, எது தேவை என்­றா­லும் தயா­ரிப்­புத் தரப்­பில் இருந்து எந்­தக் கேள்­வி­யும் வராது. ஆனால் நான் கேட்ட அனைத்­தும் தயா­ராக இருக்­கும். இத­னால் நமக்­கான பொறுப்பு கூடி­வி­டும். ‘சார்­பட்டா’ படத்­துக்­குப் பிறகு, இன்­னும் சரி­யா­கச் சொல்­லப்­போ­னால் திரு­ம­ணத்­துக்­குப் பிறகு ஆர்­யா­கிட்ட ஏதோ வேதிமாற்­றம் நடந்­திருக்கிறது.

“திரு­ம­ணத்­துக்­குப் பின் அவர் நடித்த எல்லா படங்­களும் வசூல் ரீதி­யில் வெற்றி கண்­டுள்­ளன. நடிப்­பி­லும் நிறைய மாற்­றங்­கள் தென்­படு­கிறது. எனவே தமிழ் சினிமா நாய­கர்­கள் இனி ஆர்­யா­வி­டம் கவ­ன­மாக இருக்க வேண்­டும். நம்­மி­டம் இயல்­பா­கப் பேசிக் கொண்­டி­ருப்­ப­வர், கேமரா முன்­னால் நிற்­கும்­போது அடுத்த நொடியே முற்­றி­லும் மாறிப் போகி­றார். அனு­ப­வம் அவரை நன்கு புடம்­போட்­டுள்­ளது,” என்று பாராட்­டு­கிறார் சக்தி சௌந்­தர்­ரா­ஜன்.

‘கேப்­டன்’ படத்­தில் சிம்­ரன், ஐஸ்­வர்யா லட்சுமி, காவ்யா என்று பெண் கதா­பாத்­தி­ரங்­களுக்­கும் முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்­பட்­டுள்­ளது. ஐஸ்­வர்யா லட்­சு­மி­தான் முதன்மை நாயகி.

“தமிழ் தெரிந்த பெண் என்­ப­தால் ஐஸ்­வர்­யா­வு­டன் பணி­யாற்­று­வது எளி­தாக இருக்­கும். தமி­ழுக்­கு­தான் அவர் புது நாயகி. ஏற்­கெ­னவே தெலுங்­கில் இருபதுக்­கும் மேற்­பட்ட படங்­களில் நடித்த அனு­பவம் உள்­ள­வர். முக பாவங்­களில் அசத்­து­கி­றார். உணர்­வு­பூர்­வ­மான காட்சி­களில் அவர் வெளிப்­ப­டுத்­தும் இயல்­பான நடிப்பு வியக்க வைத்­தது.

“காட்டுக்குள் நடக்கும் அடிதடிக் காட்சிகளை திரையில் பார்க்கும் ரசிகர்கள் சிலிர்த்துப்போவார்கள். ஆனால் அவற்றைப் படமாக்க பட்ட சிரமங்களை வார்த்தைகளில் விவரிக்க இயலாது. தினமும் காட்டுக்குள் நீண்ட தூரம் நடக்க வேண்டியிருக்கும். அறைவண்டி (கேரவன்), கழிப்பறை வசதி என எதுவும் கிடையாது. ஆனால் அனைவரும் ஒத்துழைத்தனர்,” என்றார் சக்தி.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!