திரைத் துளிகள்

 நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் மோகன் நடிக்கும் படம் 'ஹரா'. இதில் அவரது ஜோடியாக குஷ்பு நடிக்க உள்ளார். இதற்காக கடும் உடற்பயிற்சி மேற்கொண்டு தன் உடற்கட்டை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார் மோகன். எனவே அவருக்கு ஜோடியாக நடிக்கும் குஷ்புவும் உடல் எடையைக் குறைத்து இளமையாக காட்சி அளிக்கிறார். படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீ, விடுத்த கோரிக்கையை ஏற்று உடல் எடையைக் குறைத்தாராம் குஷ்பு. மிக விரைவாக எடையைக் குறைத்த குஷ்புவை இயக்குநர் பாராட்டி உள்ளார்.

 தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து நடிகர்கள் பாக்யராஜ், உதயா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

நடிகர் சங்கத் தேர்தல் குறித்து உண்மைக்குப் புறம்பான கருத்துகளைப் பரப்பி வருவதாகக் கூறி இருவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இது தொடர்பாக பாக்யராஜுக்கு நடிகர் சங்கம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

கே.பாக்யராஜ் தரப்பினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் சங்க உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், 'ஏன் உங்களை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கக்கூடாது' என நடிகர் சங்க நிர்வாகம் விளக்கம் கேட்டிருந்தது.

இந்த நிலையில், அவர் அச்சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க விதிகளின்படி அச்சங்கத்திற்கு எதிராக அதன் உறுப்பினர்கள் யாரும் செய்தி வாயிலாகவோ அல்லது உறுப்பினர்களுக்கு கடிதம் வாயிலாகவோ கருத்து தெரிவிக்கக்கூடாது என்பதைச் சுட்டிக்காட்டி, கே.பாக்யராஜும் உதயாவும் ஆறு மாத காலத்திற்கு சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் நாள் வசூல் ரூ.80 கோடியைக் கடந்துள்ள தாக அப்படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ்த் திரையுலகில் இதுவரை எந்தப் படமும் முதல் நாளில் மட்டும் இவ்வளவு பெரிய வசூலைக் கண்டதில்லை. இதனால் படக்குழு

உற்சாகம் அடைந்துள்ளது.

இந்தப் படம் ரூ.700 கோடி வசூல் காணும் என்ற எதிர்பார்ப்பு தயாரிப்புத் தரப்பிடம் உள்ளது. இந்நிலையில், முதல் நாள் வசூல் களைகட்டி இருப்பதால், மொத்த வசூலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!