‘அம்மா மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்’

தன் தாயாரை மகிழ்ச்­சி­யாக வைத்­தி­ருப்­பதே தன் வாழ்­நாள் லட்­சி­யம் என்­கி­றார் நடி­கர் அதர்வா.

திரை­யு­ல­கில் அறி­மு­க­மாகி பத்து ஆண்­டு­கள் கடந்­து­விட்ட போதி­லும், சினி­மா­வைப் பற்றி ஏரா­ள­மான விஷ­யங்­கள் தெரிந்­து­கொள்ள வேண்டி உள்­ள­தா­கச் சொல்­கி­றார்.

காலஞ்­சென்ற நடி­கர் முர­ளி­யின் வாரிசு என்­ப­து­தான் திரை­யு­ல­கில் தாம் கால்­ப­திக்க வச­தி­யாக இருந்­தது என்று குறிப்­பி­டு­ப­வர், தந்தை கூறிய அறி­வு­ரை­யைப் பின்­பற்­று­வ­தால்­தான் இப்­போ­தும் கோடம்­பாக்­கத்­தில் தாக்­குப்­பி­டித்து நிற்க முடி­கிறது என்­கி­றார்.

"அப்பா நூறு படங்­க­ளுக்­கும் மேல் நடித்­துள்­ளார். எனி­னும் அவ­ரி­டம் பேசும்­போ­தெல்­லாம் தனக்கு எது­வுமே தெரி­யா­த­து­போல் இருப்­பார்.

"அவர் கடை­சி­யாக நடித்த படத்­தின் படப்­பி­டிப்­புக்­குச் சென்­றி­ருந்­தேன். அப்­போது, 'ஒரு நடி­க­ராக உங்­க­ளு­டைய எதிர்­கா­லம் குறித்து நம்­பிக்­கை­யு­டன் இருக்­கி­றீர்­களா என்று கேட்­ட­போது அவர் அளித்த பதில் இப்­போ­தும் நினை­வில் உள்­ளது.

"நூறு படங்­களில் நடித்த பிற­கும்­கூட, சினி­மா­வில் உள்ள நுணுக்­கங்­க­ளைக் கற்று வரு­வ­தாக என் தந்தை முரளி சொன்­னார். தனக்­கென தனி ரசி­கர் கூட்­டத்தை வைத்­தி­ருந்த அவரே, தன் வாழ்­வின் இறுதி வரை கற்­றுக்கொண்­டு­தான் இருந்­தார்," என்­கி­றார் அதர்வா.

"அவர் அன்று சொன்ன அந்த வார்த்­தை­க­ளுக்­கான அர்த்­தம் அப்­போது தெளி­வா­கப் புரி­ய­வில்லை. இப்­போது எல்­லாம் புரி­கிறது. அப்­பா­வைப் போலவே நானும் இந்த பத்து ஆண்­டு­களில் சினி­மா­வைப் பற்றி கற்­றுக்­கொண்­டு­தான் இருக்­கி­றேன்," என்று சொல்­லும் அதர்வா, இசை ­அ­மைப்­பா­ளர் யுவன்­சங்­கர் ராஜா­வின் தீவிர ரசி­க­ராம்.

இவ­ரது அறி­மு­கப் பட­மான 'பாணா காத்­தாடி'க்கு யுவன்­தான் இசை­ய­மைத்­தார். அன்று தொடங்கி இன்­று­வரை தமக்­காக பல நல்ல பாடல்­களை யுவன் தந்­துள்­ள­தா­க­வும் அவ­ரு­ட­னான பய­ணம் தொட­ரும் என்­றும் கூறு­கி­றார்.

பிரியா பவானி சங்­க­ரு­டன் நடித்த 'குருதி ஆட்­டம்' படம் வெளி­யான நிலை­யில், மீண்­டும் இரு­வ­ரும் புதுப்­படத்­தில் இணைய உள்­ள­தாக ஒரு தக­வல் வெளி­யாகி உள்­ளது. ஆனால் பேச்­சு­வார்த்தை முடி­வ­டை­யாத நிலை­யில் அதி­கா­ர­பூர்­வ­மாக எதை­யும் சொல்ல இய­லாது எனக் கைவி­ரிக்கி­றார் அதர்வா.

"பிரியா மிக இயல்­பாக நடிக்­கக் கூடி­ய­வர். ஒரு காட்­சி­யில் பழைய புட­வை­யைக் கொடுத்­த­போது அதை அணிய மறுத்­து­விட்­டார்.

"பிறகு அவ­ரது விருப்­பம்­போல் ஒரு புட­வையை அணிந்து நடித்­தார். ஆனால் அக்­காட்­சியை திரை­யில் பார்த்­த­போது அவ­ரது தேர்வு கச்­சி­த­மாக இருப்­பதை உணர முடிந்­தது. மிக எளி­மை­யாக பேசிப் பழ­கும் நாய­கி­களில் பிரி­யா­வும் ஒரு­வர்," என்­கி­றார் அதர்வா.

இதற்­கி­டையே இவ­ரது தம்பி ஆகா­ஷும் திரை­யு­ல­கில் அறி­மு­க­மா­கி­றா­ராம். அறி­மு­கப் படத்­துக்­காக தன் தம்­பியை தாமே தயார்­ப­டுத்தி வரு­கி­றார் அதர்வா.

"திரை­யு­ல­கில் எல்­லா­ருக்­கும் இட­முண்டு. ஆகாஷ் நடிக்­கும் படம் குறித்த அறி­விப்பு விரை­வில் வெளி­யா­கும்.

"என் பெற்­றோர் வீட்டை விட்டு வெளியே வந்து திரு­ம­ணம் செய்து­கொண்­ட­னர். அதன்பிறகு நானும் தம்­பி­யும்­தான் அவர்­க­ளு­டைய உல­கம்.

"அப்­பா­வின் மறை­வுக்குப் பின் அம்மா உடைந்து போய்­விட்­டார். அவரை மகிழ்ச்­சி­யாக வைத்­துக்­கொள்ள வேண்­டும் என்­ப­து­தான் எனது லட்­சி­யம். ஒரு மக­னாக அந்­தப் பொறுப்பை எப்­பா­டு­பட்­டா­வது நிறை­வேற்­று­வேன்.

"அப்பா சம்­பா­தித்­துள்ள நற்­பெ­ய­ரை­யும் காப்­பாற்­று­வேன்," என்று பாசத்­து­ட­னும் பொறுப்­பு­டனும் பேசு­கி­றார் அதர்வா.

இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கத்தில் நடிகர் அதர்வா நடித்துள்ள திரைப்படம் 'டிரிக்கர்'. இதில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 23ஆம் தேதி வெளியாகிறது.

அதர்வா

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!