ரஜினி மகள் ஐஸ்வர்யா 'ஓ சாத்தி சல்' என்ற இந்தி படத்தை இயக்க உள்ளார். அனிருத் இசையமைக்க, இப்படத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. '3' படம் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார் ஐஸ்வர்யா. அதில் தனுஷ், ஷ்ருதி ஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். பிறகு, 'வை ராஜா வை' படத்தை இயக்கிய அவர், அண்மையில் ஓர் இசைத்தொகுப்பையும் இயக்கி பாராட்டுகளைப் பெற்றார்.
தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ், தனது நூறாவது படத்தை விஜய்யை வைத்து தயாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. சௌத்ரியின் மகனும் நடிகருமான ஜீவா கூறுகையில், நூறாவது படம் குறித்து விஜய்யுடன் பேசியதாகவும் அவருக்கும் தங்களுடன் இணைந்து செயல்பட ஆர்வம் உள்ள தாகவும் குறிப்பிட்டார்.
விஜய்யின் திரை வாழ்க்கை யில், 'பூவே உனக்காக' மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. விக்ரமன் இயக்கிய அந்தப் படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதுமட்டுமன்றி 'துள்ளாத மனமும் துள்ளும்', 'லவ் டுடே', 'திருப்பாச்சி', 'ஷாஜகான்', 'ஜில்லா' என சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரித்த மற்ற படங்களும் விஜய்க்கு திருப்புமுனைகளாக அமைந்தன.
இனி திரையுலகில் மட்டுமே தாம் கவனம் செலுத்தப் போவதாக நடிகை வாணி போஜன் கூறியுள் ளார். தமது அண்மைய சமூக ஊடகப் பகுதியில், தாம் உஷாராகிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வாணி போஜன் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான நடிகர் ஒருவரை காதலிப்பதாகக் கூறப்படுகிறது. இருவரும் பல இடங்களில் சுற்றித் திரிவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன. வாணி போஜனை இயக்குநர்களால் எளிதில் அணுக முடியவில்லை என்றும் இதனால் பல நல்ல வாய்ப்புகளை அவர் இழப்பதாகவும் கோடம்பாக்கத்தில் முணுமுணுப்பு எழுந்தது. இந்நிலையில், "இனி எனக்கு சினிமாதான் முக்கியம். வேறு யாரும் கிடையாது," என வாணி தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
'பிகில்' படம் மூலம் பிரபலமான நடிகை வர்ஷா பொல்லம்மா சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். ரசிகர்களுடன் வெட்டித் தனமாக உரையாடுவதில் தமக்கு விருப்பம் இல்லை என்று கூறுபவர், அவ்வப் போது பொது அறிவுசார்ந்த பல கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு பதிலளிக்கு மாறு கேட்டுக்கொள்கிறார்.
எந்த கேள்விக்கும் ரசிகர்கள் பதிலளிக்க முடியவில்லையாம். அமெரிக்காவில் உள்ள
ஒரு வகை தேனி இந்தியாவுக்கு பறந்து வந்தால், அதன் பெயர் என்ன என்பதுதான் வர்ஷா எழுப்பியுள்ள அண்மைய கேள்வி.
சுமார் 32 ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீரில் திரையரங்கு கள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் அங்குள்ள மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், அத்திரையரங்குகளில் முதல் படமாக 'பொன்னியின் செல்வன்' திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
, :

