ஆசிரியையாக ஐஸ்வர்யா

'தீய­வர் குலை­கள் நடுங்க' என்ற தலைப்பே அனை­வரை­யும் யோசிக்க வைத்­தி­ருக்­கிறது. இது அறி­முக இயக்­கு­நர் தினேஷ் லெட்­சு­ம­ணன் இயக்­கத்­தில் ஐஸ்­வர்யா ராஜேஷ் கதை நாய­கி­யாக நடிக்­கும் படம். இதில் அர்­ஜுன் முக்­கிய கதா­பாத்­தி­ரத்தை ஏற்­றுள்­ளார்.

காவல்­து­றை­யில் நடக்­கும் சம்­ப­வங்­களை மைய­மாக வைத்து உரு­வா­கி­யுள்ள படம் என்றாலும், அத்­த­கைய படங்­கள் பின்­பற்­றும் வழக்­க­மான கட்­டுப்­பா­டு­கள், விதி­மு­றை­களைத் தாம் கண்டு­கொள்­ள­வில்லை என்­கி­றார் இயக்­கு­நர்.

"காவல்­துறை என்­றாலே நெஞ்சை நிமிர்த்­திக்கொண்டு, விறைப்­பாகச் செயல்­ப­டு­பவர்­கள் எனும் முடி­வுக்கு வந்­து­வி­டக்­கூ­டாது. அதை­யும் கடந்து பல விஷ­யங்­கள் உள்­ளன. அதை திரை­யில் காண்­பிக்க வேண்­டும் என்­ப­தற்­காக கடுமை­யாக உழைத்­தி­ருக்­கி­றேன்.

"மேலும் எனது முதல் படம் என்­ப­தால் மிகுந்த கவ­னத்­து­டன் செயல்­பட்­டி­ருக்­கி­றேன். படத்­தின் தலைப்பே சில விஷ­யங்­களைச் சொல்­லும் என நம்­பு­கி­றேன்," என்­கி­றார் தினேஷ்.

கதை­யைக் கேட்ட உட­னேயே நடிக்­கச் சம்­மதித்­து­விட்­டா­ராம் ஐஸ்­வர்யா. ஆட்­டி­சம் பாதித்த குழந்­தை­க­ளைக் கவ­னித்­துக்கொண்டு, படிப்­பும் சொல்­லித்தரும் கதா­பாத்­தி­ரத்­தில் சிறப்­பாக நடித்­துள்­ளாராம்.

"காவல்­து­றை­யி­ன­ரும் மனிதர்கள்­தான். அவர்­கள் பணி­பு­ரி­யும் இடம், ஒரு குற்­றம் நடந்­த­தைப் பார்க்­கும்­போது அவர்களின் மன­நிலை எப்­படி இருக்­கும், அப்­போது என்ன செய்­வார்­கள் என்று நமக்­குள் எழும் பல கேள்­வி­க­ளுக்­கான பதில்­களை, யதார்த்த நிலையை இப்­ப­டத்தில் இயல்­பா­கக் காண்­பித்­துள்­ளோம்.

"பரத் ஆசி­வ­கன் இசை­ய­மைத்­துள்­ளார். ஒரு திகில் படத்­துக்­கான இசையை கச்­சி­த­மாக வழங்கி இ­ருப்­பது படத்­தின் பலங்­களில் ஒன்­றாக மாறி­உள்­ளது.

"ஆசி­ரியை கதா­பாத்­தி­ரத்­தில் நடிப்­பது எளி­தல்ல. கொஞ்­சம் கவ­னம் சித­றி­னா­லும் இதற்கு முன்பு இதே வேடத்­தில் நடித்­த­வர்­க­ளின் சாயல் வந்­து­வி­டும். அல்­லது ஒரே மாதி­ரி­யாக நடிப்­ப­தாக ரசி­கர்­கள் குறை­கூ­றத் தொடங்­கி­வி­டு­வர்.

"இந்­தச் சமூ­கத்­தில் ஏரா­ள­மான பெண்­க­ளுக்கு தீர்க்க முடி­யாத பிரச்­சி­னை­கள் உள்­ளன. இந்நிலை­யில் ஆட்­டி­சம் பாதித்த பெண் குழந்­தை­களை எப்­ப­டிப் பார்த்­துக்­கொள்ள வேண்­டும், அவர்­க­ளின் பிரச்­சி­னை­கள் எப்­ப­டிப்­பட்­ட­தாக இருக்­கும் எனப் பல்­வேறு கேள்­வி­கள் எழு­கின்­றன.

"இவற்­றை­யெல்­லாம் மன­தில் சுமந்துகொண்டு நடை­போ­டும் ஒரு பெண்­ணின் செயல்­பா­டு­கள் எப்­படி இருக்­குமோ, அதை மன­தில் உள்­வாங்­கிக் கொண்டு மிக இயல்­பாக நடித்­துள்­ளார் ஐஸ்­வர்யா ராஜேஷ்.

"அவர் கதையை நகர்த்­திச் செல்­லும் பாங்கு அழ­கா­னது. எத்­த­கைய உணர்­வாக இருந்­தா­லும் அதை அப்­ப­டியே அள்­ளித்­தெ­ளிக்­கும் முகம் உள்ளது. அத­னால் பாந்­த­மாக நடித்­துள்­ளார்.

"ஆட்­டி­சம் பாதித்த பெண்­ணாக மும்­பை­யைச் சேர்ந்த அனிகா நடிக்க, சிவாஜி சாரின் மகன் ராம்­கு­மார், நடி­கர் விஷா­லின் அப்பா ஜி.கே.ரெட்டி, நடி­கர் கதி­ரின் அப்பா லோகு என்று பலர் அருமை­யான வேடங்­களை ஏற்­றுள்­ள­னர்.

"வீரம், வன்­மம், காதல், பழி­வாங்­கல் என்று எல்­லாமே காரண காரி­யங்­க­ளு­டன் கதை­யில் இடம்­பெற்­றுள்­ளன. இருட்­டான மனி­தர்­கள் மீது வெளிச்­சம் படவேண்­டும் என்று நினைத்­தேன், அது நடக்­கும்.

"அர்­ஜு­னைப் போன்ற எளிய மனி­த­ரைக் காண்பது அரிது. மூத்த நடி­கர் என்­றா­லும் எந்தவித பந்­தா­வும் பகட்­டும் இன்றி நெருங்­கிப் பழ­கு­வார். முதல் சந்­திப்­பி­லேயே தோளில் கைபோட்டு பேசி, நட்பு பாராட்­டி­னார்.

"அவ­ரைப் போன்ற அனு­பவ நடி­கர்­க­ளுக்கு நம் கதை மீது நம்­பிக்கை ஏற்­பட்­டு­விட்­டால் போதும், அதன் பிறகு கதா­பாத்­தி­ரங்­கள் உயி­ரோட்­ட­மாக மாறி­வி­டும்," என்­கி­றார் இயக்­கு­நர் தினேஷ் லெட்சுமணன்.

, :

 



ஐஸ்வர்யா

ராஜேஷ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!