‘கிக்’: குறுக்கு வழியில் செல்லும் இளையரின் கதையில் சந்தானம்

கன்­னட சினி­மா­வின் முன்­னணி இயக்­கு­ந­ரான பிர­சாந்த் ராஜ் இயக்­கும் தமிழ் படம் 'கிக்'. இதில் சந்­தா­னம் நாய­க­னாக நடிக்­கி­றார். அவ­ரு­டன் நாய­கி­யாக இணைந்­துள்­ளார் தான்யா ஹோப்.

மேலும், தம்பி ராமையா, பிர­மா­னந்­தம், செந்­தில், கோவை சரளா, மன்­சூர் அலி­கான், மனோ­பாலா, ஒய்.ஜி.மகேந்­திரா, மொட்டை ராஜேந்­தி­ரன், வையா­புரி உள்­பட பலர் நடிக்­கி­றார்­கள். அர்­ஜுன் ஜன்யா இசை அமைக்­கி­றார்.

கதா­நா­ய­க­னாக மட்­டுமே நடிப்­பது என சந்­தா­னம் தீர்­மா­னித்த பிறகு அவ­ரது படங்­களில் நகைச்­சு­வைக்கு முக்­கி­யத்­து­வம் குறைந்து­விட்­ட­தாக ஒரு தரப்­பி­னர் கூறி வரு­கின்­ற­னர். இந்த மனக்குறையைப் போக்­கும் வகை­யில் உரு­வா­கிறது 'கிக்'.

கன்­ன­டத்­தில் பல வெற்­றிப் படங்­க­ளைத் தந்­துள்ள பிர­சாந்த் ராஜ், கொரோனா நெருக்­கடி தீவிர­மடை­யும் முன்பே தமி­ழில் படம் இயக்க வாய்ப்­பு­கள் தேடி­வந்­த­ன­வாம். ஆனால் பெரிய வாய்ப்­புக்­காக காத்­தி­ருந்­த­தா­கச் சொல்கிறார் அவர்.

"எனக்கு நகைச்­சு­வைப் படங்­கள் என்­றால் மிக­வும் பிடிக்­கும். நான் இது­வரை இயக்­கி­யுள்ள பத்­துப் படங்­க­ளி­லும் காத­லும் நகைச்­சு­வை­யும் அதி­க­மாக இருக்­கும். வாழ்க்கை நமக்கு பல கஷ்­டங்­களை கொடுத்­த­படி இருக்­கும். நம்மை அதி­லி­ருந்து விடு­விப்­பது நகைச்­சு­வை­தான். இன்­றைக்­கும் சார்லி சாப்­ளி­னுக்கு இணை­யாக ஒரு­வரைக் கண்­டு­பி­டிக்­கவே முடிய வில்லை. வாழ்க்கை­யின் அனைத்து அம்­சங்களையும் நகைச்­சு­வை­யோடு பார்க்கத் தொடங்கி ­விட்­டால் நாம் எல்­லா­ருமே பல பிரச்­சி­னை­களில் இருந்து தப்­பி­வி­ட­லாம் என்று தோன்­றும்.

"நமக்கு உள்ள கஷ்­டம், துக்­கம், வறுமை, ஏழ்மை, சோகம் என அனைத்­தை­யும் மறந்து சிரித்து, மகிழ்ச்­சி­யா­கப் பொழுது போக வேண்­டும். அவ்­வாறு நினைத்து உரு­வாக்­கப்­பட்ட கதை­தான் இந்த 'கிக்' படம். இந்த படத்தை பொறுத்­த­வரை கிக் என்­றால் போதை அல்ல, நகைச்­சுவை," என்­கி­றார் பிர­சாந்த் ராஜ்.

விளம்­பர நிறு­வ­னத்­தில் பணி­யாற்­றும் சந்­தா­னம், வாழ்க்­கை­யில் வெற்­றி­பெற குறுக்­கு­வ­ழி­யில் செல்­ல­வும் தயா­ராக இருப்­ப­வர். அதே துறை­யில் வேலை பார்க்­கும் நாயகி தான்யா ஹோப் நேர்­மையை மட்­டுமே கடைப்­பி­டிக்க வேண்­டும் என நினைப்­ப­வர். இரு­வ­ரும் எலி­யும் பூனை­யு­மாக மோதிக்­கொள்­வது தான் இப்­ப­டத்­தின் கதை­யாம்.

சந்­தா­னத்தை எதற்­காக விரும்­பிப் பார்க்க வரு­வார்­களோ அதற்­கான எல்லா ஏற்­பா­டு­க­ளை­யும் கச்­சி­த­மா­கச் செய்­துள்­ள­தா­கச் சொல்­கிறது இயக்­கு­நர் தரப்பு.

"சந்­தா­னத்­துக்கு ஜோடி­யாக நடிப்­ப­வர்­களும் அவ­ருக்கு இணை­யாக தாக்­குப்­பி­டிக்க வேண்­டும். அவ­ரது 'பஞ்ச்' வச­னங்­களை எதிர்­கொண்டு சமா­ளிக்­கும் பக்­கு­வ­மான நடி­கர்­கள் இருந்­தால் போதும், படம் நிச்­ச­யம் வெற்­றி­பெ­றும்.

"இதை மன­தில் வைத்­துக்­கொண்டு திட்­ட­மிட்­டேன். இது­வரை சந்­தா­னத்­து­டன் நடிக்­கா­மல் இருந்­த­வர்­களை எல்­லாம் இப்­ப­டத்­திற்­குள் கொண்டு வந்­தேன்.

"எனது எதிர்­பார்ப்­பு­கள் எது­வும் வீண் போக­வில்லை. தர­மான படைப்பை உரு­வாக்கி உள்­ளோம் என்ற மன­நி­றைவு உள்­ளது," என்கிறார் பிர­சாந்த் ராஜ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!