தேடி வந்த வாய்ப்பு: ஏற்க மறுத்த அமலா

'பொன்னியின் செல்வன்' படத்தில் அமலா பால் நடிக்க மறுத்த தகவல் இப்போது வெளியாகி உள்ளது. மேலும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் கடும் நிபந்தனைகள் விதித்ததாகவும் கூறப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பே அமலாவுக்கு 'பொன்னியின் செல் வன்' பட வாய்ப்பு தேடி வந்ததாம். நடிப்புத் தேர்விலும் பங்கேற்றார் அமலா.

"எனினும் உடனடியாக படப்பிடிப்பு தொடங்கவில்லை. அதன்பிறகு கொரோனா விவ காரத்தால் அப்படத்தின் பணி கள் முடங்கின. இந்நிலையில் கடந்த ஆண்டு மணிரத்னம் மீண்டும் நடிக்க அழைத்தபோது, நான் அதில் நடிக்கும் மன நிலையில் இல்லை. வாய்ப்பை இழந்ததற்காக நான் வருத்தப்படவில்லை," என்கிறார் அமலா.

'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் இவர் விதித்த நிபந்தனைகளைக் கேட்டு பதறிப்போன தயா ரிப்புத் தரப்பினர், அதன்பிறகு அமலாவை அணுகவே இல்லையாம்.

அந்த நிகழ்ச்சியைக் காடுகளும் மலைகளும் சூழ்ந்த பகுதியில்தான் நடத்தவேண்டும் என்றும் தாம் 'பிக்பாஸ்' வீட்டில் இருக்கும்போது பதிவாகும் காட்சிகளை எந்தவிதமான வெட்டும் இன்றி ஒளிபரப்ப வேண்டும் என்றும் கூறினாராம் அமலா. மேலும் குறிப்பிட்ட சில விதிமுறைகளை நீக்கவேண்டும் என்பதுடன் நாளொன்றுக்கு சில லட்சங்களைத் தரவேண்டும் என்றும் நிபந்தனை விதித்ததாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தெலுங்கு திரையுலகம் குறிப்பிட்ட சில குடும்பங்களின் பிடியில் இருப்ப தாகவும் அதன் காரணமாக தம்மால் அங்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் தெலுங்கு ரசிகர்கள் அமலாவை விமர்சித்து வருகின்றனர்.

அமலா பால்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!