ரகுல்: நிறைய சிரமங்கள் உள்ளன

திரைத்­து­றை­யில் சவால்­களும் பிரச்சினை­களும் அதி­கம் என்­கி­றார் ரகுல் பிரீத் சிங்.

கைவ­சம் மூன்று இந்­திப் படங்­கள் இருப்­ப­தா­க­வும் தமி­ழுக்­கும் இனி முக்­கி­யத்­து­வம் அளிக்­கப் போவ­தா­க­வும் அண்­மைய பேட்­டி­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

ரகுல் பிரீத் சிங் நடிப்­பில் அடுத்து வெளி­யாக உள்ள படம் 'அய­லான்'. இதில் சிவ­கார்த்­தி­கே­ய­னுக்கு ஜோடி­யாக நடித்­துள்­ளார். இந்­நி­லை­யில், திரைத்­து­றை­யில் நீடிக்க வேண்­டும் என்­ப­தற்­காக தாம் கடி­ன­மாக உழைப்­ப­தா­கக் கூறு­கி­றார் ரகுல்.

"திரை­யு­ல­கில் எல்­லாமே நாம் விரும்­பி­ய­படி நடக்­காது. நிறைய கஷ்­டங்­கள் உள்­ளன. ஒரு படத்தை திரை­ய­ரங்­கு­களில் வெளி­யி­டு­வ­தற்கு படக்­கு­ழு­வில் உள்ள அனை­வ­ரும் கடு­மை­யாக உழைக்க வேண்­டி­யி­ருக்­கும். அந்­தக் கட­மையை நான் எந்­த­வித குறை­யும் இன்றி நிறை­வேற்றி வரு­கி­றேன்.

"எனக்­குப் பேய், திகில் படங்­கள் என்­றால் மிக­வும் பிடிக்­கும். அப்­ப­டிப்­பட்ட படங்­களை ஓடி­டி­யில் பார்க்­க­லாம். ஆனால் நல்ல கதை­யம்­சம் உள்ள படங்­களை கண்­டிப்­பாக திரை­ய­ரங்­கில் பார்க்­கத்­தான் நான் விரும்­பு­வேன்.

"வீட்­டில் அமர்ந்து திரைப்­ப­டம் பார்ப்­பது சுக­மான அனு­ப­வம்­தான். எனி­னும் திரை­ய­ரங்­கில் படம் பார்க்­கும் அனுபவத்­துக்­கும் பர­வ­சத்­துக்­கும் அது ஈடா­காது," என்­கி­றார் ரகுல் பிரீத்.

திரைத்­து­றை­யில் கடை­நிலை தொழி­லா­ளர்­கள் தொடங்கி தயா­ரிப்­பா­ளர் வரை ஒவ்­வொ­ரு­வ­ரும் எவ்­வ­ளவு பாடுபடு­கி­றார்­கள் என்பது தமக்கு நன்­றா­கத் தெரி­யும் என்று குறிப்­பி­டு­ப­வர், உதவி இயக்­கு­நர்­கள், ஒளிப்­ப­தி­வா­ளர்­கள், 'லைட் மேனா'க பணி­யாற்­றும் தொழி­லாளர்­கள் எல்­லாம் நாள்­தோ­றும் சுமார் 15 மணி நேரம் உழைப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

"ஒரு படத்தின் வெற்றிக்காக அனைவரும் கடுமையாக உழைக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு ரசிகரும் புரிந்து கொள்ள வேண்டும்," என் கிறார் ரகுல்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!