‘இது கேப்டனின் கதை’

'டெடி' படத்­தின் வெற்­றிக்­குப் பிறகு ஆர்யா, இயக்­கு­நர் சக்தி செளந்­தர்­ரா­ஜன் கூட்­டணி அமைத்­துள்ள படம் 'கேப்­டன்'. ஐஸ்­வர்யா லட்­சுமி நாய­கி­யாக நடித்­துள்­ளார்.

இது ராணு­வப் பின்­ன­ணி­யில் அறி­வி­ய­லும் கற்­ப­னை­யும் கலந்த பட­மாக உரு­வாகி உள்­ளது.

ஆர்யா வழக்­கம்­போல் அடி­த­டிக் காட்­சி­களில் அசத்தி உள்­ள­தா­க­வும் உயி­ரைப் பண­யம் வைத்து நடித்­த­தா­க­வும் பாராட்­டு­கி­றார் இயக்­கு­நர். கூடவே நாயகி ஐஸ்­வர்யா லட்­சு­மி­யைப் பாராட்­ட­வும் தவ­ற­வில்லை.

"மலை­யா­ளத்­தில் 'மாய­நதி', தமி­ழில் 'ஜெகமே தந்­தி­ரம்', 'கார்கி' உள்­ளிட்ட படங்­களில் நடித்­துள்­ளார் ஐஸ்­வர்யா. ஆர்­யா­வுக்­கும் இவ­ருக்­கு­மான காட்­சி­கள் பிர­மா­த­மா­கப் பட­மாக்­கப்­பட்­டுள்­ள­ன­வாம்.

"இந்­தப் படத்­துக்­குப் பிறகு முன்­னணி நாய­கி­யாக வளர்ச்சி காண்­பார் ஐஸ்­வர்யா. இப்­ப­டிச் சொல்ல கார­ணம் அவ­ரது அர்ப்­ப­ணிப்பு.

"அண்­மை­யில் இப்­ப­டத்­தில் இடம்­பெற்­றுள்ள 'கைலா' எனத் தொடங்­கும் பாடலை வெளி­யிட்­டோம். பொது­வாக பாடல் வெளி­யா­ன­தும் அதன் இசை­ய­மைப்பு, பாடல் வரி­கள் குறித்­து­தான் ரசி­கர்­கள் அதி­கம் பேசு­வார்­கள். ஆனால் இந்­தப் பாட­லைப் பற்றி பேசு­வோர் ஐஸ்­வர்யா குறித்­தும் அவ­ரது நடிப்பு, அழகு, திறமை குறித்­தும் மறக்­கா­மல் குறிப்­பி­டு­கி­றார்­கள்.

"சமூக ஊட­கங்­க­ளி­லும் அவ­ருக்­குப் பாராட்­டு­கள் குவி­கின்­றன. திற­மை­சாலி என்­ப­தால் நிச்­ச­யம் வருங்­கா­லத்­தில் சாதிப்­பார்," என்­கி­றார் சக்தி சௌந்­தர்­ரா­ஜன்.

உங்­கள் கதா­நா­ய­கன் என்ன சொல்­கி­றார்?

"ஆர்யா இதில் வெற்­றிச்­செல்­வன் என்ற கதா­பாத்­தி­ரத்தை ஏற்­றுள்­ளார். அவ­ரைச் சுற்­றித்­தான் கதை நக­ரும் என்­பது புரிந்­தி­ருக்­கும். அவர் தின­மும் உடற்­ப­யிற்சி செய்­ப­வர், நல்ல உடற்­கட்டு கொண்­ட­வர் என்­பது பெரிய வச­தி­யாக அமைந்­து­விட்­டது.

"சண்­டைக் காட்­சி­க­ளுக்­காக அவர் உடல் ரீதியில் பல சவால்­களை எதிர்­கொள்ள வேண்­டி இருந்­தது. சண்­டைக்­காட்­சி­க­ளைப் பட­மாக்­கி­ய­போது உண்­மை­யா­கவே அவ­ரது உழைப்­பைக் கண்டு வியந்­து­போ­னேன். அவ­ரைத் தவிர வேறு யாரும் இந்­தக் கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­தி­ருக்க இய­லாது என்று இப்­போது தோன்­று­கிறது.

"கடந்த ஆண்டு கிறிஸ்­து­மஸ் வேளை­யில் கேர­ளா­வில் உள்ள மூணாறு பகு­தி­யில் படப்­பி­டிப்பை நடத்­தி­னோம். அச்­ச­ம­யம் அம்­மா­நி­லத்­தில் பத்து டிகிரி குளிர் நில­வி­யது எனில் நாங்­கள் படப்­பி­டிப்பு நடத்­திய பகு­தி­யில் ஐந்து டிகிரி குளிர் எங்­களை வாட்டி எடுத்­தது.

