‘விண்ணிலிருந்து மண்ணுக்கு’

விமா­னப் பணிப்­பெண் வேலையை உத­றி­விட்டு திரை­யு­ல­கில் கால்­ப­தித்­துள்­ளார் அஞ்­சனா. சிம்­பு­வின் 'மாநாடு' படத்­தில் 'மெக­ர­சைலா...' என்ற பாடலுக்­காக முக்­காடு அணிந்து வந்து இளம் ரசி­கர்­களை தூங்­க­வி­டா­மல் செய்­த­வர் இவர்.

வெங்­கட் பிரபு இயக்­கத்­தில் 'விக்­டிம்' இணை­யத் தொடரி­லும் அதற்­கு­முன் 'சென்னை 28' இரண்­டா­வது பாகத்­தி­லும் நடித்­தி­ருந்­தார்.

இப்­போது சுந்­தர்.சி. இயக்கும் 'காபி வித் காதல்' படத்­தில் இவர்­தான் நாயகி. நயன்­தாரா, கீர்த்தி சுரேஷ் வரி­சை­யில் அஞ்­ச­னா­வும் மலை­யாள தேசத்­தில் இருந்து கோடம்­பாக்­கத்துக்கு வந்­துள்­ளார்.

"விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்துள்ள புது நாயகி எனலாம். அனைத்­து­லக விமான நிறு­வ­னத்­தில் விமா­னப் பணிப்­பெண்­ணா­கப் பணி­யாற்றி வந்­தா­லும் மன­துக்­குள் சினிமாமீதான ஆர்­வம் குறைந்­ததே இல்லை. சிறு வயது முதலே சினிமா கன­வு இருந்து வந்­தது எனில் அதில் ஆச்­ச­ரி­யப்­பட ஒன்­று­மில்லை.

"ஏனெ­னில் என் தந்தை சினிமா படத்­தொ­குப்­பா­ளர். அம்மா நடி­கை­யா­கப் பெயர் பெற்­ற­வர். மலை­யா­ளத் திரை­யு­ல­கில் இரு­வ­ரை­யும் தெரி­யா­த­வர்­கள் இருக்க முடி­யாது.

"பெற்­றோர் கலைத்­து­றை­யில் இருந்­தா­லும் நான் நடி­கை­யா­வதில் இரு­வ­ருக்­குமே விருப்­பம் இல்லை. அத­னால்­தான் விமா­னத்­து­றை­யில் பணி­யாற்றி வந்­தேன். அதன்பிறகு உல­கெங்­கும் பல்­வேறு நாடு­க­ளுக்குச் சென்று வந்­துள்­ளேன்.

"அந்­த நேரத்­தில் பணி­யில் முழு ஈடு­பாடு காட்­டி­னா­லும், ஒரு கட்­டத்­தில் என் ஆசையைக் கைவிட முடி­யாது என்­பதை உணர்ந்­தேன். இனி நான் முழு நேர நடி­கை­யாக இருக்­கவே விரும்­பு­கி­றேன் என்று உறு­தி­யாக அறி­வித்­து­விட்டு, பெற்­றோ­ரின் ஆத­ர­வு­டன் நடிக்க வந்­து­விட்­டேன்," என்று சொல்­லும் அஞ்­சனா, தொடக்­கத்­தில் நடித்த ஒன்­றி­ரண்டு படங்­கள் சரி­யாக ஓட­வில்­லை­யாம்.

அதன் பிற­கு­தான் இயக்­கு­நர் வெங்­கட் பிரபு அழைத்து வாய்ப்பு அளித்­துள்­ளார். அவ­ரால்­தான் தமிழ்த் திரை­யு­ல­கில் தமக்­கான அங்­கீ­கா­ரம் கிடைத்­தது என்­கி­றார் அஞ்­சனா. "எனி­னும் 'சென்னை 28' படம் வெளி­யான பின்­னர் சில காலம் சொல்­லிக்­கொள்­ளும்­ப­டி­யான வாய்ப்­பு­கள் ஏதும் அமை­ய­வில்லை. தக­வல் தொடர்­பில் ஏற்­பட்ட கோளா­று­களும் இதற்­குக் கார­ணம். அத­னால் எனக்­குக் கிடைக்க வேண்­டிய சில நல்ல வாய்ப்­பு­கள் கைந­ழு­விப்­போ­யின. அது­கூட எனக்­குத் தெரி­ய­வில்லை. 'ஆர்.கே.நகர்', 'மாநாடு' போன்ற படங்­களில் இரண்­டா­வது நாயகி என்று சொல்­லும் அள­வுக்கு நல்ல கதாபாத்­தி­ரங்­களில் நடிக்க வைத்­தார் வெங்­கட் பிரபு," என்று நன்­றி­யு­டன் குறிப்­பி­டு­கி­றார் அஞ்­சனா.

