தீபிகா: போராடி மீண்டு வந்துள்ளேன்

மன­ந­லம் குறித்த விழிப்­பு­ணர்வு பிர­சா­ரத்தை முன்­னெ­டுத்­துள்­ளார் நடிகை தீபிகா படு­கோன். மேலும், அண்­மைய பேட்டி ஒன்­றில் தாம் முன்பு மன அழுத்­தத்­தால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­தா­க­வும் அதில் இருந்து விடு­பட பல்­வேறு முயற்­சி­களை மேற்­கொண்­ட­தா­க­வும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

அந்த இக்­கட்­டான சூழ­லில் இருந்து மீண்டு வர தமது குடும்­பத்­தா­ரும் மருத்­துவ நிபு­ணர்­களும் ஆத­ரவு அளித்­த­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

“மன அழுத்­தம் அதி­க­ரித்த கார­ணத்­தால் பல நாள்­கள் காலை­யில் எழுந்­தி­ருக்க மாட்­டேன். வழக்­கத்­தை­விட பல மணி நேரம் அதி­கம் தூங்­கி­னேன். தூக்­கத்­தின் மூலம் மன அழுத்­தத்­தில் இருந்து விடு­ப­ட­லாம் என்று நம்­பி­யதே இதற்­குக் கார­ணம்.

“அந்­தச் சம­யத்­தில் என்­னு­டைய பெற்­றோர் பெங்­க­ளூ­ரு­வில் வசித்து வந்­த­னர். அவர்­கள் ஒவ்­வொரு முறை­யும் என்­னைக் காண வரும்­போ­தும், நான் நன்­றாக இருப்­ப­தாக அவர்­களி­டம் தெரி­விப்­பேன். அப்­படி ஒரு நாள் அவர்­கள் என்­னைச் சந்­தித்­து­விட்டு பெங்­க­ளூரு புறப்­ப­டும்­போது மனமுடைந்து போயி­ருந்­தேன்.

“அதைக் கண்டு என் தாயார் பத­றிப்­போனார். நண்­பர்­கள் மூலம் ஏதா­வது பிரச்­சி­னையா? இல்­லை­யெ­னில் பணி சார்ந்த சிக்­கல்­கள் உள்­ள­னவா என்று விசா­ரித்­தார். ஒரு தாயாக அவ­ரது தவிப்பை என்­னால் உணர முடிந்­தது. ஆனால் அவர் எழுப்­பிய அந்த கேள்­வி­க­ளுக்கு என்­னி­டம் பதில் இல்லை. ஏனென்­றால், அப்­படி எந்த ஒரு பிரச்­சி­னை­யும் எனக்கு இல்லை. இதை அவ­ரி­டம் தெளி­வாக விவ­ரிக்க முடி­ய­வில்லை,” என்று கூறி­யுள்­ளார் தீபிகா.

மகள் எந்த விவ­ர­மும் அளிக்­க­வில்லை என்­றா­லும் தீபி­கா­வின் தாயார் அத்­து­டன் விட­வில்லை. பிரச்­சி­னை­யின் வேர் என்ன என்­பதைக் கண்­ட­றிந்து, உரிய சிகிச்­சைக்கு ஏற்­பாடு செய்­தா­ராம். கட­வுள்­தான் அந்­தச் சம­யத்­தில் பெற்­றோரை தம்­மி­டம் அனுப்பி வைத்­த­து­போல் உணர்ந்­த­தா­கச் சொல்­கி­றார்.

“அந்­தக் கால­கட்­டத்­தில் உயிரை மாய்த்­துக்­கொள்­ளும் எண்­ணம்­கூட அவ்­வப்­போது தோன்­றும். ஆனால் அவற்றை எல்­லாம் எப்­ப­டியோ கடந்து வந்­துள்­ளேன். இதற்­காக என் தாயா­ருக்­குத்­தான் நான் நன்றி சொல்ல வேண்­டும். நான் இப்­போது பெறும் வெற்றி, பணம் என எல்­லாமே அவ­ருக்­குத்­தான் போய்ச்­சேர வேண்­டும்.

“திரை­யு­ல­கில் நான் புக­ழின் உச்­சி­யில் இருந்­தேன். எல்­லாம் நன்­றா­கத்­தான் போய்க்கொண்­டி­ருந்­தது. ஆனால் திடீ­ரென்று கார­ணமே இல்­லா­மல் உடைந்து போவேன். அதீத மன அழுத்­தம் ஏற்­பட்­டது. தின­மும் காலை­யில் எழுந்­த­போது ஒன்­றுமே இல்­லா­தது போல் தோன்­றும். அடுத்து என்ன செய்­யப்போகி­றோம் என்­பது குறித்த எந்த ஒரு சிந்­த­னை­யும் இல்­லா­மல் வெறு­மனே இருக்­கும். அதன் கார­ண­மாக அழ ஆரம்­பிப்­பேன்,” என்று தாம் கடந்து வந்த நாள்­களை அசை­போ­டு­கி­றார் தீபிகா.

பிறகு தியா­னத்­தில் கவ­னம் செலுத்­தத் தொடங்­கிய அவர், “மன­நல மருத்­து­வ­ரி­டம் சென்று சில ஆலோ­ச­னை­களைப் பெற்று மீண்டேன்,” என்கிறார் தீபிகா.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!