ராஜ்கிரண்: என் மனைவி மடிப்பிச்சைக் கேட்டார்

நடி­கர் ராஜ்­கி­ர­ணின் மகள் பிரி­யாவை, தொலைக்­காட்சி நடி­கர் முனீஸ் ராஜா காத­லித்து திரு­ம­ணம் செய்­து­கொண்­டுள்­ளார்.

இதை­ய­டுத்து ராஜ்­கி­ரண் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், முனீஸ் ராஜாவை மோச­டிப் பேர்­வழி என்­றும் பிரியா தனது வளர்ப்பு மகள் என்­றும் குறிப்­பிட்­டுள்­ளார்.

தன் பெய­ரைப் பயன்­ப­டுத்தி திரைப்­பட வாய்ப்­பு­க­ளைப் பெறு­வ­து­தான் முனீஸ் ராஜா­வின் நோக்­கம் என்­றும் எந்­தக் காலத்­தி­லும் தமக்கு அவர் மரு­ம­க­னாக முடி­யாது என்­றும் தெரி­வித்­துள்­ளார் ராஜ்­கி­ரண்.

"எனக்கு திப்பு சுல்­தான் என்ற நைனார் முஹம்­மது என்ற ஒரே ஒரு மக­னைத்­த­விர, வேறு பிள்­ளை­கள் கிடை­யாது. இந்து மதத்­தைச் சேர்ந்த ஒரு வளர்ப்பு மகள் இருந்­தார். அவர் பெயர் பிரியா.

"அவ­ரது மகிழ்ச்­சிக்­காக அவரை 'வளர்ப்பு மகள்' என்று நான் யாரி­ட­மும் சொல்­லிக்­கொள்­ளா­மல் சொந்த மகள் என்றே சொல்லி வந்­தேன். முக­நூல் மூலம் அவ­ரு­டன் நட்பு ஏற்­ப­டுத்­திக்­கொண்ட தொலைக்­காட்­சித் தொடர் நடி­கர் முனீஸ், எந்தெந்த முறை­யிலோ அந்­தப்­பெண்ணை தன்­வ­சப்­ப­டுத்தி, திரு­ம­ணம் செய்­து­கொள்ள வேண்­டும் என்ற மன­நி­லைக்கு கொண்டு வந்­தி­ருக்­கி­றார்.

"இந்த விஷ­யம் என் காதுக்கு வந்­த­தும் அந்த நடி­க­ரைப்­பற்றி நான் விசா­ரிக்க ஆரம்­பித்­த­தில், அவர் மோசமான புத்­தி­யும் பணத்­துக்­காக எதை­யும் செய்­யும் ஈனத் ­த­ன­மும் கொண்­ட­வர் என்­பது எனக்குத் ­தெ­ரியவந்­தது.

"அவரது நோக்கம் அந்தப் பெண்ணை வைத்து வாழ்வதில்லை. எனக்கு இருக்கும் நல்ல பெயரைப் பயன்படுத்தி, சினிமா துறையில் வாய்ப்புகளைப் பெறுவதும் என்னி டம் இருந்து பணம் பறிப்பதும் மட்டுமே அவரது குறிக்கோள்," என்று ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.

முனீஸ் ராஜா பற்றி தாம் கேள்­விப்­பட்ட விஷ­யங்­களை பிரி­யா­விடம் தெரி­வித்­த­போது அவர் எதை­யும் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை என்று குறிப்­பிட்­டுள்ள அவர், தன் மனைவி அழுது மன்­றாடி, மடிப்­பிச்சை கேட்ட பிற­கும் பிரியா இவ்­வாறு முடி­வெ­டுத்­தி­ருப்­ப­தா­கக் கூறி­யுள்­ளார்.

"பெண்­பிள்­ளையை வளர்க்­கும் ஒவ்­வொரு தாயும், தன் பிள்­ளையை நல்­ல­ப­டி­யாக வாழ­வைக்க வேண் டுமே என்ற அக்­க­றை­யில் எப்­ப­டி­யெல்­லாம் கண்­கா­ணிப்­பாளோ, அப்­படி ஒரு தாய் நடந்துகொள்­வது, வாழ்க்கை அனு­ப­வ­மில்­லாத சிறு பிள்­ளை­க­ளுக்குத் தவ­றாகத் தோன்­று­கிறது. ஒரு தர­மான மாப்­பிள்­ளையைத் தேர்ந்­தெ­டுத்­தி­ருந்­தால், சாதி பேதம் பார்க்­காத நான் சந்­தோ­ஷ­மாக கட்­டிக்­கொ­டுத்­திருப்­பேன். ஆனால் பணத்­துக்­காக எதை­யும் செய்­யத்­து­ணி­யும் ஒருவனைத் தேர்ந்­தெ­டுத்து, தன் வாழ்க்­கையை நாச­மாக்­கிக்­கொண்­டாளே என்­பது மட்­டுமே என் வருத்­தம்," என்று ராஜ்­கி­ரண் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!