‘சிறுவர்களுக்கான படம்:’ ரசிகர்கள் கண்டனம்

இந்­தி­யில் வெளி­யான 'தன்­ஹாஜி: தி அன்­சங் வாரி­யர்' என்ற படத்தை இயக்கி, தேசிய விருது பெற்­ற­வர் ஓம் ராவத். இவ­ரது இயக்­கத்­தில் ராமா­ய­ணக் கதை­யைத் தழுவி உரு­வாகி இருக்­கும் படம் 'ஆதி­பு­ருஷ்'. இந்­தப் படத்­தில் நாய­

க­னாக பிர­பாஸ் நடித்து இருக்­கி­றார். படத்­தின் முன்­னோட்­டக் காட்சி இம்­மா­தம் 2ஆம் தேதி ராமர் பிறந்த அயோத்­தி­யில் வெளி­யா­னது. அதைப் பார்த்த அவ­ரின் ரசி­கர்­கள் 'படம் சிறு­வர்­கள் பார்க்­கும் கேலிச்­சித்­தி­ரம்­போல இருக்­கிறது' என்று வருத்­தம் தெரி­வித்து வலைத்­

த­ளங்­களில் பதி­விட்டு வரு­கின்­ற­னர்.

இந்­தி­யா­வின் பல மொழி­களில் வெளி­யா­க­வி­ருக்­கும் இப்­ப­டத்­தில் கதை­யின் நாய­கன் ராம­ராக 'பாகு­பலி' புகழ் பிர­பா­ஸும் அவ­ருக்கு ஜோடி­யாக சீதை­ வேடத்தில் கீர்த்தி சனோ­னும் பாலி­வுட் நடி­கர் சைஃப் அலி­கான் இரா­வ­ண­னா­க­வும் நடித்­தி­ருக்­கி­றார்­கள்.

பிர­பாஸ் நடித்­தி­ருந்த அண்­மைய இரண்டு படங்­கள் படு­தோல்வி அடைந்­த­தால் பிர­பா­ஸும் அவ­ரின் ரசி­கர்­களும் 'ஆதி­பு­ருஷ்' படத்தை பெரி­தும்

நம்பியுள்ளனர்.

இப்­ப­டத்­தின் முன்­னோட்­டக் காட்சி கணினி விளை­யாட்­டில் வரும் கதா­பாத்­தி­ரங்­க­ளைப்­போல காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தும் மோச­மான உயி­ரோ­வி­யக் காட்­சி­களும் கல­வை­யான விமர்­ச­னங்

­க­ளைப் பெற்று வரு­கிறது. பிர­பா­ஸின் ரசி­கர்­களும் இயக்­கு ­நர்­மீது கடும் கோபத்­தில் இருக்­கின்­ற­னர்.

பல ரசி­கர்­கள் படத்­தின்

காட்­சி­க­ளைக் கிண்­ட­லாக வலைத்­த­ளங்­களில் பகிர்ந்து வரு­கின்­ற­னர். 'பாகு­பலி' படத்­தில் நடித்த பிர­பாஸ் இப்­படி ஒரு தர­மற்ற படத்­தில் நடித்­தி­ருக்­கக்­

கூ­டாது என்ற கருத்­து­க­ளை­யும் தெரி­வித்து வரு­கின்­ற­னர். சமூக வலைத்­த­ளங்­களில் கேலி செய்­யப்­பட்­டா­லும் இது­கு­றித்து படக்­குழுவினர் இதுவரை எந்தப் பதிலும் அளிக்­க­வில்லை.

இதற்­கி­டை­யில் முன்­னோட்­டக் காட்சி நிகழ்ச்­சி­யின் காணொ­ளி­யில் பிர­பாஸ் கோப­மாக இயக்­கு­நர் ஓம் ராவத்தை, "என் அறைக்கு வாருங்­கள்," என்று கூப்­பி­டும் காட்சி சமூக வலைத்­த­ளங்­களில் பர­வி­யது. "பிர­பாஸை இவ்­வ­ளவு கோப­மாக நாங்­கள் பார்த்­த­தில்லை. அவர் இயக்­கு­நரை கண்­டிக்­கத்­தான் அறைக்கு அழைத்து இருக்­

கி­றார்," என ரசி­கர்­கள் கருத்து தெரி­வித்து வந்­த­னர்.

"சல­ச­லப்­புக்கு மத்­தி­யில் படத்­தின் விளம்­ப­ரங்­க­ளைப் பற்றி விவா­திப்­ப­தற்­கா­க­வும் தனது ரசி­கர்­க­ளுக்­காக இன்­னும் சிறப்­பாக ஏதா­வது செய்­ய­வேண்­டும் என்று பிர­பாஸ் ஆலோ­சனை நடத்­து­வ­தற்­கா­கத்­தான் இயக்­கு­ நரை பிர­பாஸ் அறைக்­குள் அழைத்­தார்," என்று அவ­ரின் நெருக்­க­மான வட்­டா­ரங்­கள் தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளன.

பிரபாஸ் நடித்திருக்கும் 'ஆதிபுருஷ்' படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!