தன்னம்பிக்கையூட்டும் விக்ரம்

'கோப்ரா' படத்தை ரசி­கர்­க­ளி­டம் கொண்­டு­சேர்க்­கும் வித­மாக தமி­ழ­கம் முழு­வ­தும் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொண்­டுள்­ளார் விக்­ரம்.

போகிற இடங்­களில் எல்­லாம் ரசி­கர்­க­ளைச் சந்­தித்­துப் பேசி, அவர்­களை உற்­சா­கப்­ப­டுத்தி வரு­கி­றார்.

அஜய் ஞான­முத்து இயக்­கத்­தில் உரு­வாகி உள்ள படம் 'கோப்ரா'. இதில் ஏழு வித்­தி­யா­ச­மான தோற்­றங்­களில் நடித்­துள்­ளார் விக்­ரம். எதிர்­வ­ரும் 31ஆம் தேதி திரை காண்­கிறது. தமிழ், கன்­ன­டம், தெலுங்கு என மூன்று மொழி­களில் வெளி­யி­டு­கின்­ற­னர்.

சுமார் மூன்று ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு விக்­ரம் தனி நாய­க­னாக நடித்­துள்ள படம் திரை­ய­ரங்­கு­களில் வெளி­யா­வ­தால் அவ­ரது ரசி­கர்­கள் உற்­சா­கத்­தில் மூழ்கி உள்­ள­னர்.

திருச்சி, மதுரை, கோயம்­புத்­தூர், சென்னை, கொச்சி, பெங்­க­ளூரு, ஹைத­ரா­பாத் உள்­ளிட்ட முக்­கிய நக­ரங்­க­ளுக்கு நேரில் சென்று ரசி­கர்­க­ளைச் சந்­தித்து வரு­கி­றார் விக்­ரம். அப்­போது ரசி­கர்­க­ளு­டன் இயல்­பாக உரை­யாடி மகிழ்­விக்­கி­றார். கூடவே இளம் ரசி­கர்­க­ளுக்கு ஏற்ற அறி­வு­ரை­களை வழங்­க­வும் அவர் தவ­று­வ­தில்லை.

மேலும், தாம் கடந்து வந்த பாதை­யில் எதிர்­கொண்ட பல்­வேறு சவால்­கள் குறித்து விக்­ரம் பகிர்ந்­து­கொள்­ளும் தக­வல்­கள் ரசி­கர்­களை உருக வைப்­ப­தா­க­வும் வியப்­பில் புரு­வம் உயர்த்த வைப்­ப­தா­க­வும் தெரி­கிறது.

"கொரோனா நெருக்­க­டிக்கு மத்­தி­யில் இந்­தப் படத்தை இயக்­கு ­

வ­தற்கு அஜய்

ஞான­முத்­துவுக்கு

3 ஆண்­டு­கள்

தேவைப்­பட்­டது.

"ஆனால் இந்­தக்­ காத்­தி­ருப்பு வீண் போகாது.

"பல சுவாரசி­ய­மான விஷ­யங்­களை இந்­தப் படத்­தில் இடம்­பெ­றச் செய்­துள்­ளார். படத்­தின் முன்­னோட்­டக் காட்சி தொகுப்­புக்கு நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளது. அதற்­காக

ரசி­கர்­க­ளுக்கு நன்றி,"

என்று திருச்­சி­யில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் பேசும்­போது குறிப்­பிட்­டார் விக்­ரம்.

"இந்­தப் படத்தை ரசி­கர்­கள் எனக்­காக மட்­டும் பார்க்க வேண்­டாம். என்­னை­விட படத்­தில் சித்­தி­ரிக்­கப்­பட்­டுள்ள உணர்­வுப்­பூர்­வ­மான காட்­சி­கள் மிக­வும் முக்­கி­யம்," என்று விக்­ரம் இளம் ரசி­கர்­க­ளுக்கு பல்­வேறு அறி­வு­ரை­க­ளைக் கூறி­னார்.

ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் வெவ்­வேறு துறை­களில் தனித்­தி­றமை இருக்­கும் என்று குறிப்­பிட்ட அவர், அதை அடை­யா­ளம் கண்டு அந்­தத் துறை­யில் சாதிக்க முயற்சி செய்ய வேண்­டும் என்­றார்.

"மாண­வர்­கள், இளை­யர்­கள் தங்­க­ளின் இலக்­கு­களை எளி­தில் கைவிட்­டு­வி­டக் கூடாது. நம்­மால் முடி­யும் என்ற மன­வ­லி­மையை மன­தில் ஏற்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும்.

"ஒரு கால­கட்­டத்­தில் என்­னால் நடக்­கவே முடி­யாது என்று மருத்­து­வர்­கள் கூறி­னர். ஆனால் நான் எழுந்து நின்­றேன். பிறகு நடக்­க­வும் செய்­தேன். பின்­னாள்­களில் அதே மருத்­து­வர் என்­னைச் சந்­தித்­துப் பேசி­ய­போது, 'இப்­போது என்ன செய்­கி­றீர்­கள்' என்று விசா­ரித்­தார். திரைப்­ப­டங்­களில் கதா­நா­ய­க­னாக நடிப்­ப­தா­கச் சொன்­னேன். அதைக் கேட்டு அவ­ருக்கு பெரும் வியப்பு. என்­னு­டைய தன்­னம்­பிக்­கை­யை­யும் விடா­மு­யற்­சி­யை­யும் பாராட்­டி­னார்.

"என்­னைப் பற்றி பெரு­மை­யா­கச் பேச வேண்­டும் என்­ப­தற்­காக இந்­தத் தக­வ­லைப் பகி­ர­வில்லை. மற்­ற­வர்­களும் இதைப் பின்­பற்ற வேண்­டும் என்­பதே எனது விருப்­பம்.

"யாராக இருந்­தா­லும் உயிரை மாய்த்­துக்­கொள்­வது தீர்­வா­காது. இறு­தி­வரை முயற்சி செய்ய வேண்­டும்," என்­றார் விக்­ரம்.

'கோப்ரா' படத்­தில் ஸ்ரீநிதி ஷெட்டி நாய­கி­யா­க­வும் ஜான் விஜய், மிரு­ணா­ளினி, கனிகா, இர்­ஃபான் பதான், மியா ஜார்ஜ் உள்­ளிட்­டோர் முக்­கிய வேடங்­க­ளி­லும் நடித்­துள்­ள­னர். ஏ.ஆர்.ரகு­மான் இசை­ய­மைக்க, லலித் குமார் தயா­ரித்­துள்­ளார். பல்­வேறு சிக்­கல்­க­ளைக் கடந்து வெளி­யீடு காணும் இந்­தப் படம் பெரிய வெற்­றி­யைப் பெறும் என விக்­ரம் தரப்பு உறு­தி­யாக நம்­பு­கி­ற­தாம்.

"வழக்­கம்­போல் இந்­தப் படத்­துக்­கா­க­வும் விக்­ரம் தன் உடலை வருத்­திக்­கொண்டு அர்ப்­ப­ணிப்­பு­டன் நடித்­துள்­ளார். அறி­முக நாய­க­னைப் போல் ஒவ்­வொரு காட்­சி­யும் சிறப்­பாக வர வேண்­டும் என்­ப­தில் அக்­கறை கொண்­டுள்­ளார். இரு­வ­ரும் மீண்­டும் இணைந்து பணி­யாற்ற உள்­ளோம். அதை விக்­ரமே உறுதி செய்­துள்­ளார்," என்­கி­றார் இயக்­கு­நர் அஜய் ஞான­முத்து.

விக்­ரம் நடிப்­பில் அடுத்து 'பொன்னி யின் செல்­வன்' படம் வெளி­யாகிறது.

, :

  

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!