‘மதுர வீரன்’ பாடல் சர்ச்சையில் சிக்கிய அதிதி

கதா­நா­ய­கி­யாக அறி­மு­க­மா­கும் முதல் படம் வெளி­யா­கும் முன்பே இரண்­டா­வது படத்­தில் ஒப்­பந்­த­மாகி உள்­ளார் இயக்­கு­நர் சங்­க­ரின் மகள் அதிதி. இந்­நி­லை­யில், 'விரு­மன்' படத்­தில் இவர் பாடி­யுள்ள பாட­லால் சர்ச்சை எழுந்­துள்­ளது. என்ன பிரச்சினை?

'சூப்­பர் சிங்­கர்' தொலைக்காட்சி நிகழ்ச்­சி­யின் மூலம் மக்­கள் மனதில் இடம்­பி­டித்­த­வர் ராஜ­லட்­சுமி. 'விருமன்' படத்­தில் இவர் 'மதுர வீரன்' என்ற பாட­லைப் பாடு­வ­தாக இருந்தது.

ராஜ­லட்­சு­மி­யும் பாடி­னார். ஆனால் அவர் பாடி­யது படத்­தில் இடம்­பெ­ற­வில்லை. மாறாக, படத்­தின் நாயகி அதிதி பாடி­ய­து­தான் படத்­தில் உள்­ளது. சங்­கர் மகள் என்­ப­தால்­தான் அவ­ருக்கு இந்த வாய்ப்பு கிடைத்­துள்­ளது என்று சமூக ஊட­கங்­களில் பலர் குறிப்­பிட்­டுள்­ள­னர். ஏற்­கெ­னவே சங்­க­ரின் வாரிசு என்­ப­தால்­தான் அதிதி தனது முதல் படம் வெளி­யா­கும் முன்பே சிவ­கார்த்­தி­கே­ய­னுக்கு ஜோடி­யாக ஒப்­பந்­த­மாகி உள்­ள­தாக கோடம்­பாக்­கத்தில் ஒரு முணு­முணுப்பு இருக்­கிறது. நடிகை ஆத்­மி­கா­வும்­கூட அண்­மை­யில் இது­கு­றித்து மறை­மு­க­மாக கருத்து தெரி­வித்­தி­ருந்­தார்.

இந்­நி­லை­யில், ராஜ­லட்­சு­மி­யைப் புறக்­க­ணித்து, அதி­திக்கு வாய்ப்­பளிக்க வாரிசு மனப்­பான்­மை­தான் கார­ணம் என்று ஒரு விவா­தம் தொடங்கி உள்­ளது.

இந்­நி­லை­யில், அதிதி நன்­றா­கப் பாடக் கூடி­ய­வர் என்­றும் அத­னால்­தான் 'விரு­மன்' படத்­தில் அவ­ரைப் பாட வைத்­துள்­ள­னர் என்­றும் பாடகி ராஜ­லட்­சுமி கூறி­யுள்­ளார்.

"அந்­தப் படத்­துக்­காக 'மதுர வீரன்' என்ற பாடலை நான் பாடியது உண்­மை­தான். ஒரு மாதத்­துக்கு முன்பு யுவன்சங்கர் ராஜா 'மதுர வீரன்' பாடலைப் பாடும் வாய்ப்பை அளித்­தார். ஆனால் நான் பாடிய பாடல் இப்­போது அதிதி குர­லில் வெளி­வந்­துள்­ளது.

"எல்லா இசை­ய­மைப்­பா­ளர்­களும் ஒரு பாடலை பதிவு செய்­வ­தற்கு முன்பு பல பாட­கர்­க­ளைப் பாட வைத்­துப் பார்ப்­பார்­கள். இது இயல்­பாக நடக்­கும் விஷ­யம். ஒரு படத்­தில் யாருக்­காக பாடல் இடம்­பெறு­கிறது என்­ப­தைக் கவ­னித்து, அதற்­கேற்ற குர­லைத் தேடு­வார்­கள். அப்­ப­டித்­தான் நான் பாடிய பாடலை அதிதி சங்­க­ருக்கு அளித்­த­தா­கக் கரு­து­கி­றேன். யதார்த்­த­மாக நடந்த விஷ­யத்தை தேவை­யின்­றிப் பெரிது ­ப­டுத்த வேண்­டாம் என­வும் நினைக்­கி­றேன்," என்­கி­றார் ராஜ­லட்­சுமி.

இவர் பக்­கு­வ­மா­கப் பேசி­னாலும், இவ­ருக்­குப் பதி­லாக அதிதி பாடப் போகி­றார் என்ற தக­வல்­கூட தெரி­விக்­கப்­ப­ட­வில்­லை­யாம். ஆனால் ராஜ­லட்­சு­மியோ, முத­லில் தம்மை பாட அழைத்­ததே பெரிய விஷ­யம் என்­கி­றார்.

"அதிதி நன்­றா­கப் பாடு­கி­றார். அத­னால்­தான் பாட வைத்­துள்­ள­னர். எனக்­காக நியா­யம் கேட்­ப­தாக நினைத்­துக்­கொண்டு அதி­தியை விமர்­சிப்­பது வருத்­தம் அளிக்­கிறது. உண்­மை­யில் அந்­தப் பாடல் என் குர­லில் திரை­யில் ஒலிக்­க­வில்லை என்­ப­தில் எந்­த­வித வருத்­த­மும் இல்லை," என்கிறார் ராஜலட்சுமி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!