'மாநாடு' படம் வெளி­யா­ன­தும் நிறைய பேர் தொடர்­பு­கொண்டு பாராட்­டி­னார்­க­ளாம். அந்­தப் படத்­தில் நடித்­த­போது­தான் சிம்­பு­வின் எளி­மை­யான குணா­தி­ச­யத்தை அரு­கில் இருந்து பார்க்க முடிந்­தது என்­கி­றார்.

"சிம்பு பழ­கு­வ­தற்கு மிக­வும் இனி­மை­யா­ன­வர். உடன் நடிக்­கும் கலை­ஞர்­களை வெகு­வாக ஊக்­கப்­ப­டுத்­து­வார். 'இந்­தப் படத்­துக்­குப்­பி­றகு உங்களுக்கு நிறைய இயக்­கு­நர்­கள் வாய்ப்பு தரு­வார்­கள். இது நடக்­கும்' என்று சொல்லி எனக்கு நம்­பிக்­கை­யூட்­டி­னார்.

"படப்­பி­டிப்­பின்­போது பெரும்­பா­லும் சிம்பு, பிரேம்ஜி, கரு­ணா­க­ரன், நான் நான்கு பேரும்­தான் அதிக நாள்­கள் இணைந்து நடித்­தோம். அப்­போது நாங்­கள் அடிக்­கும் அரட்­டைக்கு அளவே இருக்­காது. இயக்­கு­நர் அழைத்­த­தும் மற்ற மூவ­ரும் நடிப்­ப­தற்கு தயா­ரா­கி­வி­டு­வார்­கள். ஆனால் நான்­தான் சிரிப்பை அடக்க முடி­யா­மல் தவிப்­பேன்.

"எப்­படி நம் உணர்­வு­களைக் கட்­டுக்­குள் வைத்­தி­ருக்க வேண்­டும் என்­பதை சிம்­பு­வி­டம் கற்றுக்கொண்டேன். இயக்குநர் வெங்­கட்­பி­ரபு அனைத்து கலை­ஞர்­க­ளுக்­கும் முழு சுதந்­தி­ரம் அளிப்­பார். எல்­லோ­ரை­யும் கல­கலப்­பாக வைத்­தி­ருப்­பார். அவ­ருக்கு கோபம் வந்து நான் பார்த்­ததே இல்லை," என்­கி­றார் அஞ்­சனா.

தற்­போது ஷாம், ஸ்ரீகாந்த் நடிக்­கும் 'டிரெய்­னர்ஸ்' படத்­தில் நடித்து வரும் அஞ்­ச­னா­வுக்கு அதில் காவல்­துறை அதி­காரி வேட­மாம். அறி­முக இயக்­கு­நர் பாலா­வின் இயக்­கத்­தில், நாய­கியை முன்­னி­லைப்­ப­டுத்­தும் 'அறம் செய்' படத்­தில் இவர்­தான் நாயகி.

"இந்­தப் படங்­கள் வெளி­யா­ன­தும் என்­னைப் பற்றி ரசி­கர்­கள் அதி­கம் பேசு­வார்­கள். இயக்­கு­நர் பாலா எனது அறி­மு­கக் காட்­சியை அசத்­த­லாக அமைத்­துள்­ளார்.

"எனது தாய்­மொழி மலை­யா­ளம் என்­றா­லும் தமி­ழில் சர­ள­மா­கப் பேசு­வேன்," என்­கி­றார் அஞ்­சனா.

, :

  

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!