"மலைப்­பாங்­கான இடத்­தில் கயி­று­கட்டி ஒரு சண்­டைக்­காட்­சியை பட­மாக்க வேண்­டி­யி­ருந்­தது. அந்­த­ரத்­தில் கயிற்­றில் தொங்­கி­ய­படி சண்டை போடு­வது அவ்­வ­ளவு எளி­தல்ல.

"அதி­லும் மழை­யில் நனைந்­த­படி நடிக்க வேண்­டும். பொது­வாக மழை­யில் நனை­யும்­போது குளிர் தெரி­யாது. ஆனால் சில நிமிட இடை­வெளி கிடைக்­கும்­போது குளிர் உட­லுக்­குள் ஊடு­ருவி நடுங்க வைக்­கும். ஆனால் ஆர்யா இதற்­கெல்­லாம் அச­ர­வில்லை. உடற்­ப­யிற்­சி­யும் தொழில்­பக்­தி­யும் அவரை இரும்பு மனி­த­னாக மாற்றி உள்­ளது என்­ப­து­தான் உண்மை.

"வேறொ­ரு­வ­ராக இருந்­தி­ருந்­தால் அந்­தக் கடி­ன­மான சூழ்­நி­லை­யில் காய்ச்­சல் கண்டு முடங்­கி­யி­ருப்­பார். ஆனால், ஆர்யா எதற்­கா­க­வும் கவ­லைப்­பட்­ட­தில்லை. அத­னால் திட்­ட­மிட்­ட­படி படப்­பி­டிப்பை உரிய நேரத்­தில் நடத்தி முடித்­தோம்," என்­கி­றார் இயக்­கு­நர் சக்தி.

'கேப்­டன்' படத்­தில் சிம்­ரன் முக்­கிய கதா­பாத்­தி­ரத்தை ஏற்­றுள்­ளார். அனு­ப­வம் உள்ள நடிகை என்­றா­லும் மிக எளி­மை­யா­கப் பேசிப் பழ­கி­ய­தா­கச் சொல்­கி­றார் இயக்­கு­நர்.

"படப்­பி­டிப்­புக்­காக தின­மும் மூன்று கிலோ மீட்­டர் நடந்து செல்ல வேண்­டும். அடிப்­படை வச­தி­கள் மட்­டுமே இருக்­கும் என்ற நிலை­யில், அவர் நடிக்க ஒப்­புக்­கொள்­வாரா என்ற சந்­தே­கம் வலு­வாக இருந்­தது.

"இருப்­பி­னும், நேரில் சென்று கதையை விவ­ரித்­த­போது உடனே நடிக்க சம்­ம­தித்­தார். ஆண்­க­ளுக்கு இணை­யாக உழைக்க வேண்­டி­யி­ருக்­கும் என்­பது தெரிந்­தி­ருந்­தும் நடிக்க ஒப்­புக்­கொண்­ட­து­டன், நாங்­கள் எதிர்­பார்த்­த­தை­விட சிறப்­பாக ஒத்­து­ழைத்­தார்.

நடி­கர் ஹரீஷ் உத்­த­ம­னும் இயக்­கு­நர் சக்தி சௌந்­தர்­ரா­ஜ­னும் கல்­லூரி கால நண்­பர்­க­ளாம். ஹரீ­ஷு­டன் இணைந்து பணி­யாற்ற வேண்­டும் என்­பது தமது நீண்ட நாள் ஆசை என்று குறிப்­பி­டு­ப­வர், அதற்­கான சூழல் இப்­போ­து­தான் அமைந்­தது என்­கி­றார்.

இயக்­கு­நர் சுரேஷ் மேன­னும் சிறிய வேடத்­தில் நடித்­துள்­ளா­ராம். 'டெடி' படத்­தில் சக்­தி­யு­டன் இணைந்து பணி­யாற்­றிய ஒளிப்­பதி­வா­ளர் யுவ­ராஜ்­தான், இந்­தப் படத்­துக்­கும் ஒளிப்­ப­திவு செய்­துள்­ளார்.

"இந்­தப் படத்­தில் பணி­யாற்­றிய அனை­வ­ருமே நூறு விழுக்­காட்­டுக்­கும் அதி­க­மாக உழைத்­துள்ளனர். படத்தை திரை­யில் பார்க்­கும்­போது நான் சொல்­வது உண்மை என்­பதை உணர்­வீர்­கள்.

"இது அனைவருக்கும் பிடித்த மான ஒரு படைப்பாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்," என்கிறார் இயக்­கு­நர் சக்தி சௌந்­த­ர­ரா­ஜன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!