திரைத்துளிகள்

 கவர்ச்சியாக நடிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்றும் கதாபாத்திரத்துக்கு ஏற்ப கவர்ச்சி காட்டுவது அவசியம் என்றும் கூறுகிறார் ராஷி கன்னா. 'அயோக்யா', 'அடங்க மறு', 'சங்கத்தமிழன்', 'துக்ளக் தர்பார்', 'அரண்மனை-3' போன்ற படங்களில் நடித்துள்ள ராஷிக்கு, புது வாய்ப்புகள் எதிர்பார்த்த வகையில் அமையவில்லையாம். அதனால்தான் கவர்ச்சி குறித்து கருத்து தெரி வித்துள்ளார். அண்மையில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' படத்துக்குப் பிறகு அவரது கைவசம் வேறு தமிழ்ப் படங்கள் இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் தனது கவர்ச்சிப் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார் ராஷி.

 இசையமைப்பதைவிட நடிப்பதற்கு அதிக சம்பளம் கிடைப்பதால், நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்ப தாகச் சொல்கிறார் 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி. 'தனி ஒருவன்', 'ஆம்பள', 'அரண்மனை', 'கத்தி சண்டை', 'கவண்', 'இமைக்கா நொடிகள்' என எட்டுப் படங்களுக்கு இசையமைத்து உள்ள ஆதிக்கு, நாயகனாக நடிக்கவும் வாய்ப்புகள் தேடி வருகின்றன. 'மீசைய முறுக்கு', 'நட்பே துணை', 'நான் சிரித்தால்', 'சிவகுமாரின் சபதம்', 'அன்பறிவ்' ஆகிய படங்களில் நாயகனாக நடித்துள்ள இவர், இப்போது ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில், 'வீரன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். "இந்தப் படத்துக்காக என் உடல் எடையைக் குறைத்துள்ளேன். மேலும் குதிரைப் பயிற்சியும் மேற்கொள்கிறேன். சென்னை மெரினா கடற்கரைக்கு அதிகாலை வேளையில் வந்தால் அங்கு உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ள என்னைப் பார்க்க முடியும்," என்கிறார் ஆதி.

 சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் 'பிரின்ஸ்'. இதில் உக்ரேனைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நாயகியாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என ஒரே சமயத்தில் இரு மொழிகளில் உருவாகி வருகிறது இப்படம். சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தில் தமக்கான காட்சிகளில் நடித்து முடித்திருப்பதாக மரியா தெரிவித்துள்ளார். தமக்கு வாய்ப்பு அளித்த படக்குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ள இவர், பட வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாகவும் தமது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 மணமுறிவுக்குப் பின்னர் தனுஷும் ஐஸ்வர்யாவும் மீண்டும் ஒருமுறை நேரில் சந்தித்துள்ளனர். இத்தம்பதியரின் மூத்த மகனான யாத்ரா அவரது பள்ளியில் விளையாட்டு அணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கான விழா சென்னையில் நேற்று அவரது பள்ளியில் நடைபெற்றது. இந்த விழாவில் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் இணைந்து கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பாடகர் விஜய் யேசுதாசும் அவருடைய மனைவியும் பங்கேற்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!