திரைத் துளி­கள்

 அண்மையில் தமது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடி உள்ளார் மாளவிகா மோகனன். இதற்கான விருந்தில் நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு அவரை வாழ்த்தி உள்ளனர்.

அந்தக் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங் களை சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார் மாளவிகா. மேலும், தமது பிறந்தநாளை மிகவும் சிறப்பாகக் கொண்டாட உதவிய, தம்மை நேசிக்கும் அனைவருக்கும் நன்றி என்றும் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அனைவருடனும் தமது அன்பைப் பகிர்ந்துகொள்வதாகவும் மாளவிகா தெரிவித்துள்ளார்.

 தமக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக நடிகர் கௌதம் கார்த்திக் தெரிவித்துள்ளார். அவர் நடிகை மஞ்சிமா மோகனை காதலிப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. 'தேவராட்டம்' படத்தில் இணைந்து நடித்தபோது இருவரும் காதல்வயப்பட்டதாகத் தெரிகிறது. அதன் பிறகு பல இடங்களில் இருவரும் ஜோடியாக வரும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. ஆனால் காதலிப்பது குறித்து இருவரும் இதுவரை வாய் திறக்கவில்லை. இந்நிலையில், இருவரது குடும்பத்தாரும் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டிவிட்டதாகத் தகவல். எனவே விரைவில் திருமண அறிவிப்பு வெளியாகக்கூடும். இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கௌதம் கார்த்திக்கிடம், 'உங்கள் திருமணம் எப்போது நடக்கும்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு, 'விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன்', எனப் பதில் அளித்தார். எனினும் மஞ்சிமா மோகன் பற்றிய கேள்விக்கு சிரிப்பை மட்டுமே பதிலாக்கிச் சென்றுவிட்டார் கௌதம்.

 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகத்தில் இருந்து காஜல் அகர்வால் விலகிவிட்டார் என்று கூறப்பட்ட நிலையில், அப்படத்தின் படப்பிடிப்பில் தாம் பங்கேற்க இருப்பதாக அவரே தெரிவித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் உருவாகிறது 'இந்தியன்-2'. இதில் காஜல் நாயகியாக ஒப்பந்தமாகி நடித்து வந்தார். இடையில் சில பிரச்சினை களால் அப்படத்தின் பணிகள் ஒத்திவைக்கப்பட்ட டன. இந்நிலையில் காஜலுக்கு திருமணமாகி, தாய்மையும் அடைந்தார். எனவே அவர் 'இந்தியன்-2' படத்தில் நடிக்கமாட்டார் என்றும் வேறு நாயகி ஒப்பந்தம் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் தாம் 'இந்தியன்-2' படத்தில் நடிப்பது உறுதி என்கிறார் காஜல். எதிர்வரும் செப்டம்பர் 13ஆம் தேதி முதல் 'இந்தியன்-2' படப்பிடிப்பு தொடங்க இருப்பதாவும் அதில் தாம் பங்கேற்பது உறுதி என்றும் தமது சமூக ஊடகப் பக்கத்தில் காஜல் பதிவிட்டுள்ளார்.

 விஜய்யின் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது உறுதியாகிவிட்ட தாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் திரிஷா அந்தப் படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்படுவதாகத் தகவல். இருவரும் இணைந்து நடித்து 14 ஆண்டுகள் ஆகின்றன. திரிஷா நடிப்பில் அடுத்து 'பொன்னியின் செல்வன்' படம் வெளியாக உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!