பெற்றோருக்கு தேசிய விருதுப் பதக்கத்தை அணிவித்த சூர்யா

முதல் முறை­யாக தேசிய விரு­தைப் பெற்­றுள்ள சூர்யா, அதற்­கான பதக்கத்தை தனது தந்தை சிவ­குமா­ருக்­கும் தாய் லட்­சு­மிக்­கும் அணி­வித்து மகிழ்ந்­துள்­ளார். அப்­போது எடுக்­கப்­பட்ட புகைப்­ப­டம் சமூக ஊட­கங்­களில் பர­வ­லா­கப் பகி­ரப்­பட்டு வரு­கிறது.

சுதா கொங்­கரா இயக்­கத்­தில் சூர்யா நடித்த 'சூர­ரைப் போற்று' திரைப்­ப­டம் இம்­முறை ஐந்து விருது­க­ளைக் குவித்­துள்­ளது. சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த நடி­கர், சிறந்த திரைக்­கதை, சிறந்த பின்­னணி இசை ஆகிய ஐந்து பிரி­வு­க­ளின் கீழ் இப்­ப­டத்­திற்கு விரு­து­கள் வழங்­கப்­பட்­டன.

இந்­நி­லை­யில், டெல்­லி­யில் நடை­பெற்ற விருது வழங்­கும் நிகழ்­வில் கலந்­து­கொண்டு அதி­பர் கையால் தேசிய விருதை பெற்­றுக்­கொண்­டார் சூர்யா.

அவர் பட்டு வேட்டி சட்டை அணிந்து வந்து விருதை பெற்­றுக்­கொண்­டார். அவ­ருக்கு வாழ்த்­து­கள் குவிந்து வரு­கின்­றன.

சிறந்த படத்­திற்­கான விருதை இப்­ப­டத்தை தயா­ரித்த 2டி நிறுவனம் சார்­பில் நடிகை ஜோதிகா பெற்­றுக்­கொண்­டார்.

இதற்­கி­டையே, தமது சமூக ஊட­கப் பதி­வில், "இயக்­கு­நர் சுதா­வுக்கு எப்­போ­தும் கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன். இந்த விருது என் அன்­பான ரசி­கர்­க­ளுக்கு உரித்­தா­னது," எனக் குறிப்­பிட்­டுள்­ளார் சூர்யா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!