திரைத் துளி­கள்

 'என்னை அறிந்தால்', 'விஸ்வாசம்' உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பாராட்டு பெற்ற 'பேபி அனிகா' தற்போது மலையாள திரைப்படத்தின் மூலமாக நாயகியாக களமிறங்குகிறார். அந்தப் படத்துக்கு 'ஓ மை டார்லிங்' என்று தலைப்பு வைத்துள்ளனர். அறிமுக நாயகன் ஆல்ஃபிரட் டி சாமுவேல் நடிக்கும் இப்படத்தில் கனமான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளாராம் அனிகா. ஜினேஷ் கே ஜாய் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு, ஷான் ரஹ்மான் இசையமைக்கிறார். தமிழிலும் நாயகியாக நடிக்கக் கேட்டு அணுகியுள்ளனராம். அதனால் உற்சாகத்தில் உள்ளார் அனிகா.  தாம் திரையுலகில் அறிமுகமாகி பத்து ஆண்டுகள் ஆனதை அடுத்து, பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒன்றை படைக்க உள்ளார் இசையமைப்பாளர் அனிருத். இதற்காக டிஸ்னி பிளஸ் ஹாஸ்டார் நிறுவனம் அவருடன் கைகோத்துள்ளது. சென்னை, கோவை என இரு நகரங்களில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற் காகப் பெருந்தொகையைப் பெற்றுள்ளாராம் அனிருத். எதிர்வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும். அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!